வாழ்க்கையில் எப்போதும் கவலை, பயமா? உங்கள் மனதை கூல் செய்ய இந்த ஒரு சைக்காலஜி ட்ரிக் போதும்!

கஷ்டங்கள் குறையவில்லை என்றாலும் மன அமைதியை இழக்காமல் வாழ உதவும் 'சைக்காலஜிக்கல் ஃபிளெக்சிபிலிட்டி' வழிமுறைகள்!
மன அமைதி
மன அமைதிGemini image
A.N.ராகுல்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ராகுல் நான் ஒரு பொறியியல் பட்டதாரி, தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் எழுத்து துறையில் என்னை இணைத்துள்ளேன். என்னுடைய பொதுவான குறிக்கோள் நான் செய்யும் விஷயங்களால் மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்பதே, அதை என் தாய்மொழி மூலம் இந்த எழுத்து துறையின் வாயிலாக பங்காற்ற விரும்புகிறேன். ஆக வாசகர்களே நீங்கள் என் சேகரிப்புகளை பொழுதுபோக்கு, பொது அறிவு என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இறுதியில் நீங்கள் பெரும் அந்த திருப்திகரமான உணர்வே, நான் எழுதுவதற்கு கிடைத்த பலன்.

Updated on: 

கொஞ்ச நாளைக்கு முன்னாடி எனக்கு நிறைய பிரச்னை வந்தப்போ டென்ஷனும், ஏமாற்றமும் மாறி மாறி வந்துருச்சி. "நம்ம லைஃப்ல இருக்குற அத்தனை பிரச்னைகளும் தீர்ந்ததுக்கு அப்புறம்தான் நாம நிம்மதியா வாழ முடியுமோ?"ன்னு எனக்குள்ளேயே ஒரு டவுட் வந்தது. ஆனா, இதப்பத்தி நான் கொஞ்சம் ஆழமா யோசிச்சி, சில உண்மைகளைத் தெரிஞ்சிகிட்ட அப்புறம்தான் உண்மையான சந்தோஷம்னா என்னன்னு எனக்குப் புரிஞ்சது!. நிஜத்துல, வாழ்க்கையில் பிரச்னையே வரக்கூடாதுன்னு நினைக்கிறது முட்டாள்தனம். கவலை, பயம்னு என்ன கஷ்டம் வந்தாலும், நம்ம நிம்மதியை இழக்காம ‘நம்மையே நாமே கூல் பண்ணி’ சமாளிக்கிறதுதான் நிஜமான ஹேப்பினஸ்ஸாம் (Happy).

சைக்காலஜி டாக்டர்ஸ் இந்தச் சூப்பரான திறமையை 'சைக்காலஜிக்கல் ஃபிளெக்சிபிலிட்டி' (Psychological Flexibility) அதாவது 'சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி வளைஞ்சு குடுத்துப் போற குணம்’னு சொல்றாங்க. நெகட்டிவ் எண்ணங்கள் நம்மள முழுசா லாக் பண்ணவிடாமல், அதை அப்படியே இயல்பா ஏத்துக்கிட்டுக் கடந்து போற பக்குவம்தான் இது.

சோகமும், மகிழ்ச்சியும் ஒண்ணா இருக்க முடியுமா?

கண்டிப்பா முடியும்! நம்ம ஆளுங்கள்ல பல பேரு 'மகிழ்ச்சிக்கு ஆப்போசிட் தான் சோகம்'னு தப்பா நினைச்சுக்கிறாங்க. ஆனா நிஜத்துல, மனரீதியா ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குறவங்க நிறைய நேரத்துல இந்த ரெண்டு உணர்வுகளையும் ஒண்ணா உணருவாங்க.

உதாரணமா, குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னா பெத்தவங்களுக்கு மனசுக்குள்ள ஒரு பக்கம் பயமும், கவலையும் இருக்கும். ஆனா, அதே நேரம் அவங்க மனசோட ஏதோ ஒரு ஓரத்துல குழந்தைய நல்லபடியா பாத்துக்கணும்ங்கிற ஒரு நம்பிக்கையும், குழந்தை மேல வச்சிருக்கற அந்த கொள்ளை பாசமும் ஒரு வித சந்தோஷத்த அவங்களுக்குள் உணர வைக்கும்.

மன அமைதி
மன அமைதிGemini image

அதனால, "இந்தக் கவலையை நான் எப்படி விரட்டுறது?"ன்னு யோசிச்சு டைம் வேஸ்ட் பண்ணாம, "இந்தச் சூழ்நிலையை நான் எப்படி எதிர்கொள்றது?"ன்னு மாத்தி யோசிச்சா நம்ம மனசு தானா ஸ்ட்ராங் ஆயிடும்.

ஒரு சிம்பிள் டெக்னிக்: தள்ளி நின்னு பாருங்க:

நமக்கு கோபமோ, ஏமாற்றமோ வரும்போது மனசுக்குள்ள ஒரு சின்ன கேம் விளையாடலாம். இதை சைக்காலஜிப்படி 'செல்ஃப் டிஸ்டன்சிங்' (Self Distancing) அப்படின்னு சொல்றாங்க. இதைப் பத்தி மிச்சிகன் யூனிவர்சிட்டியோட(University of Michigan) ஒரிஜினல் சைக்காலஜி ரிசர்ச் (Psychology Research) வெப்சைட்ல என்ன சொல்றாங்கன்னா, அதாவது, ஒரு பிரச்னைக்குள்ளேயே நாம முழுசா மூழ்கிப் போயிடாம, மனசுக்குள்ள அந்தப் பிரச்னையை அப்படியே கொஞ்சம் ஓரமா வச்சுட்டு, மூணாவது மனுஷனா நம்மளையே நாம வேடிக்கை பாக்குற மாதிரி வெளிய இருந்து பாக்கணுமாம்.

"ஐயோ! எனக்கு ஏன் எப்பவுமே இப்படி நடக்குது?"ன்னு புலம்புறதை விட்டுட்டு, "இப்போ ராகுல் (நீங்களே உங்க பேரைச் சொல்லி) இந்த நிலைமையில இருந்தா இந்தக் கண்டிஷனை எப்படி சமாளிப்பான்?" அப்படின்னு யோசிச்சுப் பாருங்க.

இதையும் படியுங்கள்:
ஸ்ட்ரெஸ், கவலையால் நிம்மதியிழந்து தவிக்கிறீர்களா? மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைக்க எளிய வழிகள்!
மன அமைதி

இப்படி யோசிக்கும்போது, அந்தப் பிரச்னைக்கும், உங்களுக்கும் நடுவுல ஒரு நல்ல கேப் கிடைக்கும்; சில நேரம் அந்தப் பிரச்னைய சமாளிக்க உங்க பலம் என்னன்னு உங்களுக்குத் தெரியவரும். சோ, பிரச்னை அப்படியே இருந்தாலும், அது உங்க மைண்ட முழுசா பிடிச்சு வச்சுக்காது (உங்களை லாக் பண்ணாது).

உண்மையான மகிழ்ச்சி எதுன்னு புரிஞ்சிருச்சா?

நிஜமான மகிழ்ச்சிங்கிறது 24 மணி நேரமும் சும்மா வெளில சிரிச்ச மூஞ்சியோட சுத்திக்கிட்டு இருக்கிறதோ அல்லது நடிக்கிறதோ கிடையாது. ஏன்னா, நம்ம மனசுக்குள்ள வர்ற கோபம், கவலை எல்லாமே வந்துட்டுப் போற விருந்தாளிங்க மாதிரி; அவங்க இங்கேயே தங்கிட மாட்டாங்க. பார்பரா ஃபிரெட்ரிக்சன் (Barbara Fredrickson) அப்படிங்குற சைக்காலஜி டாக்டர் அவங்களோட அதிகாரப்பூர்வ 'பிராடன் அண்ட் பில்ட்' தியரில (Broaden and Build Theory) என்ன சொல்றாங்கன்னா, ‘நாம ஜாலியா இருக்குற நேரத்துல நம்ம மூளை ரொம்ப சூப்பரா வேலை செய்யும்.

இதையும் படியுங்கள்:
மத்தவங்கள பார்த்து வாழ ஆசையா? சயின்ஸ் சொல்லும் எச்சரிக்கை!
மன அமைதி

புதுசு புதுசா யோசிக்க அது நமக்கு ஹெல்ப் பண்ணும்.’ சுருக்கமா சொன்னா, மகிழ்ச்சிங்கிறது கஷ்டங்களைத் தாங்குறதுக்கான சக்தி மட்டும் இல்ல, அது புது சக்தியை உருவாக்குற ஒரு பேட்டரி மாதிரியாம்!

வாழ்க்கைப் பிரச்சினைகளைத் துடைத்தெறிய முடியாவிட்டாலும், மன ரீதியாகப் பாதிக்கப்படாமல் நம்மை நாமே மன அமைதிப்படுத்தி, நெகிழ்வுத்தன்மையோடு வாழும் பக்குவத்தை வாசகர் அடைவார்.

logo
Kalki Online
kalkionline.com