இனி இன்டர்வியூவில் ‘English’ ஒரு தடையல்ல: தயக்கம் உடைத்து சாதிப்பது எப்படி?

வேலை நேர்காணல்களில் ஆங்கில பேச்சுத்திறனை எளிமையாக மேம்படுத்த உதவும் வழிகளை காண்போமா..?
English Speaking Tips|வேலை நேர்காணல்
English Speaking TipsAI Image
Updated on

தாய்மொழியின் முக்கியத்துவத்தை எவ்வளவுதான் வலியுறுத்தினாலும், வேலை நேர்காணல்களில் ஆங்கிலம் முக்கிய பங்கினை வகிக்கிறது என்பதே நிதர்சனம். பலர் தங்களுக்கு திறமை இல்லாமல் அல்ல, ஆங்கிலத்தில் பேசுவதற்கு தன்னம்பிக்கை இல்லாததாலேயே தடுமாறுகிறார்கள். அவர்கள் பேச்சில் தெளிவையும், தன்னம்பிக்கையையும், அடிப்படை தகவல் பரிமாற்றத்தையுமே கவனத்தில் கொள்கிறார்கள்.

தகுதியுள்ள பல விண்ணப்பதாரர்கள் போட்டியிடும் இன்றைய காலத்தில் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறன் கூடுதல் பலமாக அமைகிறது. நடைமுறையில் கிட்டத்தட்ட உலகத்தின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருப்பதால் சர்வதேச எல்லைகளைக் கடந்து சாதிக்கவும் ஆங்கிலம் கட்டாயத் தேவையாகிறது. நேர்காணல்களில் ஆங்கில பேச்சுத்திறனை எளிமையாக மேம்படுத்த உதவும் வழிகளை காண்போமா..?

நேர்காணல்களில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச, அடிப்படை வார்த்தைகளை மட்டும் கற்றுக்கொள்ளாமல், உங்கள் துறை சார்ந்த சொல்லகராதி (Vocabulary), சொற்றொடர்கள் (Phrases) மற்றும் வாக்கிய அமைப்புகளில் கவனம் செலுத்துங்கள்.

கவனத்தை ஈர்க்க மிகக்கடினமான வார்த்தைகள் தேவையில்லை. கடினமான சொற்களை பயன்படுத்த முயற்சிப்பது அதிக பதற்றத்தை ஏற்படுத்துவதுடன், தவறுகள் ஏற்படவும் வழிவகுக்கும். தெளிவான பேச்சே மிக முக்கியம். ‘உங்களை பற்றி சொல்லுங்கள்’, ‘நாங்கள் ஏன் உங்களை வேலைக்கு எடுக்க வேண்டும்?’, உங்கள் பலம் என்ன?’ என்பது போன்ற பொதுவான நேர்காணல் கேள்விகளுக்கு எளிய ஆங்கிலத்தில் பதில்களை தயார் செய்வது நல்லது. இந்த பதில்களை எளிய ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு சத்தமான பேசி பயிற்சி செய்யுங்கள். வார்த்தைக்கு வார்த்தை மனப்பாடம் செய்ய வேண்டாம். திரும்ப திரும்ப பயிற்சி செய்யும் போது இயல்பாக வரத்தொடங்கும்.

தினசரி பயன்பாட்டு வாக்கியங்களை மனப்பாடம் செய்து, உச்சரிப்பில் கவனம் செலுத்தி, ஆங்கிலத்தில் சிந்தித்துப் பேசுவதன் மூலம் ஆங்கிலப் பேச்சுத்திறனை மிக எளிதாக வளர்க்கலாம்.

உதாரணமாக "Tell me about yourself" போன்ற பொதுவான கேள்விகளுக்கு கண்ணாடியின் முன் நின்று சத்தமாகப் பேசிப் பழகுங்கள். இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.

நீண்ட வாக்கியங்களைப் பேசி இலக்கணத் தவறுகளைச் செய்வதை விட, சுருக்கமான, தெளிவான வாக்கியங்களைப் பயன்படுத்தலாம்.

நேர்காணல்களில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு முன்னதாகவே பதில்களை எழுதிப் பயிற்சி செய்வது தடுமாற்றத்தைத் தவிர்க்கும்.

வேலை நேர்காணல்
English Speaking Tips |வேலை நேர்காணல்AI Image

உங்கள் நண்பர்கள் அல்லது வழிகாட்டிகளை நேர்முகத் தேர்வாளராக பாவித்து, அவர்களுடன் போலி நேர்காணல் (Mock Interview) பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

ஆங்கில இலக்கணத்தை முழுமையாகக் கற்று முடித்த பிறகுதான் பேச வேண்டும் என்ற அவசியமில்லை. அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் குறுகிய வாக்கியங்களைக் கற்றுக்கொண்டு பேசத் தொடங்குங்கள்.

நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதைக் காணொளிப் பதிவாக்கிக்கொள்ளுங்கள். நீங்கள் பேசியதைத் திரும்பக் கேட்பதன் மூலம் என்னென்ன தவறு செய்கிறீர்கள், எங்கெங்கு எதற்கெல்லாம் தடுமாறுகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொண்டு அந்தப் பிரச்னைகளைக் களைய இது பெரிதும் உதவும்.

தாய்மொழியில் யோசித்து அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பேசுவதைத் தவிருங்கள். பலர் எதிர்கொள்ளும் சவால் என்னவென்றால் பேசுவதற்கு முன்பு தாய்மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மனதில் மொழிபெயர்ப்பதுதான்(Translate).

இதையும் படியுங்கள்:
ஆங்கிலம் கத்துகிறது எப்படின்னு தெரியலையா? அதுக்குத்தான் Chat-GPT இருக்கே கவலைய விடுங்க!
English Speaking Tips|வேலை நேர்காணல்

இது பேசும் வேகத்தை குறைத்து, தன்னம்பிக்கையை பாதிக்கிறது. வாக்கியங்கள் சிறியதாக இருந்தாலும், நேரடியாக ஆங்கிலத்திலேயே சிந்திக்க மனதை பழக்கப்படுத்துங்கள். ஆங்கிலத்திலேயே யோசிக்கும் போது உங்கள் பேச்சு இயல்பாக வரும்.

இது காலப்போக்கில் தயக்கத்தை குறைத்து நேர்காணலில் விரைவாகவும், தெளிவாகவும் பதிலளிக்க உதவும். நீங்கள் செய்யும் செயல்களை மனதிற்குள் ஆங்கிலத்தில் சொல்லிப் பழகுங்கள். உதாரணமாக நான் சாப்பிடுகிறேன்" என்பதற்குப் பதிலாக "I am eating" என சிந்திக்கத் தொடங்குங்கள்.

உங்கள் மொபைலில் உள்ள ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆப்ஸ்களைப் (Spoken English Apps), Duolingo அல்லது Coursera போன்ற இலவச செயலிகள் மூலம் தினமும் சிறிது நேரம் பயிற்சி செய்து, உங்கள் ஆங்கிலத் திறனை படிப்படியாக மேம்படுத்திக் கொள்ளலாம்.

ஆங்கிலத்தை மேம்படுத்த எளிதான வழிகளில் ஒன்று, பிறர் பேசுவதை உன்னிப்பாக கவனிப்பது தான். யூடியூப் வீடியோக்கள், ஆங்கில செய்திகளை பாருங்கள். அதில் எவ்வளவு பதில்களை கட்டமைக்கிறார்கள், எங்கே இடைவெளி விடுகிறார்கள். எப்படி தெளிவாக பேசுகிறார்கள் என்பதை கவனியுங்கள். வீடியோவை பாதியில் நிறுத்திவிட்டு அவர்கள் சொன்ன வாக்கியங்களை சத்தமாக சொல்லி பார்ப்பது சிறந்த யுக்தி. இது உங்கள் உச்சரிப்பு மற்றும் பேச்சின் ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.

இதையும் படியுங்கள்:
ஆங்கிலத்தில் சரளமாக உரையாட தயக்கமா? இதோ உங்களுக்காக 10 ஆலோசனைகள்!
English Speaking Tips|வேலை நேர்காணல்

ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்ள மற்றொரு சிறந்த வழி, பிறருடன் ஆங்கிலத்தில் உரையாடுவதுதான். முதலில் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது சக பணியாளர்களுடன் குறுகிய வாக்கியங்களைப் பேசிப் பழகுங்கள்.

தவறு செய்வதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், அது கற்றலின் ஒரு பகுதி மட்டுமே.

நீங்கள் எந்த அளவுக்கு ஆங்கிலத்தைக் கேட்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் உச்சரிப்பும், வாக்கிய அமைப்பும் இயல்பாக மாறும். ஆங்கிலச் செய்திகள், பாட்காஸ்ட்கள் (Podcasts) அல்லது ஆங்கிலப் படங்களை சப்டைட்டிலுடன் (Subtitles) பாருங்கள்.

வெறும் வாசிப்பும், எழுத்தும் மட்டுமே பேச்சாற்றலை சரி செய்யாது. தினமும் 15 நிமிடங்களாவது ஆங்கிலத்தில் பேசுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். சத்தமான பேசுங்கள். அன்றாட நிகழ்வுகளை பற்றி பேசலாம் அல்லது நேர்காணல் பதில்களை பயிற்சி செய்யலாம். உங்கள் பேச்சை பதிவு செய்து மீண்டும் கேட்டு பாருங்கள். எங்கு தடுமாறுகிறீர்கள், எங்கு தவறுகள் செய்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளமுடியும். நண்பர்களுடன் ஆங்கிலத்தில் பேசுவது, குழு விவாதங்களில் பங்கேற்பது, கண்ணாடி முன் நின்று பேசுவது தன்னபிக்கையை அதிகரிக்கும். தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் நிச்சயம் நேர்காணலில் எளிதாக ஆங்கிலத்தில் பேசி வெற்றி பெற முடியும்.

மேலும் ஆங்கில மொழியறிவு குறைவாக இருந்தாலும், உங்கள் தொழில் திறமை, சுயமுன்னேற்றம் மற்றும் சரியான வேலை தேடும் அணுகுமுறை மூலம் எளிதாக வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
ஆங்கில எழுத்துக்கள் 26 ஆக மாறியது எப்படி? ஒரு வரலாற்று ஆய்வு!
English Speaking Tips|வேலை நேர்காணல்

பன்னாட்டு நிறுவனங்களில் (MNCs) ஆங்கிலம் அவசியமாக இருக்கலாம், ஆனால் உள்ளூர் நிறுவனங்கள், பிராந்திய வணிகங்கள் மற்றும் பெரிய அளவிலான உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களில் உங்கள் தாய்மொழி (தமிழ்) தெரிந்திருப்பது மட்டுமே போதுமானது.

logo
Kalki Online
kalkionline.com