நட! போராடு!

முடிவு, காதல், மனஅமைதி, வாழ்க்கை அனுபவங்கள் பற்றி ஆழமாக பேசும் கவிதைத் தொகுப்பு.
Man with sad memories
Tamil kavithai: Man with sad memoriesImage credit: AI Image
Updated on

பிறந்தவுடன் பறந்து,

கொண்டாடுகிறது.

ஈசல்.

எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு என்பது நமக்கு தெரியும் தானே?

அந்த முடிவை நாம் ஏற்றுக் கொள்வது என்பதும் முக்கியம் தானே?

அப்படி என்றால் எந்த முடிவும் மொத்தமான முடிவு இல்லை தானே?

அப்படி இருக்க நாம் ஏன் முடிவை பற்றி முணுமுணுத்து முடங்கிப் போக வேண்டும்!

ஆதாலால் முடிவில் இருந்து தொடங்குவோம்.....

மனதில் அமைதி என்பது இறைவன் நமக்கு கொடுத்த பெரிய கொடை...

அதை 'நாம் நமக்காக' கொடுக்க மட்டுமே முடியும்.

எப்படி என்று கேட்கிறீர்களா?

'எல்லாவற்றையும் செய்து விட்டு எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது' இது ஒரு நேர்த்தியான முடிவு.

இது நம்முடைய 'அகத்திறனை' இரண்டு மடங்காக ஆக்கும்.

ஒரு தப்பான முடிவு நம் வாழ்க்கையில் சோதனையை இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

ஆதலால் எந்த 'சந்தர்ப்பத்திலும்' எந்த 'சூழ்நிலையிலும்' கவலை கொள்ளாதே மனமே!

எல்லாவற்றிலும் இருப்பது அனுபவமே!

ஆகவே வாழ்ந்துவிடு!

வாழ்வதே வாழ்க்கை!

வாழ்வது ஓர் உன்னதப் பயணம்....

என்றும் அது தொடரட்டும் தொடர்கதையாக.....

இதையும் படியுங்கள்:
சிறுகதை: விழுந்தால் எழ வேண்டாமா?
Man with sad memories

கண்ணதாசனே! கண்ணதாசனே! 

கவிதை கொடு என்று கேட்டேன்...

அவன் வாழ்வின் நேர் முரணை எடுத்துச் சென்னான்....

நான் கவிஞனும் இல்லை 

நல்ல ரசிகனும் இல்லை 

காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை 

நான் கவிஞனும் இல்லை 

நல்ல ரசிகனும் இல்லை

காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை

நான் அழுதால் சிரிக்கிறாள்

சிரித்தால் அழுகிறாள் 

கொஞ்சினால் கொதிக்கிறாள் 

கெஞ்சினால் மிதிக்கிறாள் 

இருப்பதா? இறப்பதா?

அழுவதா? சிரிப்பதா?

அம்மா தாயே..தாயே..!

logo
Kalki Online
kalkionline.com