ஆப்பிள் நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய ஒற்றை சீக்ரெட்!

Steve Jobs Motivation
Steve Jobs Motivation
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on: 

எந்த ஒரு வேலையையும் ரொம்ப சிம்பிளா முடிச்சிட்டா, அதுக்கு அதிக அறிவோ உழைப்போ தேவையில்லை என்று நம் ஊரில் பலரும் நினைப்பதுண்டு. ஆனால், “ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வதற்கான வழியை மிக எளிமையாக மாற்றுவதற்குத் தான் அபாரமான மூளையும் கடுமையான உழைப்பும் தேவை” என்பதை ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆணித்தரமாக நம்பினார். 

பல வருடங்களுக்கு முன்பு அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்ட தத்துவம், இன்று வரை பலருக்கும் ஒரு மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது. மேலோட்டமாகப் பார்க்க இவை சாதாரண வார்த்தைகளாகத் தெரிந்தாலும், இதன் உள்ளர்த்தம் மிகப்பெரியது. அதைப் பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

எளிமைக்குப் பின்னால் இருக்கும் பிரம்மாண்ட உழைப்பு!

ஒரு பெரிய சிக்கலான இயந்திரத்தையோ, புரியாத சாப்ட்வேரையோ உருவாக்குவது கூட சுலபமான காரியம்தான். ஆனால் அதை எந்த ஒரு தொழில்நுட்ப அறிவும் இல்லாத சாதாரண பாமரனும் பயன்படுத்தும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்க வேண்டும் என்றால், அதற்கு மூளையைக் கசக்கிப் பிழிய வேண்டும். 

நமது சிந்தனையில் இருக்கும் தேவையற்ற குழப்பங்களை எல்லாம் ஒவ்வொன்றாக நீக்கிவிட்டு, எது தேவையோ அதை மட்டும் செதுக்குவது ஒரு மாபெரும் கலை. இதற்குத் தெளிவான மனநிலையும், எந்த ஒரு கவனச்சிதறலும் இல்லாத Focus மிகவும் அவசியம். இதையேதான் ஜாப்ஸ் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு தாரக மந்திரமாகப் பின்பற்றினார்.

ஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிள் சாம்ராஜ்யம்!

கலிபோர்னியாவில் ஒரு சிறிய கார் ஷெட்டில் தொடங்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம், இன்று உலகையே ஆளுகிறது என்றால் அதற்கு இந்த 'சிம்பிள்' என்ற தத்துவம் தான் மிக முக்கியக் காரணம். மக்களுக்கு நிஜமாகவே என்ன தேவை என்பதை அவர்கள் உணரும் முன்பே, மிகவும் கச்சிதமான டிசைனில் ஐபோன் மற்றும் மேக் கணினிகளை அவர் அறிமுகப்படுத்தினார். 

இடையில் சொந்த நிறுவனத்தை விட்டே அவர் துரத்தப்பட்ட காலகட்டமும் உண்டு. ஆனாலும் மனம் தளராமல் பிக்சார் போன்ற நிறுவனங்களை உருவாக்கித் தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். அதன் பிறகு படுவீழ்ச்சியில் இருந்த ஆப்பிள் நிறுவனத்தை மீட்க மீண்டும் வந்து, தனது தெளிவான சிந்தனையால் அதைத் தொழில்நுட்ப உலகின் உச்சிக்குக் கொண்டு சென்றார்.

இதையும் படியுங்கள்:
'போதிதர்மர்' சொன்ன இந்த ஒரு சீக்ரெட் தெரிஞ்சா உங்க லைஃப் மாறிடும்!
Steve Jobs Motivation

இந்த சீக்ரெட் பார்முலா வெறும் ஐடி கம்பெனிகளுக்கும் பிசினஸ் செய்பவர்களுக்கும் மட்டும் சொந்தமானது கிடையாது. இது நம் அனைவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நூறு சதவீதம் அப்படியே பொருந்தும். இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது தான் கெத்து என்று பலரும் தங்களை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். 

தேவையற்ற டென்ஷன் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்துக்கொண்டு, நமது இலக்குகளை நோக்கி மிக எளிமையாகப் பயணிக்கப் பழக வேண்டும். எதைச் செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருந்துவிட்டால், எதைச் செய்ய வேண்டும் என்பது தானாகவே சுலபமாகிவிடும்.

ஆனால், எளிமை என்பது வெற்றிக்கான குறுக்குவழி கிடையாது, அது ஒரு மாபெரும் சூப்பர் பவர். உங்களது சிந்தனையில் இருக்கும் குப்பைகளை அகற்றிவிட்டு, உங்களின் உண்மையான இலக்கு என்னவோ அதில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்துங்கள். 

இதையும் படியுங்கள்:
சிங்கப்பூர் போறீங்களா? அப்படின்னா இந்த 7 விஷயத்தை கண்டிப்பா செய்யாதீங்க!
Steve Jobs Motivation

ஆரம்பத்தில் இந்த பழக்கத்தைக் கொண்டுவருவது மிகவும் கஷ்டமாகத் தோன்றலாம். ஆனால், ஒருமுறை உங்கள் சிந்தனையைத் தெளிவாக்கிக் கொண்டால், எவ்வளவு பெரிய தடையையும் மிக சாதாரணமாக உடைத்தெறிந்து விடலாம்.

logo
Kalki Online
kalkionline.com