தோல்வியை யாருக்கும் தெரியாம கொண்டாடுங்க.. வாழ்க்கை மாற இதுதான் வழி!

மொபைல் போன் இல்லாத ஒரு தரமான தனிமை நேரம் உங்களை எப்படி ஒரு புதிய மனிதராக மாற்றும் என்பதற்கான உளவியல் ரகசியங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
Power of solitude தனிமை நேரம்
Power of solitude தனிமை நேரம்
Updated on

வாழ்க்கையின் மிக முக்கியமான பாடங்களை நாம் கூட்டத்தில் இருப்பதைக் காட்டிலும் தனியாக இருக்கும்போதுதான் அதிகமாகக் கற்றுக்கொள்கிறோம். வெளியில் உள்ள சத்தங்களை விலக்கிவிட்டு நமக்கான தனிமை நேரம் கிடைக்கும்போதுதான் உண்மையான சுய வளர்ச்சி சாத்தியமாகிறது. இதைத்தான் பலரும் இன்று தவறவிடுகிறார்கள்.

மாயையான தொழில்நுட்ப உலகம்!

இன்றைய காலகட்டத்தில் பலரும் தாங்கள் தனியாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அவர்கள் உடல் அளவில் மட்டுமே தனியாக இருக்கிறார்கள். கைகளில் உள்ள ஸ்மார்ட்போன்கள் மூலமாக உலகத்துடன் எந்நேரமும் தொடர்பிலேயே இருக்கிறார்கள். இதனால் உண்மையான அமைதி அவர்களுக்குக் கிடைப்பதே இல்லை. டிஜிட்டல் திரைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு தங்களை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்பதை அவர்கள் உணருவதில்லை.

அமைதியைக் கண்டு அஞ்சுவது ஏன்?

நாம் ஏன் அமைதியைக் கண்டு ஓடுகிறோம் என்பதற்கு ஒரு வலுவான காரணம் உள்ளது. அமைதி நிலவும்போது நமது மூளைக்குள் ஓடும் உண்மையான எண்ணங்களை நாம் சந்திக்க வேண்டி வரும். நீண்ட நாட்களாக நாம் தள்ளிப்போட்ட ஆசைகள் மற்றும் நமக்குப் பிடிக்காத சில கசப்பான உண்மைகள் அந்த அமைதியில்தான் விஸ்வரூபம் எடுக்கும். அந்த உண்மைகளை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாததாலேயே சத்தங்களை நோக்கி ஓடுகிறோம்.

Power of solitude தனிமை நேரம்
Power of solitude தனிமை நேரம்

சுய தெளிவும்!

ஒருவர் தனியாக இருக்கும்போது கிடைக்கும் சுய தெளிவு ஆரம்பத்தில் சற்று கடினமாகவும் அசௌகரியமாகவும் தோன்றலாம். ஏனெனில் நாம் யாரிடமெல்லாம் பொய் சொல்லியிருக்கிறோம் என்பது அப்போதுதான் புரிய வரும். ஆனால் அந்த சமூகத் திரையை விலக்கிவிட்டுப் பார்க்கும்போது சுயமாக முடிவெடுக்கும் திறன் அபாரமாக வளரும். மற்றவர்களின் அங்கீகாரம் இல்லாமல் நமக்கான பாதையை நாமே தேர்ந்தெடுக்கும் மாபெரும் தன்னம்பிக்கை அப்போது பிறக்கும்.

யாருக்கும் தெரியாமல் தொற்றுப் பழகுங்கள்!

தனிமையில் இருப்பதன் மிக முக்கியமான இன்னொரு நன்மை தோல்விகளை அமைதியாக எதிர்கொள்வதாகும். ஒரு விஷயத்தில் நாம் தோற்றுப்போனால் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மற்றவர்களின் அனுதாபத்தைத் தேட வேண்டியதில்லை. நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக்கொண்டு யாருடைய கேலிப் பேச்சுகளுக்கும் ஆளாகாமல் மீண்டும் எழுந்து நிற்கலாம். இந்த ரகசியமான தோல்விகள்தான் பிற்காலத்தில் மாபெரும் வெற்றிகளுக்கான உறுதியான அடித்தளமாக அமைகின்றன.

இதையும் படியுங்கள்:
நரைமுடிய பார்த்து பயப்படுறீங்களா... உளவியல் சொல்ற அதிர்ச்சி உண்மை இதோ!
Power of solitude தனிமை நேரம்

உளவியல் ரீதியாகப் பார்த்தால் கூட அமைதியான சூழ்நிலையில் நமது மூளையின் செயல்திறன் பல மடங்கு அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தியானம் போன்ற விஷயங்கள் கூட இந்த அமைதியை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றன. ஒரு மனிதன் தன்னுடைய சொந்த குணாதிசயங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் இந்த அமைதியான சூழல் பெருமளவு உதவி செய்கிறது.

தொடர்ந்து மற்றவர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் நமக்கான நேரத்தை ஒதுக்க மறந்துவிடுகிறோம். தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது எந்தவொரு மின்னணு சாதனங்களும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்கப் பழக வேண்டும். அப்போது தோன்றும் எண்ணங்களை ஒரு குறிப்பேட்டில் எழுதுவது மனதிற்குப் பெரிய விடுதலையைக் கொடுக்கும். இது சிறந்த ஆளுமைத் திறனை வளர்க்க உதவும் மிகச் சிறந்த உளவியல் பயிற்சியாகும்.

இதையும் படியுங்கள்:
விளாடிமிர் லெனின்: உலக வரலாற்றைத் திருப்பிப் போட்ட முக்கிய தருணங்கள்!
Power of solitude தனிமை நேரம்

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் பல மாபெரும் அறிஞர்களும் தலைவர்களும் தங்களின் தனிமையில்தான் உலகை மாற்றும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர். ஐசக் நியூட்டன் முதல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வரை பலரும் தங்களுக்குள் ஆழ்ந்து சிந்திக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அதனால்தான் அவர்களால் மற்றவர்கள் சிந்திக்கத் தவறிய விஷயங்களை மிக எளிதாகக் கண்டறிய முடிந்தது. நமக்கான வழியை நாமே அமைத்துக்கொள்ள இந்த அமைதிப் பயணம் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

logo
Kalki Online
kalkionline.com