

மனிதனின் ஒவ்வொரு அசைவையும் இறைவன் கவனித்துக் கொண்டிருக்கிறான். துரோகம் செய்பவர்கள், வஞ்சக எண்ணம் கொண்டவர்கள், அடுத்தவர் வளா்ச்சிகண்டு பொறாமைப்படும் நபர்கள் அடுத்தவர்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்கள், இப்படிப்பட்ட பஞ்சமாபாதக செயல்களை செய்யும் நபர்கள் இன்று சந்தோஷமாக வாழலாம்.
ஆனால் அவர்களது ஒவ்வொரு அசைவும் இறைவன் கையில் வைத்திருக்கும் கணிணியில் சேமித்து வைக்கப்படுகிறு. அது தொியாமல் சிலபோ் அடுக்கடுக்காய் கம்சன்போல தவறுகள் செய்வது வாடிக்கையானது,
பல இடங்களில் சில மனிதர்கள் ஏமாளியாகே இன்னமும் காலத்தைக் கடத்துவதோடு நேற்று நடந்த விஷயத்தையே பேசிப்பேசியே அடுத்த நகர்வுக்கு நகராமல், எல்லாம் விதிவிட்ட வழி, என் தலையெழுத்து என நொந்துபோய் வாழ்வதும் நடைமுறைதான் அது தவறு.
பொதுவில் கூடுமான வரையில் யாரையும் எளிதில் நம்புவதும் பிறறையே சாா்ந்திருப்பதும் நமக்கு சிரமத்தைத்தான் தரும்.
நமக்கும் வேலை முடிந்தால் சரி என பிறர் மீது அபரிமித நம்பிக்கை வைப்பதால் நாம் பல விஷயங்களில் ஏமாற்றப்பட்டு விடுவோம்.
நம்பகமான நபர்கள் இந்த உலகில் மிகவும் குறைவுதான்.
அதிலும் இப்போதைய இளைய தலைமுறை நபர்பகளிடம் நாம் கொஞ்சம் கவனமாகவே பழகவேண்டிய சூழல் வந்துவிடுகிறது.
சில குடும்பங்களில் மருமகளான நபர்கள் மாமனாா், கணவர், மாமியாா் இவர்களிடம் பாசமாய் நடந்து கொள்வதுபோல நயவஞ்சகமாகவே பழகி மாமனாா் மாமியாருக்கு வயோதிகம் வந்துவிட்டால் அவர்களுக்கு பணிவிடைகள் செய்யவேண்டும். எப்படியாவது கணவனை அழைத்துக்கொண்டு தனது தாய் தகப்பன் வீடு தேடி போய்விடுகிறாா்கள். கணவன் ஒத்து வராத நிலையில் அவனையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு போய்விடுவதும் நிதர்சனமாக நடக்கிறது. அப்போது நமது நம்பிக்கை பலவீனமடைந்து விடுகிறது. நமது பலவீனம் எதிாிகளுக்கு பலம் என்பதை நாம் உணர்ந்து செயல்படவேண்டும்.
இது எவ்வளவு பொிய நயவஞ்சகம், சொல்லமுடியாத துரோகம் என்றுகூட சொல்லலாம். அப்போது நாம் படும் வேதனை கண்டு நமது உறவுகள் நம்மிடம் பேசுவதையே நிறுத்திவிடுவாா்கள்.
பொதுவாகவே பணம் கையில் இருக்கும்போது ஆசைப்பட்ட பொருட்களை வாங்கிக் குவிக்காதீா்கள்.
வயோதிக காலத்தில் அவைகளை பராமரிக்க முடியாமல் போய் அழிந்த விலைக்கு விற்கும் சூழல் வந்துவிடும். நாம் நன்றாக வாழ்ந்தால் நம்மிடம் ஆரலோசனை கேட்கும் கூட்டம் நாம் நொடித்துப்போய்விட்டால் வயது வித்யாசம் பாராமல் அட்வைஸ் செய்வழோடு உங்களுக்கு வாழத்தொியவில்லை என ஏளனமே பேசுவாா்கள். ஏளனம்பேசுவோா் பேசட்டும்.
நமது வேலை என்னவோ அதைப்பாா்த்துக்கொள்வதே நல்லது. அநேகமாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் நல்ல நட்புறவோடு பழகுங்கள். ஆனால் அவர்கள் குடும்ப விஷயங்களில் தலையிடாமல் இருப்பதும் நல்லதுதான்.
பொதுவாகவே அனுசரிப்பு தேவைதான் என பொியவர்களாகி நாம் எதைச்சொன்னாலும் அவர்கள் கேட்பார்கள் என நினைப்பதும் தவறானதே எண்ணம் போலவே வாழ்வு அமையும் ஆக நல்ல எண்ணங்களாடு வாழலாமல்லவா!