காலை 11 மணிக்கே உங்களின் மொத்த வேலைகளையும் முடித்துவிடும் சூப்பர் சீக்ரெட் இதோ!

time-management-tips
time-management-tips
Updated on

நம்மில் பலர் தினமும் காலை முதல் இரவு வரை இயந்திரம் போல உழைத்துக்கொண்டே இருப்போம். ஆனால் நாள் முடிந்து தூங்கப் போகும் போது, இன்று உருப்படியாக என்ன செய்தோம் என்று யோசித்தால் ஒரு பெரிய பூஜ்ஜியம் தான் மிஞ்சும். இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு அருமையான வழி இருக்கிறது. 

புகழ்பெற்ற எழுத்தாளர் பீட்டர் டிரக்கர் எழுதிய The Effective Executive என்ற புத்தகத்தில் சொல்லப்பட்ட சில நேர மேலாண்மை தத்துவங்களை நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தினால், காலை பதினோரு மணிக்குள்ளாகவே அன்றைய நாளின் மிக முக்கியமான வேலைகளை எளிதாக முடித்துவிடலாம். 

உங்கள் நேரம் எங்கே செல்கிறது என்பதை அறியுங்கள்!

நாம் செய்யும் முதல் தவறு, நம்முடைய நேரம் எதில் அதிகமாக வீணாகிறது என்பதை கவனிக்காமல் விடுவதுதான். எந்த ஒரு வேலையை தொடங்குவதற்கு முன்பும், நமது நேரம் எப்படி செலவாகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். 

தேவையில்லாமல் சோஷியல் மீடியாவில் ஸ்க்ரோல் செய்வது, தேநீர் இடைவேளை என்ற பெயரில் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பது போன்றவற்றை முதலில் கண்டறிந்து குறைக்க வேண்டும். உங்கள் நேரத்தின் மீது உங்களுக்கு முழு கட்டுப்பாடு வரும்போதுதான் வெற்றியின் முதல் படியை நீங்கள் எடுத்து வைக்கிறீர்கள்.

முக்கியமான வேலைகளுக்கு முன்னுரிமை!

காலை நேரத்தில் நமது மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் நேரமாகும். அந்த நேரத்தில் நமது முழு கவனமும் மிகவும் கடினமான மற்றும் முக்கியமான வேலைகளின் மீது மட்டுமே இருக்க வேண்டும். பலரும் காலையில் எழுந்தவுடன் ஈமெயில் செக் செய்வது, சின்னச் சின்ன வேலைகளை செய்வது என தங்களது பொன்னான எனர்ஜியை வீணடித்து விடுகிறார்கள். 

அன்றைய நாளில் நீங்கள் செய்ய வேண்டிய டாப் 3 முக்கியமான வேலைகளை மட்டும் தேர்வு செய்து, அதை பதினோரு மணிக்கு முன்பாகவே முடித்துவிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஏஐ-யிடம் வேலையை இழக்காமல் தப்பிக்க சாணக்கியர் கூறும் 6 சீக்ரெட் டிப்ஸ் இதோ!
time-management-tips

Deep Work!

ஒரு வேலையை செய்ய உட்கார்ந்தால், உலகம் அழிந்தாலும் அங்கிருந்து நகரக் கூடாது என்ற ஒரு வைராக்கியம் வேண்டும். மொபைல் போனை சைலன்ட்டில் வைப்பது, தேவையில்லாத நோட்டிபிகேஷன்களை ஆஃப் செய்வது என உங்கள் கவனத்தை சிதறடிக்கும் அனைத்தையும் தள்ளி வையுங்கள்.

இந்த ஆழமான வேலை செய்யும் முறைக்கு Deep Work என்று பெயர். இப்படி முழு ஈடுபாட்டோடு இரண்டு மணிநேரம் வேலை செய்வது, கவனம் சிதறி எட்டு மணிநேரம் வேலை செய்வதற்கு சமமான ஒரு அவுட்புட்டை உங்களுக்கு நிச்சயம் கொடுக்கும்.

ஒரு நாளின் வெற்றி, நாம் எத்தனை மணிநேரம் உழைக்கிறோம் என்பதில் இல்லை, அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் எவ்வளவு தரமான வேலைகளை முடிக்கிறோம் என்பதில் தான் அடங்கியுள்ளது. 

இதையும் படியுங்கள்:
இனி மணி பிளான்ட் தேவையில்லை! பணத்தை காந்தம் போல ஈர்க்கும் 'இந்த' ஒரு செடி போதும்!
time-management-tips

தொடக்கத்தில் இந்த 11 மணி ரூல் சற்று கடினமாக தோன்றலாம். ஆனால் ஒரு சில வாரங்கள் உங்கள் மனதை கட்டுப்படுத்தி இந்த பழக்கத்தை கொண்டு வந்துவிட்டால், அதன் பிறகு உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். 

மீதமிருக்கும் நாளின் பெரும்பகுதியை உங்களுக்கு பிடித்தமான விஷயங்களுக்காகவும், குடும்பத்திற்காகவும் மிக நிம்மதியாக செலவழிக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com