முதுமையில் சுய அன்பை மீட்டெடுப்பது எப்படி? இனி உங்களுக்காக வாழும் பொற்காலம்!

பிறருக்காக வாழ்ந்தது போதும்; ஓய்வு காலத்தில் உங்கள் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் மீட்டெடுக்கும் எளிய வழிகள்.
சுய அன்பு
சுய அன்புAI image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

குழந்தைப் பருவம், இளமைப் பருவம் போலவே முதுமையும் ஒரு அருமையான பருவம்தான். அதைக்கொண்டாட தெரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய சமூக கட்டமைப்பில் நமக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதைப் பற்றி யாரும் கவலைப்படாமல் இருப்பதுதான் பிரச்னையே.

பிறருடைய தேவைக்காக மட்டுமே வாழ பழகிவிடும் நாம், சில சமயம் நமக்கு எது பிடிக்கும் என்பது கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்போம். ரிட்டயர்மென்ட் வரை பிறருக்காகவே வாழப்பழகிய நாம் சில காலமாவது நமக்காக வாழப் பழகவேண்டும். இதைத்தான் தன்னை நேசிப்பது, தன்னைத்தானே நேசிப்பது, செல்ஃப் லவ் என்கிறோம்.

தனக்காக வாழ விரும்புவதும், தன் மன நிறைவையும் மகிழ்ச்சியும் தேடுவதும் எந்த வகையிலும் தவறு இல்லை. மற்றவர்களைப் பார்த்துக் கொள்வது போலவே நம்மை நாம் நேசிப்பதும் அவசியம். நம்முடைய விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது ஒன்றும் சுயநலமாகாது. எப்பொழுதும் மற்றவர்களுக்காகவே வாழ்ந்தால், நம் சொந்த ஆசைகளையும் கனவுகளையும் இழந்துவிடுவோம்.

எதற்கும் ஒரு எல்லைகளை வகுத்துக் கொண்டு வாழ்வது சுயநலம் அல்ல, அது சுய பாதுகாப்பு. மற்றவர்களுக்காக வாழ்வதோடு நமக்காகவும் சில தருணங்களை ஒதுக்கி வாழ்வது அழகானதுதான். சுயநலம் என்பது வேறு சுய அன்பு (self-love) என்பது வேறு. நமக்குப் பிடித்த விஷயங்களை செய்யும் பொழுது தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும். நாம் மகிழ்ச்சியாகவும் மனநிறைவோடும் இருந்தால் மட்டுமே சுற்றி இருப்பவர்களுக்கும் நம்மால் மகிழ்ச்சியைத் தர முடியும். ஆகவே மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல் நம் உடல்நலம் மற்றும் மனநலத்திற்கு முதல் முன்னுரிமை கொடுப்பது அவசியம்.

முதுமையின் வெறுமையை விரட்ட பிடித்த இடங்களுக்கு பயணம் செல்லலாம். பிடித்ததை வாங்கி சாப்பிடலாம். புதுப்புது நண்பர்களை உருவாக்கிக் கொள்ளலாம். அவர்களுடன் மனம் திறந்து பேசலாம். புதுப்புது விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

சுய அன்பு
சுய அன்புAI image

இப்படி நம்மை நாம் நேசிப்பதும், நமக்கு பிடித்த மாதிரி வாழ்வதும் சுயநலம் கிடையாது. அது நமக்கு சுயமரியாதையையும், மன அமைதியையும் தரும். மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக மட்டுமே வாழ்வது நீண்ட காலத்தில் மன அழுத்தத்தைத்தரும்.

இதையும் படியுங்கள்:
உங்க மனச கட்டுப்படுத்த முடியலையா… இந்த சீக்ரெட் பார்முலாவை ட்ரை பண்ணுங்க!
சுய அன்பு

நம்முடைய சின்னச்சின்ன ஆசைகள், கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஒரு ஆரோக்கியமான விஷயம்தான். பிறரைக் கெடுக்காமல், காயப்படுத்தாமல் நமக்காக நாம் வாழ்வது, நம்மை நாமே நேசிப்பது ஒன்றும் தவறான விஷயம் இல்லை.

குழந்தைப் பருவம், இளமைப் பருவம் போல முதுமையும் வாழ்வின் ஒரு அழகான மற்றும் பொன்னான பருவம் தான். இது அனுபவங்கள் நிறைந்த, கவலைகள் குறைந்த மற்றும் நிம்மதியான காலமாகும். வாழ்வின் பல கஷ்டங்களை, இன்பங்களைக் கடந்து பெற்ற தெளிவு இந்த வயதில் கிடைக்கும். குடும்பம், வேலை என்ற ஓட்டம் குறைந்து நமக்கான வாழும் நேரம் கிடைக்கிறது.

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலைகள் இன்றி நிம்மதியான மனநிலை உருவாகிறது. பேரக் குழந்தைகளுடன் விளையாடும் மகிழ்ச்சியான தருணங்கள் மனதுக்கு புத்துணர்ச்சியைத் தரும். தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வது உடலுக்கும் மனதிற்கும் உற்சாகத்தைத்தரும்.

பிடித்த புத்தகங்களைப் படிப்பது, தோட்டக்கலையில் ஈடுபடுவது, நண்பர்கள், குடும்பத்தினருடன் உற்சாகமாகப்பேசி மகிழ்வது என நேர்மறையான எண்ணங்களை எப்போதுமே வைத்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
வெற்றியைத் துரத்துவதை நிறுத்துங்கள். இந்த 1 தத்துவம் உங்களை உயர்த்தும்!
சுய அன்பு

நமக்கு கிடைத்த இந்த வாழ்க்கை கடவுள் கொடுத்த வரம். அதில் தன்னைத்தானே நேசிப்பது என்பது சுயநலம் அல்ல. நம்மை நாமே மதித்து, கவனித்துக் கொள்ளும் ஒரு ஆரோக்கியமான மனநிலையாகும். நமக்கு மகிழ்ச்சி தரும் பொழுது போக்குகளுக்கு நேரம் ஒதுக்கி, மனதுக்கு பிடித்த விஷயங்களை செய்வது நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

தன்னைத்தானே நேசிப்பது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. இது ஒரு நாளில் நடந்துவிடும் விஷயம் அல்ல. நாம் ஒவ்வொரு நாளும் நம்மை நாமே நேசிப்பதற்கு புதிய வழிகளைக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்க வேண்டும். தன்னைத்தானே நேசிப்பது என்பது ஒரு பயணம். இந்த பயணத்தில் நாம் எப்போதும் கற்றுக் கொண்டே இருப்போம்.

இந்த வழிகாட்டுதல் மூலம் பிறரின் எதிர்பார்ப்புகளுக்காக வாழ்வதை நிறுத்தி, உங்கள் மன அமைதி மற்றும் தனிப்பட்ட ஆசைகளுக்கு முன்னுரிமை அளிக்கப் பழகுவீர்கள். முதுமையின் வெறுமையை விரட்டி, தினமும் புதுமையான சந்தோஷத்தையும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையையும் பெறுவது சாத்தியமாகும்.

logo
Kalki Online
kalkionline.com