வாழ்க்கையில் ஜெயிப்பது எப்படி? ஆடு மேய்த்த ஏசு, கொலம்பஸ் உணர்த்தும் ரகசியம்!

வெறும் கற்பனையும் அதிர்ஷ்டமும் மட்டும் போதாது; உங்களின் லட்சிய தரிசனமே நாளைய நிஜமாகும்!
லட்சியம்
லட்சியம் Gemini image
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on

ட்சியத்தை தரிசனமாகக் காண்பவர்கள்தான் உலகைக் காப்பாற்றும் உயர்ந்த மனிதர்கள். தாங்கள் கண்ட பல்வேறு அனுபவங்களின் மூலமும், சுயசோதனைகள் மூலமும் யார் லட்சிய தரிசனம் பெறுகிறார்களோ அவர்கள் மூலம்தான் இந்த உலகு வாழ்கிறது.‌ ஒருநாள் இது நிஜமாகும் என்ற நம்பிக்கையில்தான் மனித சமுதாயம் வாழ்கிறது.‌ சிற்பி, ஓவியர், இசை அமைப்பாளர், கவிஞர், ஞானி இவர்கள் எல்லாம் நாளைய உலகை தீர்மானிப்பவர்கள்

உயர்ந்த லட்சியத்தை தன் இதயத்தில் ஏந்தியிருப்பவன் ஒருநாள் அதை அடைந்தே தீருவான். வேறொரு நாடு இருக்கிறது என்ற கற்பனையைக் கண்டு வந்தார் கொலம்பஸ். அதைக் கண்டுபிடித்தார்‌.

இது பரந்த உலகம், இங்கே பல்வேறு கோள்கள் இருக்கின்றது என்று நம்பினார் கோபர்னிகஸ். அந்த உண்மையை உலகிற்கு அளித்தார். மாசுமறுவற்ற அழகையும் பூரண சாந்தியையும் தனது ஆன்மீக உலகில் புத்தர் கண்டார்‌ மக்களையும் அங்கு அழைத்துச் சென்றார்.

கற்பனையை உள்ளத்தில் வளரவிடுங்கள். லட்சியத்தை தரிசனம் செய்யுங்கள்‌ இதயத்தைத் தூண்டிவிடும் இசைக்கு ஊக்கம் தாருங்கள். சிந்தனையை அழகுபடுத்தும் எண்ணங்களை போற்றுங்கள்‌ உங்கள் லட்சியத்தில் உண்மையான பற்றுடன் ஈடுபட்ட நீங்கள் விரும்பும் உலகம் உங்கள் கண்முன்னே உருவாகும்‌. கேளுங்கள் கொடுக்கப்படும் என்பது உண்மை. உயர் லட்சியங்களை தரிசனம் செய்யும்போது நீங்கள் ஒருநாள் எப்படி மாறப்போகிறீர்கள் என்பதை அது உணர்த்தும்.

லட்சியம்
லட்சியம்Gemini image

எதை உங்கள் உள்மனது ஆசையுடன் அவாவுகிறதோ அதை நோக்கி நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள். உங்களது இன்றைய நிலை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.‌ உங்கள் எண்ணங்களுக்கும் லட்சிய தரிசனத்திற்கும் ஏற்ப நீங்கள் உயர்வீர்கள்‌ ஸ்டார்டர் கிர்க் காம் டேவிசின் அழகிய வார்த்தைகளில் சொல்லப்போனால் "நீங்கள் ஒரு கணக்கெழுதுபவராக இருக்கலாம்.

ஆனால் எந்தக் கதவு இத்தனை நாட்கள் உங்கள் இலட்சியங்களுக்குத் தடையாக இருக்கிறதென்று நினைத்தீர்களோ அந்தத் தடையெல்லாம் மீறி வெற்றியாக நடப்பீர்கள்.

இதையும் படியுங்கள்:
அவமானத்தை சாதனையாக மாற்றிய இளம் பெண்: உங்களது திறமையே உங்கள் அடையாளம்!
லட்சியம்

நீங்கள் ஆடு மேய்ப்பவராக இருக்கலாம். திசை தெரியாமல் நகர்ப்புறத்தில் சுற்றிக் கொண்டிருக்கலாம். ‌திறந்த வாயுடன் கன்னங்களில் தொங்கும் சதையுடன் ஆத்மா வழிகாட்ட நீங்கள் அந்த மகத்தான தலைவனின் மாளிகைக்குள்ளே நுழைகிறீர்கள். கொஞ்ச காலம் கழித்து அந்தப் பெருமான் "உனக்குச் சொல்லிக் கொடுக்க இனி ஒன்றுமில்லை" என்று கூறி வழி அனுப்புகிறார். அப்படித்தான் ஆடு மேய்த்துக் கொண்டே பல பெரிய பெரிய விஷயங்களைப் சிந்தித்தார் ஏசு என்ற மனிதர்.

சிந்தனை இல்லாதவர்கள் விஷயம் தெரியாதவர்கள், சோம்பேறிகள். எல்லாம் செயல்களின் விளைவுகளை மேம்போக்காக பார்க்கிறார்களே ஒழிய அடிப்படைக் காரணங்களைக் கவனிப்பதில்லை. சிலரை அதிர்ஷ்டக்காரன் என்றும், சிலரை யோகக்காரன் என்றும், சிலர் புத்திசாலியாக இருந்தால் அது ஆண்டவன் அருள் என்று ஆச்சர்யப்படுகிறார்கள்.‌ அத்தகைய அனுபவத்தை அடைவதற்கான சோதனைகள், தோல்விகள் போராட்டங்களுக்கு அவர்கள் எப்படித் தங்களை உட்படுத்திக் கொண்டார்கள் என்பதை உலகம் உணர்வதில்லை‌ சிலரை அதிர்ஷ்டக்காரர்கள் என்று கூறுகிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு எப்படி அதிர்ஷ்டம் ஏற்பட்டது என்ற வழிமுறைகளை உலகம் புரிந்துகொள்வதில்லை. மனித வாழ்வில் எல்லா நிகழ்ச்சிகளிலும் முயற்சிகள் இருக்கின்றன. விளைவுகள் இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
இந்த விஷயங்களை செஞ்சா நீங்களும் புத்திசாலி தான்... ட்ரை பண்ணுங்க!
லட்சியம்

நமது முயற்சியின் வலிமைதான் விளைவின் அளவுகோல். அதுதான் உண்மை. அதிர்ஷ்டமல்ல. வாழ்நாளில் நாம் பெற்ற பரிசுகள் நம்மிடம் இருக்கும் சக்தி, பொருட்கள் அறிவு, ஆன்மிக பலம் எல்லாம் நம் முயற்சிகளால் தந்த கனிகள்.

அவை எல்லாம் எண்ணங்கள் நிறைவு பெற்ற நிலை. லட்சியம் தன் இலக்கை அடைந்த நிலை. உங்களது பெருமை தரும் கனவுகள் உங்கள் இதய சிம்மாசனத்தில் கொலுவீற்றிருக்கும் லட்சியம் இதை வைத்துதான் வாழ்வு எனும் மாளிகையை கட்டப்போகிறீர்கள். இன்றைய விதைகள் நம் கனவுகள் அவைதான் நாளைய நிஜங்கள்.லட்சிய தரிசனத்தில் முனைப்போடு இருந்தால் சாதனைகள சாத்தியமே.

உங்கள் தற்போதைய நிலை எதுவாக இருந்தாலும், உங்கள் ஆழ்மன எண்ணங்களும் உறுதியான லட்சிய தரிசனமும் உங்களை வாழ்க்கையின் மிக உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com