

இப்பிரபஞ்சம் சில நியாயங்களுக்குக் கட்டுப்பட்டு இயங்குகிறது. முதலில் நாம் நம்மை சரிசெய்ய வேண்டும். எண்ணங்களை ரகசியமாக வைத்துக் கெள்ளலாம் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். எண்ணத்தை யாரும் மறைக்க முடியாது. எண்ணம் முதலில் பழக்கமாக மாறுகிறது.
தாழ்ந்த எண்ணங்கள் இச்சைகளாகவும், காம உணர்வுகளாகும், குடிபோதை போன்ற பழக்கங்களால் மாறுகின்றன. பிறரைப் பழிக்கும் எண்ணங்களும் வெறுப்பும் பிறரைத் குற்றம் செல்லும் பழக்கத்தை உண்டாக்குகின்றன. மேற்கூறிய பழக்கங்கள் நாம் தண்டிக்கப்பட வேண்டிய சூழலை உருவாக்குகிறது.
தூய்மையற்ற ஒவ்வொரு எண்ணமும் குழப்பம், தளர்ச்சி என்ற பழக்கங்களால் மாறுகின்றன. பின் திசை திரும்பிய சூழ்நிலையால் மாறி நேர் எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
பயம், சந்தேகம், முடிவெடுப்பதில் தயக்கம், உறுதி குலைந்து பழக்கங்களை உண்டாக்குகின்றன. அதுவே தோல்வி, வறுமை, அடிமையாக பிறரைப் சார்ந்திருத்தல் சூழலை உண்டாக்குகிறது.
சோம்பேறித்தனமாக எண்ணங்கள், அசுத்தமான பழக்கவழக்கங்கள், நாணயமற்ற குணங்களை உருவாக்கி எதிலும் தோற்றுப்போகும் நிலையை ஏற்படுத்துகிறது.
சுயநலமிக்க எண்ணங்கள் சுயலாபம் தேடும் நோக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுவே துயரம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்குகிறது.
இதற்கு மாறாக, அழகான எண்ணங்கள், அன்பு, கருணை என்ற பழக்கங்களால் மாறுகின்றன. அது சுமுகமான சூழ்நிலையையும், புத்துணர்ச்சியூட்டும் சூழலையும் உருவாக்குகிறது.
தூய்மை மிக்க எண்ணங்கள் சுயக்கட்டுப்பாடு அடக்கம் என்ற பழக்கங்களை ஏற்படுத்துகின்றன. பின் அதுவே அமைதியும் சாந்தமும் நிறைந்த சூழ்நிலையை உண்டாக்குகிறது.
தன் காலிலே நிற்கவேண்டும் என்ற எண்ணம், துணிவு, முடிவெடுக்கும் உறுதி நேற்று எண்ணங்கள் வளமான வாழ்வு, வெற்றி, சுதந்திரம் என்ற சூழ்நிலையை அமைக்கிறது.
சாந்தமான எண்ணங்கள், மன்னிக்கும் மனப்பான்மை ஒரு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துகிறது.
துடிப்பு நிறைந்த எண்ணங்கள் தூய்மையான பழக்கங்களையும், உழைக்கும் மனோபாவத்தையும் உண்டு பண்ணுகிறது. பின் அதுவே இனிமையான சூழ்நிலையால் மாறுகிறது.
அன்பான எண்ணங்கள், சுயநலமற்ற எண்ணங்கள், மற்றவருக்காகத் தியாகம் செய்யும் பழக்கத்தை உண்டாக்குகிறது. இதன் விளைவாக நிறைந்த வாழ்வும், உண்மையான செல்ல வளமும் ஏற்படும். நல்லதோ கெட்டதோ ஒரு குறிப்பிட்ட எண்ணம் தொடர்ந்து சங்கிலி போல் நீடிக்கும்போது அது அவனது குணநலன்களைப் பாதிக்காமல், சூழ்நிலையைப் பாதிக்காமல் ஒரு விளைவை ஏற்படுத்தாமல் விடுவதில்லை.
ஒருவன் தான் விரும்பும் சூழ்நிலையை தேர்ந்தெடுக்க முடியாதது உண்மைதான். ஆனால் தன்மனதில் உலவும் எண்ணங்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரு மனிதன் எந்த எண்ணங்களை விரும்பி வரவேற்கிறாரோ, அந்த எண்ணங்களை நிறைவேற்றி வைக்க முயல்கிறது இவ்வுலகின் மாபெருஞ்சக்தி. நல்லெண்ணமோ தீய எண்ணமோ அதற்கேற்ப சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.
ஒருவன் தன் பலகீனமான எண்ணங்களை வெளியேற்றினால், அவனது உறுதியான தீர்மானங்களுக்கு உதவ சந்தர்ப்பங்கள் முளைத்து எழுவதைக் காணலாம். நல்ல எண்ணங்களை வரவேற்றால் அவமானமும் துன்பங்களும் அவனை அண்டாது. மாறிவரும் ஒவ்வொரு நிமிடமும் நமது எண்ணங்களுக்கேற்ப பல்வேறு வண்ணக்கோலங்கள் என்ற வாழ்க்கைச் சம்பவங்களை வாழ்வு என்ற முப்பட்டைக் கண்ணாடி குழாய் காட்டுகிறது.
மனிதன் தன் எண்ணங்களை மாற்றிக்கொண்டால் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையில் எவ்வளவு வேகமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்கிற ஆச்சரியமான விஷயத்தை அவன் புரிந்துகொள்கிறான்.
ஒரு மனிதன் நல்ல எண்ணங்களைத் கொண்டிருந்தால் மட்டுமே நல்ல சூழலே அவனுக்கு ஏற்படும்.
நல்எண்ணங்களை வளர்ப்பதன் மூலம் உங்கள் பழக்கவழக்கங்களையும், அதன்மூலம் உங்களைச் சுற்றியுள்ள வாழ்க்கையும் உங்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.