

எனது பள்ளி தோழியின் வாழ்க்கை இது .
வெகு நீண்ட கால பிரிவுக்கு பின் பள்ளி அலுமினியில் கூடி சந்தித்து களிப்புற்றோம்.
பின் அந்த பள்ளி தோழியின் வாழ்க்கை பயணத்தில் மிக முக்கியமான நிகழ்வுகளை அவள் பெங்களூரிலிருந்து ஒரு நாள் அலைபேசியில் நீண்ட நேரம் என்னோடு பகிர்ந்துக் கொண்டாள்..
அதனை என் மனதில் வாங்கியதை நெடிய கவிதையாக எழுதியுள்ளேன்.
மத்திய அரசின் உயர் பள்ளியில் உயர் பதவி வகித்து இன்றும் பெங்களூரில் தன் கணவரோடு வசித்து வருகிறாள்.
நீண்டகதை அல்ல...
வாழ்ந்துகொண்டிருக்கும் காவியம்..
நிச்சயம் Positive vibe தரும்.
கஷ்டங்கள் ஏன் உனக்கு மட்டும் அதிகம் பெண்ணே?
அது இறைவனின் விருப்பமா?
இல்லை..
அது கரும வினையா?
எதுவாயினும்...
அது எல்லோருக்கும் உண்டு..
நீ மட்டுமே அதை பெரும் சவாலாக ஏற்றாய்!
யாருக்கும் கிடைக்காது..
இது
உனக்கு மட்டுமே கிடைத்த வரம்..
நீ...
மாய'வரம்' வாங்கி வந்ததால்
கஷ்டம் கூட உன்னால்
கஷ்டப்பட்டது.
உன் கஷ்டம் உன்னோடு..
உன் வேதனை உன்னோடு..
பிறர்...
உதவாவிட்டாலும்..
உன் மனோபலம்
உன்னை வாழ வைத்தது..
உன்னால் மட்டுமே
முடியும் என்ற
உந்துதல் சக்தியை
உனக்குள்
தந்திருக்கிறது.
அது நன்கு
வாழ தகுதியையும்
கூட தந்திருக்கிறது!
வயதில் கிடைத்த
பல அனுபவங்களே
வயோதிகத்தில்
ஆனை பலம்
தந்து கொண்டிருக்கிறது!
எதையும் உன்னால் தாங்கி கொள்ள
முடியுமென நீ பிறக்கையில்
அவன் எடுத்த முடிவு!
நீ சில வாலிப கனவுகளை-
அன்று தொலைத்
திருந்தாலும்... நீ
விரும்பியது உன்னை தேடி வந்தது..
பதவிகள் உன்
கூர்மதி திறமையில்
பிரகாசித்தன.
சாதாரண நகர்புறம்
சிறு காவிரி கரை
வாழ்ந்த தமிழச்சி
பெற்றுவிட்டாள் ஓர் எழுச்சி..
நட்பும் சுற்றமும் பெற்றன மகிழ்ச்சி..
இது ஒரு பெண்ணின் கதை..
நம்மில் வாழும் ஓர் சாவித்திரியின் கதை..
பூ ஒன்று புயலான கதை
ஊர்குருவி மேகத்தை தொட்ட கதை..
பெண் மதிப்பிடமுடியா சக்தி என நிருபித்த கதை..
பஞ்சு ஒன்று தீயையே
தீக்கிரை ஆக்கிய கதை.
அவள்...
மனதாலும்.. தேகத்தாலும்..
சக்தியாலும்..
பூசப்பட்ட மென்மைக்கு
சொந்தக்காரி..
காவிரி சிற்றாராய்
பாயும் டெல்டா பகுதி..
நீர் நிலைகளும் வயல்களும்
பச்சை கம்பளம் விரித்து காவிரியின் செழுமையை
பறை சாற்றும் தஞ்சை
வளநாட்டின்
ஓர் பகுதி.
மாயவரம்.... பேசிட
பார்த்திட ஆயிரம் கவிதை
மனதினில் தோன்றும்..
குடும்பத்தில்
பஞ்ச பாண்டவரில் நம் நாயகி இடைக்குட்டி..
குடும்பத்தில் வருவோர் போவோருடன் வேளை ஒன்றுக்கு
25 பேர் சாப்பிட அவர் தந்தை அரசரா? இல்லை... ஆசான்!
அவர்
ஆசிரியர்.
நல்ல கௌரவமான குடும்பம்..
ஆசிரியரோ.. தன் வருமானத்துக்கு ஏற்ற வகையில் தன் மக்களுக்கு படிப்பு பயிற்பித்து கல்லூரியில் படிக்க வைத்தார்..
நம் சாதனை நாயகி,
சாதாரண மாணவி..
தன் வயதில் எதிர்,
அடுத்த வீட்டு தன் ஒத்த வயதுடைய பள்ளி நண்பரை கூட ஏறெடுத்து காணாத கன்னி மகள்.
அதட்டி பேசினால் கண்ணீர் வீடும் கோழை மகள்..
இவளா?
இனி சாதனை செய்யபோகிறாள்?
இந்த பூ மனதிற்க்குள்
எப்படி பூகம்பம் உண்டானது?
வீடுபள்ளி தவிர
ஏது மறியா உலகம்
அவளது.
பள்ளி முடிந்தது.
புதுமுக வகுப்பு..
நிச்சயம் புதுமுக வகுப்பாக தான் இருந்தது..
புதிய கல்லூரி..
புதிய முகங்கள்
புது தோழிகள்
அறிமுக மில்லாவிட்டாலும்
அது.. ஏதோ உள்
மாற்றத்தை அவளுக்குள் தந்திருக்க வேண்டும்.
வயதில் முன்னேற்றம் சுமாரான படிப்பு.
70%க்கு குறையாது தேர்ச்சி.
இளங்கலை அழைத்தது.
அது புது இடங்களை அழைக்க போவது தெரியாமல்.
சிறந்த வரலாறு படைக்க போகிறவளுக்கு..
இளங்கலை தமிழ் வரலாறு கிடைக்க இருக்க..
அவள் மனதினில் ஏதோ தீர்க்கம்..
சொல்ல தெரியாத
தாக்கம்.
அன்று அவள் வாயிருந்தும் ஊமை..
அவள் மனதினில்
என்றுமே தூய்மை..
அவள் வீட்டிலோ...
இதுவே பெண்களுக்கு படிப்பு அதிகம்..
செலவிடுவதும் கடினம் என அடித்துக் கூறவும்,
மேலும் மேலே
படிக்க படிக்க மாப்பிள்ளை கிடைப்பதில் சிரமம் என சொல்லிவிட்டார்கள் பெற்றோர்கள்..
தன் கனவுகள் நசுக்கப்படுவதை உணர்ந்தாள் அவள்.
மத்திய அரசு கல்லூரியில் வெளி மாநிலத்தில் கல்வியியல் இணைந்த இளங்கலை இலவசமாக கிடைக்க கல்விதான் இலவசம்.
ஆனால், உண்டி உறைவிடம்..?
மாதம் ரூ 75/தான் அன்றைய
தினங்களில்
(1975களில்)..
படித்து தேர்வாகி அங்கேயே பணியில் அமர்ந்தால் உதவி தொகை..
இல்லையெனில் காசோ
தெரியாத வகை.
தமிழின்றி வேறு மொழியறியா மங்கை..அந்த
சிறப்பான வாசனை முல்லை..
சீராக வளர்ந்த பிள்ளை..
அடைந்ததோ ஆனந்தத்தின் எல்லை..
நல்ல இடமிது என
அறிந்த பெற்றோர்
மனதிலும் கவலை இல்லை..
அந்த முதல் வருடம் முடிவில்
மதிப்பெண் இல்லை எனில்..
தோகை அவளுக்கு
உதவி தொகையும் இல்லை!
சாதிக்க நினைத்தவளுக்கு
திருப்பு முனை இங்கே!
அன்று உள்ளூர் நண்பிகளுடன்
பழகியவளுக்கு..மாநிலம் தாண்டிய
இந்திய நட்புகள்..
புரியாத பாடங்கள் பல புரிந்தன..
தெரியாத மொழிகள்
சில தெரிந்தன..
மன மாற்றமே சரியான
இலக்கை நோக்கி பாய..
அப்பாவி அவள்..
படித்து தேறி
பலர் மூக்கில் விரல் வைக்க வைத்தாள்.
ஆண்டுகள் நான்கும் அழகாய் நகர்ந்தன..
கல்லூரி சாலை அவள் நடப்பதற்கான பாதைகளை சரியாக
கற்று தந்தது..
அந்த வாளையும் குமரியாக..
பாடங்களும்
ஆடைகளும் அவளை அழகாய் மாற்றின..
கல்லூரி முடிந்து
காவிரி பிறந்த மண்
காவிரி சங்கம நகருக்கருகே மீண்டூம் நம்பிக்கை
மனுஷியாக
திருப்பி அனுப்பியது.
தாய் வீடு திரும்பியவளுக்கோ
போகவில்லை பொழுது..
தகுதிக்கேற்ற
பணிக்கு தேட
விட்டாள் பல தூது.
பதிலேதும் வராததில்
எங்கே நடந்தது பழுது?
மனம் நொந்து
கண்ணிரண்டும் வீங்கின அழுது.
நிரந்தர பணி தரும்
பணி நிறைவுக்கு மனம் ஏங்க ...
நாட்டின் வடகிழக்கு மாகாணம் ஒன்றில்..
4000கிமீ தள்ளி..
இந்தியாவின் ஒதுக்கப்புற ஊர்.
இமயமலை அழகை கொட்டி சிரிக்க..
இயற்கை அன்னை
பரந்து விரிந்த இடம்..
திருவண்ணாமலை கூட அறிந்திராத நங்கை..
பயணமானது
அருணாசல பிரதேசம்
நோக்கி!
அவளை அன்போடு அரவணைக்க ... சென்றாள் தந்தையுடன்..
அன்று அது ஒரு வார
புகைவண்டி பயணம்.
திக்திக் பயணம்
பல மாநிலங்கள்
பல நதிகளை தாண்டி!
காவிரி தீர மங்கை
பிரம்மபுத்திர தீர மங்கை ஆனாள்.
அங்கே...
அ சொல்ல ஆள் இல்லை.
அனைத்துமே அஸ்ஸாமி மொழி.
ஓரிரு மலையாள தோழிகள்..
தொலைதூரத்தில் தான் ...
நம் மொழியின்
நம் அருகே மாகாணத்தின் அருமை பெருமை
புரிகிறது..
அவளுக்கு நிரந்தர பணி -அன்று கைநிறைய காசு.
தந்தையோ..
அவள் மிகத்தொலைவில்
தனித்தீவாய் இருப்பதால்..
மனதினில் வீட்டில்
வருத்தப்பட...
அருணாசல பிரதேசம்
சிறிய மாநிலம்.
அதில்..
இந்துக்களுக்கு
மிகத்தனி மரியாதை..
"நான் இந்துவா?
இல்லை Convert ஆனவளா?.
ஏனெனில் அங்கு நிலை மிக மோசம்.
எனக்கு அந்த திங்கள் அன்று இறுதி நேர்முக தேர்வு..
இன்று என்ன கிழமை?
திங்கள்
இது எந்த கடவுளுக்கு உரியது?
சிவனுக்குரியது..
சிவஸ்தோத்திரம் எதனும் கூறுவாயா?
பிரம்ம முராரி லிங்க பாடல் (அன்று பக்கத்து வீட்டுபாட்டு டீச்சர் சொல்லித்தர..விளையாட்டாய் அதனை கற்று சிறுவயது மனப்பாடமானது) ராகமுடன் அரங்கேற..
சிவனருளால்...அருணாசலம் ..அவர் தடம் வைக்க வழி செய்தது."
நாளடைவில்
அஸ்ஸாமியும் பெங்காலியும்..
தமிழ் பேச ஒரு நபர்
கூட அருகே
இல்லாததில் அலுத்துப்போய்
எனக்கு தாய்மொழி ஆயின.
மலைத்தொடர்களும்
பனிச்சாரலும்
வளமான பூமியும்
இயற்ககையின் அரவைணைப்பும்
அதிக சம்பளமும்
அதீத நண்பிகளும்
என்னை
உடை நடை மொழி
என
சகலவிதத்தில் மாற்றின.
பிடித்த ஆசிரிய பணி.
பிடிக்காத ஆசைகளை என்
புறம் தள்ளியது.
ஆண்டுகள்
ஒன்று கரைய..
சம்மந்தமே இல்லா இடத்தில் உள்ள
மகளுக்கு
சம்பந்தம் பேச முற்பட்டனர்..
பெற்றோர்!
சீனா பார்டர் அருகில் இருநாள் அருணாசலபிரதேச K.V பள்ளிகளின் ஸ்கவுட் விழா..
இருநாட்கள்.
அவள் கலந்து கொள்ள போயிருந்தாள்.
அது எதிரிகளின்
வெடி சத்தம் கேட்கும்
தூரப்பகுதி.
ஆனாலும்
அவ்வப்போது தவழும் அமைதி.
நல்லதொரு நாளில்...
அப்போது நடந்த கலாசார விழாவில்
அவன் 27 வயது வாலிபன்..
கணிதம் அவனுக்கு
புனிதம்..
ஆசிரியராய் வாழும்
பணிதாம்.
பாடினார் மலையாளத்தில்
ஓர் பாட்டு..
நம்மவள் போட்டிக்கு
தயாராகி பெங்காலி
நடனம் ஆடி பாட..
இறுதியில் இருவருமே தமிழ் இனம்
என தெரிந்து கொண்டது..
இருவரும் வெவ்வேறு இடங்களில்..
பாஷைகளை பரிமாறிக் கொள்ள
தொலைபேசி இருந்ததில்லை..
இருவரும் தத்தம்
இடம் ஊர் என
நேரிலே தகவல்
பரிமாற்றம்..
தமிழ் என மகிழ்ச்சி.
சில மாதங்களில்..
தன் ஊருக்கு
நாயகி அவர்
விபரங்களை
தபாலில் அனுப்ப..
அவர்
உறவினரே நேரில் சென்று பேச...
தவித்துக் கொண்டிருந்த
நாயகி
பெற்றோர்களுக்கு
வயிற்றில் சேதி
பால் வார்த்தது..
பின்பு
திருமணம் பேசி
ஊர் சேர்ந்தது..
இருவரும் ஓரினம்.
இருவரும் ஓரிடம்..
நான்காண்டுகளில்
தாம்பத்ய பரிசாக
மகன் ஒன்று
மகள் ஒன்று..
மனமொத்த தம்பதியர்
முதுகலை படிப்பு ஒன்றாய் படிக்க
முயல...
அவரோ..
தான் முதலில் படித்து
பட்டம் வாங்க நினைத்தார்..
மனைவியோ அதற்கு
விட்டு கொடுத்தார்.
மகன் 4ம்
மகள் 2ம் ஆக
அகவை கூட
கல்வி கேள்விக்குறி
ஆனது..
5 ஆண்டிற்க்கு பின்
சென்னைக்கு
வந்தது
அவளின் பணி மாற்றம்..
கணவனுக்கோ இல்லை இடமாற்றம்..
இனி மேல்தான்
ஏமாற்றம்..
கைகுழந்தைகளோடு
வந்தாள் சென்னை
சற்று உதவிக்கு வந்தாள் அவள் அன்னை.
நாயகன் அவன் தனிமையில்..
அருணாசலத்தில்!
நாயகியோ
ஆவடியில்..!
ஆனால்
இருவரும் ஒரே வெவ்வேறு
மத்திய பள்ளிகளில்..
வெவ்வேறு மாநிலங்களில்!
தொலைவு 3500கீமீ
அவர்களை
அலைய வைத்தது!
வருட ஒருமுறை
நேர் பரிமாற்றம்!
மற்றவை
தகவல் பரிமாற்றம்..
தலைவரோ...
முதுகலையை
ஒரு தலையாய் காதலிக்க..
காலங்கள் கடந்தது..
நாயகி தனிமையை
மறக்க..
முதுகலை பட்டம்
அண்ணாமலை
தொலைகல்வியில் பயில..
ஐந்தாண்டுகளில்
பட்டம் பெற..
நாயகரும்
ஓர் வழியாய் முடித்தார்.
குழந்தைகள் வளர
கல்லூரி வாழ்க்கை..
மாணவியாய்
ஆசிரியராய்
தாயாய்..
குடும்பத் தலைவியாய்
எத்தனை அவதாரங்கள்!
மகன் கோவை கல்லூரியில் படிக்க..
புதிய வேலைமாற்றம்
பெங்களூருக்கு..
சிறந்த பள்ளியில்
மிகச்சிறந்த ஆசிரியை விருதுகள்
பலமுறை..
எண்ணிலும்
எழுத்திலும் அவர்
காட்டியது அதிக அக்கறை..
இவரிடம் படித்தவர்களோ
சேர்ந்தனர்
அக்கரை..
இவர் எடுக்கும் பாடங்களோ
மாணவர்க்கோ
இனிக்கும் சக்கரை!
இதன் பரிசு...
இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட
ஐவரில் ஒருவராய்
மாஸ்கோவில்
மூன்றாண்டு பணி..
இது இந்த ஆசிரிய
வேலைக்கு கிடைக்கும்
உயரிய கௌரவம்..
ஊர் கடந்து
மாவட்டம் கடந்து
மாநிலங்கள் கடந்தவள்..
கல்லூரி முடித்த
மகளுடன்
மாஸ்க்கோ பயணம்.
ரஷ்ய தலைநகர்
தூதுவர்கள் பிள்ளைகள்
பயிலும்
ஆங்கிலவழிக் கல்வி
நயம்பட உரைத்ததில்
பன்னாட்டு தூதுவர்களின்
பாராட்டும் நட்பும்.
கணவரும்
ஒரு மாத ஓய்வில்
வந்தார் மாஸ்கோ
ஐரோப்பிய ஊர் சுற்றி
சென்றார் அவள்கோ!
மகன்.. கோவையில்
மகள் தன்னோடு
கணவன் ஓரிடம்..
அடுத்த ஆண்டு கழிய
கணவனுக்கும் பெங்களூரில் வேறு ஆசிரிய பணி கிடைக்க..
நாயகி மாஸ்கோவில்..
பதி சதி சேரவிடாது
விடாது துரத்தியது விதி..
மகனுக்கு.
பொறியாளர் வேலை.
தந்தைக்கோ..
பெங்களூர் வேலை..
தாயும் மகளும் ரஷ்யாவில்..
முக்கோண காதல் கதையை மீறிய
முக்கோண பிரிதல் கதை இதுவே முதல் முறை.
அவரும்
பெங்களூர் புகழ்மிகு
பள்ளியில்
கீர்த்தி பெற்று விளங்க..
இவரோ..
ரஷியமொழி கற்று
நல்லாசிரியை விருது
பல பெற்றுக் கொண்டிருக்க...
இரண்டறை ஆண்டு
துவக்கம்..
தன் மகன் மகளோடு
ஐரோப்பா டூர் ஏற்பாடு செய்ய...
மகன் மாஸ்கோ வந்திறங்க...
பெங்களூர்..
பணியில் இருந்த ஆசிரியர் Brain hemorrhage ஆகி பள்ளியில் மயங்கி விழ..
பெரிய மருத்துவமனை அறிவித்தது
கோமா ஸ்டேஜ்..
அலை பேசி இல்லா நேரம்..
எப்படியோ..
கனராவங்கியியில்
அவர் தங்கையை கண்டுபிடித்து
மறுநாள்
மாஸ்கோ விபரம் சேர..
தூதுவ அலுவலக உதவியால்
ஓர் சீட்டுகிடைத்து பெங்களூர் வரவும்..
மூளையில் சர்ஜரீ..
இருநாள் கழித்து மகன் வந்து சேர..
தனியாய் சிறுபெண்
நண்பர்கள் துணையோடு
ஏற்றிவிட...
தாய் சேய் கணவன்
ஓரிடம்..
கணவனோ நினைவற்றவனாய்..
50 தினங்கள் போராடி
ஜெயித்து கணவரை
மீட்டெடுத்த நவீன சாவித்திரி.
பரலைசஸ் சேர்ந்ததில்...
கணவர்
முற்றிலும்
சிறப்பு குழந்தை ஆனார்..
மீண்டும் பல
மூளை அறுவை சிகிச்சைகள்.
அனைத்தும் சொல்லி கொடுத்து..
அரவனைத்து.
நடமாடும் நிலைக்கு
அவர் உயர்ந்தது
நாயகியின் மனோ திடமே
மகன், மற்றும் மகள் திருமண அமைப்பு
பின் கணவரோடு.. உலகம் சுற்ற..
கம்போடியா இலங்கை அந்தமான்
துபாய்.. என
வெளிநாட்டு
பயணங்கள்
சபரிமலை முதல் மானசாதேவி வரை
குஜராத் முதல் அகோபிலம் வரை...
அவர் ஆசைபட்டதை
இவர் பூர்த்திசெய்கிறார்..
மகன் மகள் வெளிநாடு இருவரையும்
அழைத்தாலும்..
அன்றுவரை..
தன் கரம்
பிடித்தவரை
இன்று
இவர் கரம்பிடித்து
அன்பாய்
ஆதரவாய்
இதமாய்
ஈடுடாடோடு
உள்ளன்போடு
ஊர்கோலம் போக
எங்கும் எதிலும்
ஏமாற்றமின்றி
ஐயமின்றி
ஒற்றுமையாய்
ஓருயிராய்..
வாழ்கின்றனர்..
கஷ்டம் என நினைத்தா லொழிய
கஷ்டங்கள்..
நிச்சயம் கஷ்டங்கள்
இல்லை..
மனதில் உறுதி
வெற்றியே இறுதி!
ஏதோ ஒரு வகையில்
தெய்வம் சதி செய்தாலும்
அதே தெய்வ சந்நிதியே
நிம்மதியும் தந்துக்
கொண்டிருக்கிறது!
வாழட்டும்...
வலிமையாய்..
இவர்களை அன்பு
சேர்த்து விட்டது.