வாழ்க்கை என்றால் என்ன? ராகேஷ் ஜூன்ஜூன்வாலா உலகிற்கு விட்டுச் சென்ற கடைசிப் பாடம்! ​

உங்கள் குழந்தைகளுக்குப் பணக்காரர்களாக வளரக் கற்றுக் கொடுக்காதீர்கள். மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொடுங்கள்.
Rakesh Jhunjhunwala
Rakesh JhunjhunwalaImg credit: AI Image
Published on

இன்றைய உலகத்தில் வெற்றி என்றால் பெரும்பாலும் பணமும் புகழும் தான் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் வாழ்க்கையின் உண்மையான மதிப்பு அதைவிட மிக ஆழமானது. உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் வாழ்க்கை இதற்கே ஒரு பெரிய எடுத்துக்காட்டு.

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, இந்தியாவின் மிகவும் புகழ் பெற்ற பங்கு சந்தை முதலீட்டாளர். அவரை, பலர் 'India's Warren Buffet' , 'Big Bull of Dalal Street' என்று அழைப்பார்கள்.

ஆரம்பத்தில், ஐயாயிரம் ரூபாய் முதலீட்டுடன் பங்கு சந்தையில் நுழைந்தார். அவர் இறக்கும்பொழுது அவரின் சொத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 4,85,56,75,90,000.00.

கடைசி நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்த பொழுது வெளியிட்ட செய்தியைத் தான் இப்பொழுது பார்க்கிறோம்.

"தொழில் உலகில் நான் வெற்றியின் உச்சியை அடைந்துவிட்டேன். மற்றவர்களின் பார்வையில் என் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய சாதனை. ஆனால், வேலையைத் தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி இருந்ததில்லை. பணம் மட்டுமே நான் அறிந்த ஒரே உண்மையாக இருந்தது.

இப்போது மருத்துவமனைப் படுக்கையில் படுத்துக்கொண்டு என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். நான் எதை நினைத்துப் பெருமைப்பட்டேனோ, அந்த அடையாளமும் பணமும் மரணத்தின் முன் பொய்யாகி, பயன் அற்றதாகிவிட்டதை உணர்கிறேன்.

​உங்கள் காரை ஓட்டவோ அல்லது உங்களுக்காகப் பணம் சம்பாதிக்கவோ நீங்கள் ஒருவரை வேலைக்கு அமர்த்தலாம். ஆனால், உங்கள் சார்பாகத் துன்பப்படுவதற்கும், சாவதற்கும் ஒருவரை நீங்கள் வேலைக்கு அமர்த்த முடியாது.

​தொலைந்து போன பொருட்களை மீண்டும் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், தொலைந்தால் மீண்டும் கிடைக்காத ஒரே விஷயம் - 'வாழ்க்கை'.

​நாம் வாழ்க்கையின் எந்தக் கட்டத்தில் இருந்தாலும், ஒரு நாள் இதயம் துடிப்பதை நிறுத்தும். அந்த நாளை நாம் சந்தித்தே தீருவோம்.

​உங்கள் குடும்பம், துணை மற்றும் நண்பர்களை நேசியுங்கள். அவர்களை நன்றாக நடத்துங்கள்; அவர்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்யாதீர்கள்.

​நாம் வளர வளர, அறிவாளியாக மாறும்போது ஒரு உண்மையை மெதுவாக உணர்கிறோம். நாம் கட்டியிருக்கும் கடிகாரத்தின் விலை 300 ரூபாயோ, 3000 ரூபாயோ அல்லது 3 லட்சமோ - அது காட்டும் நேரம் ஒன்றுதான்.

​நம்மிடம் இருக்கும் பர்ஸ் (Purse) 100 ரூபாய் அல்லது 500 ரூபாய் மதிப்பிலானதாக இருந்தாலும், அதற்குள் இருக்கும் பணம் மாறப்போவதில்லை.

​நாம் ஓட்டும் கார் 5 லட்சமோ அல்லது 50 லட்சமோ - பாதை மற்றும் தூரம் ஒன்றுதான்; நாம் சேரும் இடமும் ஒன்றுதான்.

இதையும் படியுங்கள்:
'மோட்டிவேஷன்' டோஸ்: ஏழ்மையில் பிறந்து, வாழ்க்கையில் உயர்ந்து, சிகரம் தொட்டவரின் கதை!
Rakesh Jhunjhunwala

நாம் வாழும் வீடு 300 சதுரடியோ அல்லது 3000 சதுரடியோ - தனிமை என்பது எல்லா இடத்திலும் ஒன்றுதான்.

​உங்களின் உண்மையான உள்மன மகிழ்ச்சி இந்த உலகப் பொருட்களிலிருந்து கிடைப்பதில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

​நீங்கள் விமானத்தில் முதல் வகுப்பில் (First Class) பயணம் செய்தாலும் அல்லது சாதாரண வகுப்பில் பயணம் செய்தாலும், விமானம் விபத்துக்குள்ளானால் நீங்களும் அதோடுதான் கீழே விழுவீர்கள்.

​அதனால்தான் நான் சொல்கிறேன்... உங்களிடம் பேசுவதற்கும், சிரிப்பதற்கும், பாடுவதற்கும், இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் நண்பர்களும், உறவுகளும் இருப்பதே உண்மையான மகிழ்ச்சி!!

வாழ்க்கையின் மறுக்க முடியாத உண்மை:

​உங்கள் குழந்தைகளுக்குப் பணக்காரர்களாக வளரக் கற்றுக் கொடுக்காதீர்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொடுங்கள். அவர்கள் வளரும்போது, பொருட்களின் விலையை (Cost) அல்ல, அதன் மதிப்பை (Value) உணர்வார்கள்.

​வாழ்க்கை என்றால் என்ன?

​வாழ்க்கையைப் புரிந்து கொள்ள மூன்று இடங்கள் உள்ளன.

  • மருத்துவமனை: ஆரோக்கியத்தை விட மேலானது எதுவுமில்லை என்பதை அங்கே உணர்வீர்கள்.

  • சிறைச்சாலை: சுதந்திரம் எவ்வளவு விலையுயர்ந்தது என்பதை அங்கே காண்பீர்கள்.

  • மயானம்: வாழ்க்கை என்பது ஒன்றுமே இல்லை என்பதை அங்கே உணர்வீர்கள்.

​இன்று நாம் நடக்கும் நிலம் நாளை நம்முடையதாக இருக்காது.

​இனிமேலாவது நாம் அடக்கத்துடன் இருப்போம். நமக்குக் கிடைத்த அனைத்திற்கும் நம் பெற்றோருக்கு நன்றி கூறுவோம்.

​அனைவரும் ஆசிர்வதிக்கப்படட்டும்.

அனைவருக்கும் நலம் உண்டாகட்டும்.

அனைத்து உயிர்களும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்."

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com