வெண்ணிலா ஐஸ்க்ரீம் வாங்குனா மட்டும் கார் ஸ்டார்ட் ஆகல... இது அமானுஷ்யமா? அறிவியலா?

Vanilla icecream story
Vanilla icecream story
Published on

சில பிரச்னைகள் விநோதமாகத்தான் தெரியும். தீர்வு தேடுவதற்குள் தவித்துப் போவார்கள். எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு ஏதோ ஒரு இடத்தில், ஒரு விஷயத்தில் ஒளிந்திருக்கும். அதைத் தேடிக் கண்டுபிடிக்கும் சாமர்த்தியம் வேண்டும். இப்படியானப் பிரச்னைகள், அவற்றுக்கு தீர்வு கண்ட விதம் பற்றிப் பார்ப்போமா...

ஒரு வாடிக்கையாளரின் புகார்க் கடிதம், அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு வந்திருந்தது. கடிதம் இப்படி ஆரம்பித்திருந்தது. “இதைப் படித்தால் உங்களுக்கு வேடிக்கையாகத் தெரியலாம்...

“எங்கள் வீட்டில் எல்லோரும் ராத்திரி சாப்பாடு முடிந்ததும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது வழக்கம். எல்லோரும் என்ன ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்று கூடி முடிவு செய்வோம். அதன்பின் நான் காரில் போய் ஐஸ்கிரீம் வாங்குவேன். கடையில் போய் காரை நிறுத்தி விட்டு, நான் வேறு எந்த ஐஸ்கரீம் வாங்கி கொண்டு திரும்பி வந்தாலும் கார் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. ஆனால், வென்னிலா ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு திரும்பும் நாட்களில் மட்டும் கார் ஸ்டார்ட் ஆக மறுக்கிறது.

நீண்ட நேரம் போராடினால் மட்டுமே கார் ஸ்டார்ட் ஆகிறது. கேட்க விநோதமாக இருக்கலாம். ஆனால், உங்கள் காருக்கு வென்னிலா ஐஸ்கிரீம் என்றால், அலர்ஜியா?“ என்று இருந்தது அந்தக் கடிதம்.

இதையும் படியுங்கள்:
மதிய உணவு திட்டம்: நாட்டுக்கு வழிகாட்டிய கர்மவீரர் ‘காமராஜர்’
Vanilla icecream story

வாடிக்கையாளரின் சேவைப் பிரிவு அக்கடிதத்தை அலட்சியப்படுத்த விரும்பவில்லை. உடனே, வாடிக்கையாளரின் புகாருக்கு மதிப்புக் கொடுத்து, ஒரு எஞ்சினியரை அனுப்பி வைத்தது, ஃபோர்டு நிறுவனம். எஞ்சினியரும் பயந்து கொண்டே வாடிக்கையாளரின் வீட்டிற்குப் போனார். அந்த வாடிக்கையாளரும் நன்கு படித்தவராக தெரிந்தார். பெரிய பணக்காரர். கண்ணியமாகவும் பழகினார்.

அன்று இரவு அவர் ஐஸ்கிரீம் வாங்கப் போன போது, எஞ்சினியரும் கூடவேப் போனார்.

வென்னிலா ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு திரும்பி வந்த போது, கார் ஸ்டார்ட் ஆகவில்லை!

கஷ்டப்பட்டு கால் மணி நேரம் போராடி காரை ஸ்டார்ட் செய்தார், எஞ்சினியர். அதன்பின் கார் நன்றாகவே ஓடியது. அடுத்தடுத்த நாட்களிலும் வாடிக்கையாளர் ஐஸ்கிரீம் வாங்கப் போகும் போது, எஞ்சினியர் கூடவே போனார்.

ஸ்ட்ராபெரி, சாக்லேட், பிஸ்தா என மற்ற ஐஸ்கிரீம்கள் வாங்கும் போது எந்தப் பிரச்னையும் இல்லை. மற்ற நேரங்களிலும் நன்றாக கார் ஓடியது. ஐந்தாவது நாள் திரும்பவும் வென்னிலா ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு திரும்பிய போது கார் மக்கர் செய்ய ஆரம்பித்ததும், எஞ்சினியருக்கு தலைச் சுற்ற ஆரம்பித்தது!

எஞ்சினியர் ஒரு கணம் நிதானமாக யோசிக்கலானார். எஞ்சினியர் இதுவரை தான் குறித்து வைத்திருந்த அத்தனை விவரங்களையும் ஆராயத்தொடங்கினார். எல்லா நாளும் ஒரே நேரத்தில் தான் ஐஸ்கிரீம் வாங்க வந்திருந்தார்கள். திடீர் மழையோ, பனியோ போன்ற எந்த பிரச்னையும் இல்லை. பெட்ரோலும் ஒரே இடத்தில் போடப்பட்டது தான். அதனால், எந்தப் பிரச்னையும் இல்லை.

இதையும் படியுங்கள்:
"போரை நிறுத்த வர்த்தகத்தைப் பயன்படுத்துவேன்"- ரஷ்யாவுக்கு கெடு விதித்த ட்ரம்ப்..!
Vanilla icecream story

வந்த நேரம் என்ன? திரும்பிச் செல்லும் நேரம் என்ன? என்பதையும் எஞ்சினியர் குறித்து வைத்திருந்தார். எஞ்சினியரின் மனம் குறித்து வைத்திருந்த அந்த நேரத்தைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அதை மிகவும் ஆழ்ந்து ஆராயத் தொடங்கினார். அப்போது தான் பிரச்னையின் முடிச்சு என்ன என்பது பற்றி எஞ்சினியரால் கண்டுபிடிக்கப்பட்டது.

உண்மையில் அந்தக் காருக்கு வென்னிலா ஐஸ்கிரீம் மீது எந்த அலர்ஜியும் ஏற்படவில்லை. அந்தக் கடையில் வென்னிலா ஐஸ்கிரீம் இருந்த இடம் தான், கார் ஸ்டார்ட் ஆகாததற்குக் காரணம் என்பதை கண்டறிந்தார்.

அந்தக் கடையில் மற்ற ஃப்ளேவர் ஐஸ்கிரீம்கள் எல்லாமே கடையின் உள் பகுதியில் உள்ளன. கடைக்குள் நீண்ட தூரம் நடந்து சென்று அவற்றை எடுத்து வந்து பணம் செலுத்த வேண்டும். ஆனால், வென்னிலா ஐஸ்கிரீம் அதிகம் விற்பனை ஆகிறது என்பதால், கேஷ் கவுண்டர் அருகிலேயே அதை தனி ஃப்ரீஸர் பாக்ஸில் வைத்திருந்தனர். அதனால், கடைக்குள் நுழைந்ததும் ஐஸ்கிரீமை எடுத்து, அங்கேயே பணம் செலுத்தி விட்டு சீக்கிரம் வெளியில் வந்து விடுகிறார் வாடிக்கையாளர்.

அதனால் மற்ற ஐஸ்கிரீம் வாங்கும் நாட்களை விட வென்னிலா ஐஸ்கிரீம் வாங்கும் நாட்களில் சீக்கிரமாக காருக்குத் திரும்பிவிடுகிறார். இந்த நேர வித்தியாசம் தான் பிரச்னைக்கு காரணமாக இருக்கிறது என்று எஞ்சினியர் கணித்தார்.

இதையும் படியுங்கள்:
ஏ.ஆர்.ரகுமானின் மேல் உள்ள அன்பால் பிரபல பாடகர் செய்த செயல்..
Vanilla icecream story

காரின் எஞ்சின் சூடேறும் போது அதற்குள் ஆவி பரவி அடைப்பு ஏற்படுகிறது. வாடிக்கையாளர் காரை அணைத்து விட்டு கடைக்குள் போய் மற்ற ஐஸ்கிரீம்கள் வாங்கி வரும் நாட்களில், சில நிமிடங்கள் தாமதமாக வருகிறார். அந்த இடைவெளிக்குள் எஞ்சின் குளிர்ந்து, ஆவியால் ஏற்பட்ட அடைப்பு விலகிவிடுகிறது. வென்னிலா ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு சீக்கிரமே அவர் திரும்பி விடுவதால், எஞ்சின் குளிராமல் சூடாகவே இருக்கிறது.

அதனால், உள்ளே ஆவி அடைப்பு அப்படியே இருக்கிறது. அதனால் கார் ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்கிறது. அந்த ஆவி அடைப்பு பிரச்னையை உடனடியாகச் சரி செய்தார், எஞ்சினியர். அதன் பின் எந்த ஐஸ்கிரீம் வாங்கினாலும், கார் பிரச்னை செய்யாமல் ஸ்டார்ட் ஆனது.

கடிதத்தின் ஆரம்ப வரி சொன்னது போல், வேடிக்கையாக இருந்தாலும், இந்தப் பிரச்னையும், இதற்கு தீர்வ கண்ட விதமும் 'பிரச்னைகளின் வரலாறாக' சட்டமிட்ட ( Frame ) புகைப்படம் வடிவில் அனைத்துப் பெரு நிறுவனங்களின் வாடிக்கையாளரின் சேவைப் பிரிவில், புதிய வாடிக்கையாளருக்கு நம்பிக்கை தருகிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com