உங்களை வம்புக்கு இழுக்கிறார்களா? எரிச்சலடைய செய்யாமல் பழிவாங்கும் மௌனத்தின் வலிமை!

எதிரிகளைத் தோற்கடிக்க கோபமோ வாதமோ தேவையில்லை; உங்கள் அமைதியே அவர்களை நிலைகுலைய வைக்கும்.
மௌனத்தின் வலிமை
மௌனத்தின் வலிமைGemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

வார்த்தைகளைவிட மௌனத்திற்கு அதிக வலிமை உண்டு என்ற கருத்தை மையமாகக் கொண்டு, தூண்டுதல்களுக்கு பதில் சொல்லாமல் இருப்பதே உண்மையான மனவலிமை என இந்த கட்டுரை கூறுகிறது. நம்மை வம்புக்கு இழுப்பவர்கள் எதிர்பார்ப்பது கோபமும் வாதமுமே; ஆனால் நம் அமைதி அவர்களின் முயற்சியை தோல்வியடையச் செய்து, அவர்களை சுயபரிசோதனை செய்ய வைக்கும் சக்தி வாய்ந்த ஆயுதமாக அமைகிறது.

பேச்சினாலோ, கோவத்தினாலோ, வேதனையாலோ நம் எதிரிகளை தோற்கடிக்க முடியாது. காரணம் நம்முடைய வேகமான எதிர்வினை நம் எதிரிகளை உற்சாகப்படுத்தும் டானிக்காக அமைந்துவிடும். நம்மை சீண்டி பார்ப்பவர்களுக்கு நம் மௌனம்தான் சரியான பதிலாக இருக்க வேண்டும். யார் எது பேசினாலும் அதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை.

பிறர் நம்மை எல்லோர் முன்னிலையிலும் கேலியோ கிண்டலோ செய்தால் உடனே நாம் பொதுவாக நம் கோபத்தை அல்லது வேதனையை வெளிப்படுத்துவோம். சில சமயம் புலம்பவும் செய்வோம். இது ஒரு தவறான போக்கு. காரணம் இப்படி நாம் உடனடியாக செயல்படுவதால் அவர்கள் மேன்மேலும் நம்மை நோகடிப்பதை வேலையாகக் கொள்வார்கள்.

எனவே இம்மாதிரியான சமயங்களில் நம்முடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் மௌனமாக இருந்து விடுவதுதான் அவர்களுக்கு நாம் தரும் சிறந்த பதிலடி. எனவே யார் எது பேசினாலும் அதற்கு திருப்பி பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டாலே போதும் நம் மனம் புண்படாது. 

நம்மை சீண்டி பார்ப்பவர்களுக்கு நம்முடைய மௌனமே மிகச்சிறந்த மற்றும் சக்தி வாய்ந்த பதிலடி ஆகும். நாம் காட்டும் மௌனம் பல நேரங்களில் வார்த்தைகளை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நம்மை வம்புக்கு இழுப்பவர்கள் நாம் கோபப்பட வேண்டும் அல்லது வாதாட வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள். நாம் அமைதியாக இருக்கும்போது அவர்களின் அந்த முயற்சி தோல்வி அடைகிறது. தேவையில்லாத நபர்களிடம் பேசி நம்முடைய நிம்மதியையும் நேர்மறை ஆற்றலையும் வீணாக்குவதை மௌனம் தடுக்கிறது. 

மௌனத்தின் வலிமை
மௌனத்தின் வலிமைGemini image

நம்முடைய மௌனம் நம்மை சீண்டுபவர்களை சுயபரிசோதனை செய்ய வைக்கும் அல்லது அவர்களை இன்னும் அதிக எரிச்சல் அடையச் செய்யும். தகுதியற்ற விமர்சனங்களுக்கு பதில் அளிக்காமல் கடந்து போவது சமூகத்தில் நம்முடைய முதிர்ச்சியையும், கம்பீரத்தையும் உயர்த்திக்காட்டும். "வார்த்தைகளைவிட மௌனத்திற்கு வலிமை அதிகம்".

இதையும் படியுங்கள்:
உங்க நிம்மதியை கெடுக்கும் உறவுகளை ஈஸியா கையாளுவது எப்படி.. சீக்ரெட் டிப்ஸ் இதோ!
மௌனத்தின் வலிமை

சலசலப்புகளுக்கு பதில் தராமல் நம்முடைய பாதையில் நாம் முன்னேறிச் செல்வதே அறிவாளித்தனம். நம்மைச்சீண்டி பார்ப்பவர்களுக்கு நம் மௌனம் ஏமாற்றத்தைத்தான் தரும். வார்த்தைகளை கொட்டிவிட்டு பின் விளைவுகளை சந்திப்பதைவிட அமைதியாக கடந்து போவதுதான் நல்லது.

நாம் திருப்பிப் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவர்களுக்கு உற்சாகத்தை தருமே தவிர நமக்கு மன அமைதியைத் தராது. எனவே தேவையில்லாத வாதங்களில் நம்முடைய நல்ல ஆற்றலையும், நேரத்தையும் வீணாக்காமல் இருப்பது நல்லது. நாம் கோபப்படுவோம் என்று எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நம்முடைய மௌனம் ஒரு பெரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தரும்.

எனவே அமைதியாக இருப்பது பலவீனம் அல்ல; அது தேவையற்ற விஷயங்களை புறக்கணிக்கும் ஆகச்சிறந்த மனவலிமையாகும். இந்த உன்னதமான பண்பை வளர்த்துக்கொள்வது நல்லது.

வார்த்தைகளைவிட சில நேரங்களில் அமைதி அதிக சக்தி வாய்ந்தது. இது மற்றவர்களின் எதிர்மறை எண்ணங்களும் செய்கைகளும் நம்முடைய உள்மன நிம்மதியைக் குலைக்காமல் தடுக்கிறது. நாம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்பதை முதலில் உணரவேண்டும்.

இதையும் படியுங்கள்:
வன்மம் ஒரு நஞ்சு: நிம்மதியான வாழ்விற்குத் தேவையா கோபம்?
மௌனத்தின் வலிமை

இதுவே நம்முடைய மனமுதிர்ச்சியைக் காட்டும். வார்த்தைகளால் வெல்வதைவிட, நம்முடைய அமைதியாலும் வெற்றியாலும் அவர்களைக் கடந்து போவதே நமக்கான உண்மையான கௌரவம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கோபத்தில் பேசும் வார்த்தைகள் சூழ்நிலையை மேலும் மோசமாக்கும். நாம் அவர்களின் தூண்டுதலுக்கு ஆளாகவில்லை என்பதைக் காட்டுவதே அவர்களுக்கு நாம் கொடுக்கும் பெரிய தண்டனையாகும். அவர்கள் தங்களின் செயலை நினைத்து சோர்வடைந்து போவதற்கு இது வழிவகுக்கும். மௌனம் என்பது பலவீனம் அல்ல; அது பலம்.

தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து நம்முடைய மன அமைதியைக் காக்கும் சக்தி வாய்ந்த ஆயுதம். இது நம்மை சீண்டுபவர்களை சிந்திக்க வைப்பதுடன், அவர்களின் முயற்சியை வீணடிக்கவும் செய்யும். வார்த்தைகளை விட மௌனத்திற்கு ஆழமான அர்த்தமும், எதிராளியை சிந்திக்க வைக்கும் சக்தியும் அதிகம் உண்டு.

பிறரின் தேவையற்ற சீண்டல்களுக்கு எதிர்வினை ஆற்றாமல் அமைதி காப்பதே உண்மையான மனவலிமை மௌனத்தின் வலிமை என்பதை உணர்ந்து, மன அமைதியையும் சமூகத்தில் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ளும் தெளிவு கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com