இந்த 8 ட்ரிக்ஸ் தெரிந்தால் நீங்களும் ஸ்மார்ட்தான்.. இளைஞர்களுக்கான ஸ்பெஷல் பதிவு!

Psychology Tricks
Psychology Tricks
கிரி கணபதி

கிரி கணபதி, 8 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட எழுத்தாளர். Quora போன்ற தளங்களில் எழுதிய அனுபவம் உண்டு.. வீடியோ, பாட்காஸ்ட் வெளியிட்ட அனுபவமும், AI கருவிகளை கையாளும் திறனும் கொண்டவர். ஆரோக்கியம், தன்னம்பிக்கை, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வுப்பூர்வமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

இந்த நவீன காலத்தில் வெறும் படிப்பு மற்றும் கடின உழைப்பு மட்டும் ஒருவரை வெற்றியாளராக மாற்றிவிடாது. நம்மைச் சுற்றி இருப்பவர்களின் மனநிலையை அறிந்துகொள்வதும், சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை நாமே மாற்றிக்கொள்வதும் மிக மிக அவசியமான ஒரு கலையாகும். அதிலும் குறிப்பாக, இளைஞர்கள் தங்கள் கேரியர், நட்பு, சமூக வாழ்க்கையில் பலவிதமான சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. 

மனிதர்களின் மனது எப்படி வேலை செய்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் சைக்காலஜி எனப்படும் உளவியல், இந்த சவால்களை மிக எளிதாகக் கையாள ஒரு பெரிய ஆயுதமாகப் பயன்படுகிறது. வாழ்க்கையில் ஒரு ஸ்மார்ட்டான நபராக வலம் வர, ஒவ்வொரு ஆணும் கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டிய 8 முக்கியமான சைக்காலஜி தந்திரங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

பசங்களுக்கான 8 சைக்காலஜி சீக்ரெட்ஸ்!

1. நீங்கள் ஒருவரிடம் பேசும்போது அவர்களின் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவது உங்களின் அசைக்க முடியாத தன்னம்பிக்கையைக் காட்டும். பார்வையைத் தவிர்ப்பது அல்லது கீழே பார்ப்பது உங்களை பலவீனமானவராக வெளிப்படுத்தும்.

2. எப்போதுமே நீங்களே பேசிக்கொண்டிருப்பதைத் தவிர்த்துவிட்டு, எதிரில் உள்ளவர்கள் சொல்வதைக் கூர்ந்து கவனிக்கப் பழகுங்கள். மனிதர்கள் தங்களைக் காது கொடுத்துக் கேட்பவர்களைத்தான் தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகக் கருதுவார்கள்.

3. யாராவது உங்களைக் கடுமையாகக் கோபப்படுத்தினால் உடனே எந்த ஒரு ரியாக்‌ஷனும் காட்டாதீர்கள். சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டுப் பிறகு நிதானமாகப் பதில் சொல்வது உங்களை ஒரு முதிர்ச்சியான நபராகக் காட்டும்.

4. ஒரு விவாதத்தில் உங்களுக்குப் பதில் தெரியவில்லை என்றாலோ அல்லது அடுத்தவர் சொல்வது முட்டாள்தனமாக இருந்தாலோ, அமைதியாகச் சிரித்துக்கொண்டே இருங்கள். உங்களின் அந்த ஆழ்ந்த அமைதி அவர்களைப் பெரிய குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.

இதையும் படியுங்கள்:
தேவை எது? ஆடம்பரம் எது? – ஒரு தெளிவான பார்வை!
Psychology Tricks

5. நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் ஒரு மனிதனுக்கு மிக முக்கியம். கைகளைக் கட்டிக்கொண்டு குறுகி நிற்பது அல்லது நகம் கடிப்பது உங்களை ஒரு தயக்கமான நபராக மற்றவர்களுக்கு அடையாளம் காட்டிவிடும்.

6. மற்றவர்களைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களுக்குத் தலையாட்ட வேண்டாம். சரியான இடத்தில் தெளிவாக 'NO' சொல்வது உங்கள் மீதான மரியாதையை பல மடங்கு அதிகரிக்கும்.

7. நீங்கள் ஒருவரை எளிதாக ஈர்க்க வேண்டும் என்றால், அவர்களின் உடல் அசைவுகளை அல்லது பேசும் விதத்தை மிக மென்மையாகப் பிரதிபலியுங்கள். இது அவர்களுக்கு உங்கள் மீது ஒரு நம்பகத்தன்மையையும் நெருக்கமான உணர்வையும் ஏற்படுத்தும்.

8. எனக்கு எல்லாமே தெரியும் என்று நினைப்பது ஈகோ. என்னால் எதையும் கற்றுக்கொள்ள முடியும் என்று நினைப்பது தன்னம்பிக்கை. இந்த இரண்டிற்கும் உள்ள மெல்லிய கோட்டைப் புரிந்துகொண்டு நடப்பது ஒரு சிறந்த ஆளுமையின் மிகப்பெரிய அடையாளம்.

இதையும் படியுங்கள்:
அரசியல் களம் : இந்த வாரம், இவ்ளோதான்!
Psychology Tricks

இந்த சைக்காலஜி தந்திரங்கள் உங்களை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டி, ஒரு ஈர்ப்பு மிக்க மனிதராக மாற்றப் பெரிதும் உதவும். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், உங்களை நீங்களே செதுக்கிக்கொள்வதில் முழுக் கவனம் செலுத்துங்கள்.