வாழ்க்கை என்பது வாழ்வதற்கே... உழைப்பதற்காக மட்டுமே அல்ல!

Motivational articles
Motivational articles
Published on

வாழ்க்கையை அழகாக வாழ்வதை விடவும், அர்த்தமுள்தாக வாழப் பழகுங்கள். அப்போது நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாகவும், மன அழுத்தம் இல்லாமலும் சிறப்பாக வாழ்கிறீர்கள் என்பதும், உங்கள் செயலால் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதும் புரியும்.

வாழ்க்கையை அனுபவித்து ரசிக்கும்போது, நந்தவனத்தில் நடப்பது போன்று உணர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது உங்களின் நிகழ்கால பயணத்தின் சாரதியாக இருந்து, உங்களை மகிழ்ச்சி என்னும் கடலில் ஆழ்த்தும். மகிழ்ச்சி என்பது நிகழ்காலத்தின் வரம்.

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் வேளலையில், மனித மனம் நேர்மறை எண்ணங்களை அட்சய பாத்திரமாக கொடுத்துக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு மனிதனும் நிகழ்காலத்தை, தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம் என்று உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் மகிழ்ச்சயாக இருக்கும்போது, மனம் தெளிந்த நீரோடையாக இருக்கும். அப்படி மனம் தெளிவான உணர்வில் இருக்கும்போது, உள்ளம் தன் வேலையை செய்யத் துடிக்கிறது. அப்போது புதுப்புது எண்ணங்களும், தூயசிந்தனைகளும் உருவாகிறது.

வாழ்க்கையில் உயர்வானது ஒரு மனிதனின் உழைப்பு மட்டுமே. ஆனால் உழைத்து உழைத்து ஓடாடாக தேய்ந்து போய், தன்னையும், தன் வாழ்க்கையும் இழந்து போவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. எதுவுமே அளவுக்கு அதிகம் என்றால், அது தீவினையைத் தான் தரும்.

ஆதனால் உழைப்புக்கு எப்போதும் மதிப்பு கொடுங்கள் தவறில்லை. உழைப்பு என்பது வாழ்வதற்கு என்பதை புரிந்துகொள்ளுங்கள். எனவே மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றால், கால நிர்ணயம் அறிந்து உழைப்பை ஏற்றக் கொண்டு, அதற்குள் சிறப்பாக தன் திறமை மற்றும் தனித்தன்மையை நீங்கள் வெளிப்படுத்தி உயர்வுக்கு வித்திடுங்கள்.

இதையும் படியுங்கள்:
தேவை எது? ஆடம்பரம் எது? – ஒரு தெளிவான பார்வை!
Motivational articles

வாழ்க்கையில் எல்லா நிலைகளும் வந்து போகும் என்பதை மறந்து விடாதீர்கள். அதாவது ஏற்றத் தாழ்வு, மற்றும் இன்பம் துன்பம் போன்றவைதான் என்பதை ஒவ்வொரு மனிதனும் மனதில் பதிய வைத்தக் கொண்டால், வாழ்க்கை எந்த நிலையிலும், தடம் மாறாமல், ஆழ்கடல் அமைதியாக நகரும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியில் திளைக்கும் போது, இதுவே நமக்கு நிரந்தரமாக இருக்கும் என்று தப்புக் கணக்கு போட்டு, நாணயத்தின் மறுபக்கம் போன்று, வாழ்க்கைக்கும் மறுபக்கம் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது.

அந்த நேரத்தில் வாழ்க்கை பாதை தடம் மாறினால், அது உங்களது சொந்தத் தவறுகள் தான் அதற்குக் காரணமாக இருக்குமே தவிர, வேறொன்றும் காரணம் இருக்காது. ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கம் அதிக மகிழ்ச்சியில்தான், தன்னிலை உணரும் தன்மை மறத்து போகிறது என்பது நிதர்சனமான உண்மை.

இறைவனுக்கு எல்லோரையும் சந்தோஷமாகவும், மனிதம் கலந்தும் வாழ்வதற்கு ஆசைப்பட்டுதான், ஒவ்வொரு மனிதனையும் படைத்து இருக்கிறான். ஆனால் ஒவ்வொரு மனிதனும் தன் ஊழ்வினையின் பலன், அவனை இருவிதமாகவும் ஆட்க்கொண்டு விடுகிறது.

இதையும் படியுங்கள்:
வருங்காலத்தை பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள்! ஏன் தெரியுமா?
Motivational articles

அதற்குதான், எந்த சூழ்நிலையிலும் தீவினை மட்டும் செய்யக்கூடாது என்பதை புரிந்து, வாழும் காலம், நல்வினை மட்டுமே செய்யும் மனநிலையில் ஊசி முனை அளவு கூட மாற்றம் கண்டு விடாதீர்கள்.

வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதேநேரம் தடம் மாறும் எந்த செயலுக்கும், மனதை மடை மாற்றி விடாதீர்கள். அப்போதுதான் துன்பங்களின் நிழல் கூட உங்கள் மீது படராது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com