மத்தவங்கள பார்த்து வாழ ஆசையா? சயின்ஸ் சொல்லும் எச்சரிக்கை!

சமூக வலைத்தள ஒப்பீடுகளால் மன நிம்மதியை இழப்பவர்களுக்கு அறிவியல் காட்டும் உண்மையான பாதை.
மன நிம்மதி
மன நிம்மதிGemini image
A.N.ராகுல்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ராகுல் நான் ஒரு பொறியியல் பட்டதாரி, தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் எழுத்து துறையில் என்னை இணைத்துள்ளேன். என்னுடைய பொதுவான குறிக்கோள் நான் செய்யும் விஷயங்களால் மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்பதே, அதை என் தாய்மொழி மூலம் இந்த எழுத்து துறையின் வாயிலாக பங்காற்ற விரும்புகிறேன். ஆக வாசகர்களே நீங்கள் என் சேகரிப்புகளை பொழுதுபோக்கு, பொது அறிவு என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இறுதியில் நீங்கள் பெரும் அந்த திருப்திகரமான உணர்வே, நான் எழுதுவதற்கு கிடைத்த பலன்.

Updated on: 

இன்னைக்கு இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஓப்பன் பண்ணாலே எல்லாரும் கார், பங்களா, வெளிநாடு ட்ரிப்னு (Foreign Trip) செம ஹாப்பியா இருக்கிற மாதிரி போட்டோஸ் போடுறாங்க.

இதைப் பார்க்கும்போது, “எந்த விலை கொடுத்தாவது நாமளும் இவங்கள மாதிரி வாழணும்" என்கிற ஆசை நமக்குள்ள வர்றது ரொம்ப இயல்புதான். மத்தவங்கள பார்த்து ‘இன்ஸ்பயர்’ ஆகி நம்ம வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறது தப்பில்லை. ஆனா, கண்மூடித்தனமா அவங்கள அப்படியே காப்பி அடிக்க நினைச்சா... அது பயங்கரமான மன அழுத்தம், நம்ம அடையாளத்தை மற்றும் நிம்மதிய இழக்க தான் ரூட் போட்டுத் தரும்னு சயின்ஸ் எச்சரிக்குது!

நானும் ஒரு காலத்துல சோஷியல் மீடியாவை பார்த்துட்டு, "அவங்கள மாதிரி காஸ்ட்லி போன் வாங்கணும், ஆடம்பரமா வாழனும்னு” ஆசையோ ஆசை அப்படி ஆசைப்பட்டேன். அப்புறம்தான் புரிஞ்சது, அதுல எவ்வளவு உண்மை, எவ்வளவு டூப்பு இருக்குனு தெரிஞ்சுக்கிட்டு, அந்த டிஜிட்டல் வேர்ல்ட்ல இருந்து வெளிய வந்தேன்!

அந்த தீப்பொறி எங்கே தொடங்குது?

மத்தவங்க சந்தோஷமா இருக்கிறதைப் பார்த்து நாமளும் அதைத்தேடி ஓடுறதுக்கு பின்னாடி ஒரு காரணம் இருக்கு.

சைக்காலஜிஸ்ட் ராய் பாமிஸ்டர் மற்றும் மார்க் லியரி(Roy Baumeister, Mark Leary) அவங்க எழுதிய 'சேர்ந்திருக்க வேண்டிய தேவை' (Need to Belong) என்ற தியரில இதைப் பத்தி சொல்லியிருக்காங்க.

உணவு, உடை மாதிரி மத்தவங்களோடு சேர்ந்து சந்தோஷமா இருக்கணும்ங்கிறது மனிதனோட அடிப்படைத் தேவை. உலக மகிழ்ச்சி ரிப்போர்ட் 2025 (World Happiness Report) கூட, நல்ல உறவுகள் அல்லது மனிதர்கள் எப்பவுமே ஒருத்தரோட மனநிம்மதியை அதிகமாக்கும்னு சொல்லுது. ஆனா, இது சும்மா ஒரு பாசிட்டிவ் மோட்டிவேஷனா மட்டும் தான் இருக்கணும்.

மன நிம்மதி
மன நிம்மதிGemini image

மத்தவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்குறதுல இருக்குற ஒரு பெரிய ஆபத்து! "அவங்கள மாதிரி வாழ எந்த எல்லைக்கும் போவேன்னு” நாம முடிவெடுக்கும் போதுதான் ஆபத்து தொடங்குது. புகழ்பெற்ற 'மகிழ்ச்சி ஆய்வுகள் இதழ்' (Journal of Happiness Studies) வெளியிட்ட ஆய்வுப்படி, மத்தவங்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்குறது தற்காலிகமானதே தவிர, ‘நம்மகிட்ட இருக்குறதை வச்சு நம்மை நாமே அப்படியே ஏத்துக்கிட்டு, நமக்குப் பிடிச்ச மாதிரி வாழ்றதுதான் ஒருத்தருக்கு உண்மையான மகிழ்ச்சியைத்தரும்.’

இதையும் படியுங்கள்:
நகைச்சுவை உணர்வு ஏன் அவசியம்? வாழ்க்கை மாற உதவும் ரகசியம்!
மன நிம்மதி

நம்ம மனசாட்சிக்கு செட் ஆகாத ஒரு ஆடம்பர வாழ்க்கையை மத்தவங்களுக்காக வாழ நினைக்கும்போது ஏமாற்றம்தான் மிஞ்சும்.

மூளை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் (Neuroscience) ஆய்வுகளின்படி, ‘நம்ம கூட இருக்குற கூட்டமோ அல்லது ஒரு குரூப்ல நம்மை சேர்த்துக்காம ஒதுக்கி வைக்கும்போது, நமக்கு வர்ற அந்த மன வேதனை சும்மா சாதாரணமானது கிடையாது. உடம்புல அடிபட்டு காயம் ஏற்பட்டா மூளையில எந்தப் பகுதி அந்த வலியை உணர்த்துமோ, அதே பகுதிதான் மனசு காயப்படும் போதும் வலிக்கிறதை உணர்த்துது" அப்படின்னு அறிவியல் பூர்வமா கண்டுபிடிச்சிருக்காங்க

சரி மத்தவங்களைபோல வாழ நினைக்கிறதா? இல்ல நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்றதா?

உண்மையான மகிழ்ச்சி என்பது அடுத்தவனைக் காப்பி அடிக்கிறதுல இல்லங்க, நம்ம அசல் அடையாளத்துல (Authenticity) தான் இருக்கு. ஸ்டான்போர்டு பல்கலைக்கழக (Stanford University) பேராசிரியர் கிரிகோரி வால்டன் (Gregory M. Walton), "நம்ம அடையாளம் எதுன்னு தெரியாம தவிக்கும்போது, அது நம்ம சிந்தனைத் திறனையும் நல்வாழ்வையும் சிதைக்கும்னு” சொல்றார். ஆல்பர்ட் காம்யூ(Albert Camus) இந்த கட்டுரைக்கு ஏத்த மாறி சொல்லியிருக்கார்.

இதையும் படியுங்கள்:
ஸ்ட்ரெஸ், கவலையால் நிம்மதியிழந்து தவிக்கிறீர்களா? மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைக்க எளிய வழிகள்!
மன நிம்மதி

"மகிழ்ச்சியாக இருக்க, நாம் மற்றவர்களை பற்றி அதிகம் கவலைப் படக்கூடாது."

அடுத்தவங்களை பார்த்து இன்ஸ்பயர் ஆகுங்க, ஆனா அவங்களாவே மாற துடிக்காதீங்க. மகாத்மா காந்தி சொன்னதுபோல, உண்மையான செல்வம் நம்ம ஆரோக்கியமும், மன நிம்மதியும்தான். உங்க சொந்த வாழ்க்கையை உங்க ஸ்டைலில் ரசிச்சு வாழ பழகுங்க, அப்பதான் உங்க ரேஞ்சே வேற லெவலுக்கு மாறும்!

அடுத்தவர்களின் ஆடம்பர வாழ்க்கையைப் பார்த்து நம்மை ஒப்பிடுவதை நிறுத்தி, சொந்த அடையாளத்துடன் மன நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கான தெளிவு கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com