'இன்னும் 5 நிமிஷம் தூங்கலாம்' – இந்த ஒரு எண்ணம் உங்கள் வாழ்க்கையை எப்படி சிதைக்கிறது?

Morning Motivation
Morning Motivation
Updated on

காலையில் நம் தூக்கம் கலைந்தாலும் படுக்கையை விட்டு எழுந்திருப்பது பலருக்கு கஷ்டமான காரியம். இதை தடுப்பது எப்படி? ஸ்பாஸ்டிக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்த்திருக்கிறீர்களா? மூளை இடுகிற கட்டளைக்கு அவர்களது உடல் கீழ்ப்படியாது‌, வாய்க்கு உணவை எடுத்துக் கொண்டுபோக முயலும்போது மூளை கட்டளையிட்டால் கை காதுக்குக் கொண்டுபோகும். நினைத்துப் பாருங்கள். நாம் எத்தகைய பாக்கியசாலிகள் பலகோடி கொடுத்தாலும் வடிவமைக்க முடியாத தடைகளால் ஆன கம்ப்யூட்டர் நம் மூளையில் இருக்கிறது. விழிப்போடு இருக்கும் இதயம், காட்சிகளைக் காண கண்கள், இத்தனை அற்புதமான உடம்பை படுக்கையில் படுக்க வைத்திருப்பது எத்தனை பெரிய வேதனை. 

நாம் சில வேலைகளை தள்ளிப் போடுவோம்.  வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலை என்று பல விஷயங்கள் உள்ளன‌. நம் முன்னேற்றத்துக்கு குறுக்கே வரும் தள்ளிப் போடுகிற மனப்பான்மையை எப்படி விரட்டுவது? மருந்து கொடுப்பதற்கு முன் நோயைக் கண்டறிவது தானே முறையாகும் அதை தள்ளிப் போடலாமா? காலையில் தூக்கம் கலைந்ததும் செய்ய வேண்டிய வேலைகள் மலை போல் இருக்கின்றன. ஆனால் எழ மனமில்லாமல் படுக்கையில் கிடக்கிறோம். அதை நாம் இன்று விடுமுறை தானே இன்னும் படுப்போம் என நியாயப்படுத்தலாம்.

உங்கள் அலுவலகத்தில் யார் காலை 5 மணிக்கு வருகிறாரோ அவருக்கு ஒரு லட்சம் என்றால் சும்மா இருப்போமா? உருண்டு ஓடமாட்டோமா?

படுக்கையில் படுப்பதைவிட என்  குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். வீட்டை சுத்தப்படுத்துவேன். அலுவலகம் அல்லது வியாபாரம் பார்ப்பதுதான் சந்தோஷம் என்று நினைத்துப் பாருங்கள். இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஒரு தாய் மகனை காய்கறி வாங்கிவரக்கூற, மகன் அது ரொம்ப தூரம் உள்ளது கஷ்டம் என்றான். உடனே தாய் நீ காய்கறி மார்க்கெட்டை தாண்டி உள்ள விளையாட்டு மைதானத்துக்கு தினமும் ஓடுகிறாய். அது கஷ்டமாக இல்லையா என்று கேட்டாள்‌. உடனே மகன் தன் தவறை புரிந்து கொண்டான். பள்ளிக்கூடத்தில் வாத்தியாருக்காக தோப்புக்கரணம் போடுவது கஷ்டமாக உள்ளது. அதையே உடற்பயிற்சியால் செய்யும் போது சந்தோஷமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
காலையிலேயே ரொம்ப Lazy-ஆ இருக்கா? இந்த 5 டிப்ஸ் உங்களுக்குதான்! 
Morning Motivation

தூக்கம் கலைந்து பின்னும் படுக்கையில் புரள்வது சந்தோஷமில்லை‌ மற்ற வேலைகளைப் பார்ப்பதில் தான் சந்தோஷம் என்று உங்களின் சந்தோஷத்தை ஷிப்ட் செய்து பாருங்கள். இப்படி ஒரு எண்ணம் வந்தால் உங்களால் சூரியோதயத்திற்கு முன்னாலேயே படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியும் எந்த வேலையையும் நாளைக்கு என்று தள்ளிப் போடாமல் இன்றே செய்து விடமுடியும் வாழ்க்கையில் இழந்தால் திரும்பப் பெற முடியாத விஷயங்கள் மூன்று

1. உச்சரிக்கப்பட்ட சொல்

2. தவறவிட்ட வாய்ப்பு

3. கடந்து போன நிமிடம்.

இப்போது சொல்லுங்கள் கண் விழித்ததும் படுக்கையிலிருந்து எழுவது சுகமா அல்லது சோகமா?

இந்த தூக்கம் உங்களுக்கு அற்ப சந்தோஷத்தைக் தரும். ஆனால் அதனால் பலவற்றை நீங்கள் இழக்க வேண்டியிருக்கும். தூங்கி எழும்போது இன்னும் படுக்க வேண்டும் என்று நினைப்பது சுகம் தான். ஆனால் இந்தப் பழக்கம் நம்மிடம் தங்கிவிட்டால் சுகத்தை விட சோகமே மிஞ்சும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com