

வாழ்க்கையில் போதும் என்ற மனப்பான்மை இருந்தால், எது கிடைத்தாலும் அதை பெரிதாக மதித்து நடக்கும் பக்குவம் அடைவான். அது இல்லாதவனுக்கு, எல்லாம் இருந்தும், அவன் அதை ஒரு பொருட்டாக மதிக்காமல், அலட்சியம் செய்துவிடுவான்.
வாழ்க்கையில் அடுத்தவர்கள் செய்யும் விமர்சனகளை சரியானதாக இருந்தால் திருத்திக்கொண்டு அங்கிருந்து நகருங்கள். தவறாக இருப்பின் சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து விடுங்கள். எதையும் ஆராய்ந்து பார்த்து மனதைப் புண்படுத்தி, வீணாக போகாதீர்கள்.
நீங்கள் எடுத்துக்கொண்ட செயலை ஒருபோதும் மன அழுத்தம் கொடுத்து சிந்திக்கும் பழக்கம் இருந்தால், அதனை உடனே மனதில் இருந்து நீக்கி விடுங்கள். அது ஒரு போதும் வெற்றியும் தராது, மனம் நிம்மதியாகவும் இருக்காது.
வாழ்க்கையில் தேடல் அவசியம். அதற்காக வாழ்க்கையை தொலைத்துவிட்டு தேடாதீர்கள். உங்களுக்கானது எங்கே இருந்தாலும், அது உங்களை வந்து அடையும். ஆனால், அது தனக்கு தானாக கிடைத்துவிடும் என்று எண்ணாதீர்கள். உங்களுடைய முழு முயற்சிவேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.
நீங்கள் எதையும் பாசிட்டிவ்வாக எடுத்துக்கொண்டு செய்யும் எந்த செயலுக்கும் ஒரு வலிமை உண்டு என்பதை அறிந்துகொண்டு செயலாற்றுங்கள். எந்த செயலும் நிச்சயமாக நல்லதாகவே நடக்கும்.
வாழ்க்கையில் எந்த நேரமும் நல்லது அல்லது கெட்டது பார்த்து உங்களை நகர்த்தாது. நீங்கள் செய்யும் செயலும், முன்னெடுத்துச் செல்லும் மனமும் தான் அதனை தீர்மானிக்கும். ஆகவே எப்போதும் மனதை ஒரு நிலைப்படுத்தி, செயலில் ஈடுபடுங்கள்.
வாழ்க்கையில் நிறைய பேரிடம், நிறையவே கற்றுக்கொள்கிறோம். ஆனால் அது நமது நினைவில் வைத்துக் கொள்ள ஆசை படுவதும் இல்லை, மறந்தும் விடுகிறோம். அப்படி செய்யாதீர்கள். ஏனெனில், சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
வாழ்க்கையில் அவை அனைத்தும் உங்களுக்கான படிப்படியாக எடுத்துக்கொள்ள முயற்சி செய்து, செயல் படுத்துங்கள். ஆனால் எதிலும் வலிய சென்று காம்ப்ரமைஸ் செய்துகொள்ள நினைத்து, உங்கள் சிந்தனையை எவரிடமும் அடகுவைத்து விடாதீர்கள்.
வாழ்க்கையில், எப்போதும் நீங்கள் ஆறறிவு உள்ள மனிதன் என்ற எண்ணத்தில் மேலோங்கி இருங்கள். ஏனென்றால், இப்போது, அந்த முனை மழுங்கி வருவது வேதனை அளிக்கிறது. சிலர் அப்படிப்பட்ட எண்ணங்களில் நழுவி, வாழ்வில் சீர்கெட்டு போய்விடுகிறார்கள்.
வாழ்க்கையில் உங்களுக்கு சிலர் எதிர்வினை ஆற்றும் செயலில் ஈடுபடுவது தெரிந்தால், அதற்கு உங்கள் மனதை வருத்திக் கொள்ள வேண்டாம். அவனுக்கும் நல்லதே நடக்கவேண்டும், என்று நினைத்து, உங்கள் வாழ்க்கையை மட்டும் சிந்தித்து செயல்படுங்கள்.
அத்தகைய நேர்மறை எண்ணங்கள் உங்களிடம் ஆல விருட்சமாக வளர வளர, ஆல விழுதுகள் ஒவ்வொன்றும் உங்கள் கரங்களைப் பற்றி, உங்களை உயர்வான இடத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை உணர்ந்து கொண்டு, செயல்பட்டால், நல்லதே நடக்கும்.
வாழ்க்கையில் எப்போதும் இயல்பாக இருக்க பழகினால், எந்த புயலும் உங்களை தாக்காது. மனதில் வலிமை இருந்தால், தடங்கள் அனைத்தும் வெற்றியின் இலக்கை நோக்கி நகரும். இதனை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் சூடும் மாலை வெற்றி மாலையாக இருக்கும்!