Motivation stories: தன்னம்பிக்கை கதைகள் 2!

1. நான் எழுதியது இல்லை…? 2. சிறந்த சிட்டிசன்… ! (சிறந்த குடிமகன்..!)
Motivation stories | writer and Collector and MTC bus driver
Motivation stories | writer and Collector and MTC bus driverAI Image
Updated on

1. நான் எழுதியது இல்லை…?

Motivation stories| writer
Motivation stories | writerAI Image

செல்வம் ஒரு எழுத்தாளர். ஆனால், 6 வருடங்களாக அவர் எதையும் எழுதுவது இல்லை. காரணம் அவர் உயிருக்கு உயிராக நேசித்த தினேஷ்... அவரது தம்பி ஒரு கோர சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

தம்பியின் பிரிவை செல்வத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மனச்சோர்வு வந்துவிட்டது. ஆனால், மனநல மருத்துவரை அவர் அணுகவில்லை.

ஞாயிற்றுக்கிழமையன்று வீட்டை சுத்தம் செய்யலாம் என்று முடிவு செய்தார். முதலில் அவர் தம்பி தினேஷின் அலமாரியைத் திறந்தார். திறந்த உடன் அலமாரியில் இருந்து ஒரு பெரிய ஃபவுல் ஸ்கைப் நோட்டு கீழே விழுந்தது.

அதை எடுத்து பார்த்தார். 498 பக்கம் எழுதப்பட்டிருந்தது. பக்கம் 499 மற்றும் 500ல் எதையும் எழுதி இருக்கவில்லை. கடைசி அத்தியாயம் என்று மட்டுமே எழுதி இருந்தது. கீழே தினேஷ் கையெழுத்து இருந்தது.

செல்வம் வீட்டைச் சுத்தம் செய்வதை நிறுத்திவிட்டு தனது ரூமில் உள்ள படுக்கையில் படுத்து தினேஷ் எழுதிய நாவலைப் படிக்க ஆரம்பித்தார்.

செல்வம் மிகவும் கவனமாகப் படித்தார். நாவலைப் படிக்கும்போது அவர் கண்களில் கண்ணீர் சொட்டியது. கதையை முழுமையாக உள்வாங்கி விட்டார். அவர் மனம் துடித்தது. இந்த நாவலை நிச்சயமாகப் பிரசுரிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

இதையும் படியுங்கள்:
'Census' கதைகள்: எதார்த்தமும் சுவாரஸ்யமும்!
Motivation stories | writer and Collector and MTC bus driver

அவர் சரியாகச் சாப்பிடவில்லை. அவர் மனைவியிடம் அடிக்கடி டீ கேட்டார். மனைவி சலிக்காமல் டீ கொடுத்து வந்தார். இரவு மனைவி தூங்கிவிட்டார்.

செல்வம் ஒரு நொடிகூட தூங்கவில்லை. அவர் கதையின் கடைசி அத்தியாயம் எழுத முடிவு செய்தார். இரவு முழுவதும் தினேஷ் நாவலை எப்படி எழுதுவது என்று யோசித்தார்.

மனைவி காலையில் விழித்தபோது, “ஏன்..? நீங்கள் தூங்கவில்லையா…?” என்று கேட்டார்.

செல்வம் நடந்ததைச் சொன்னார்.

மனைவி “நீங்கள் சீக்கிரம் எழுதுங்கள்..!” என்று ஊக்கம் தந்தார்.

திங்கட்கிழமை.

செல்வம் ஆபிசுக்கு போன் மூலம் விடுப்பு எடுத்துக்கொண்டார். காலை டிபன்கூட சாப்பிடவில்லை. டீ மட்டுமே 3 முறை குடித்தார்.

செல்வம் எழுத ஆரம்பித்தார். கடைசி அத்தியாயம். பக்கம் 499 மற்றும் பக்கம் 500. மிகவும் யோசித்து அவர் ஒரு எழுத்தாளரின் படைப்பை எழுதும்போது வரும் பிரசவவலியை தாங்கிக்கொண்டார்.

கடைசி அத்தியாயம் மிகச் சிறப்பாக எழுதினார். கதையை அப்படியே புரட்டிப் போட்டார். யாரும் எதிர்பார்க்கமுடியாத டிவிஸ்ட்டாக எழுதி கடைசியில் முற்றும் என்று எழுதாமல் தொடரும் என்று முடித்தார்.

அடுத்த வருடம்... அச்சான தினேஷ் கதைக்கு விருது கிடைத்தது. புத்தகத்தில் செல்வம் என்றே எழுதினார். செல்வம் விருதை வாங்கிப் பேசினார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: பொறுமையின் சாதனை!
Motivation stories | writer and Collector and MTC bus driver

“இது நான் எழுதியது இல்லை. எப்படி கடைசி அத்தியாயம் எழுதினேன்…?” என்று கண்ணீர் மல்க சொன்னார். அரங்கில் பலத்தக் கரவொலி.

கடைசியாக அரங்கில் தனது கதையைப் பற்றி சொல்லிவிட்டு "இனி நான் எழுதுவேன்" என்று உறுதிமொழி கொடுத்தார்.

மறுநாள். ஒரு புதிய புதினம் எழுத ஆரம்பித்தார்.

9 நாட்கள் விடுப்பில் புதினத்தை முடித்தார். மிகச் சிறப்பாக வந்தது. அச்சாகியது. நல்ல வரவேற்பு.

அடுத்த வருடம் அவரின் ‘நான் எழுதியது இல்லை’ என்ற நாவலுக்கு சாகித்திய அகாடமியின் விருது கிடைத்தது.

அடுத்த வருடம் அவரின் ‘நான் எழுதியது இல்லை’ என்ற நாவலுக்கு சாகித்திய அகாடமியின் விருது கிடைத்தது.

செல்வம் எழுதத் துவங்கிவிட்டார்….!

*******************

2. சிறந்த சிட்டிசன்… ! (சிறந்த குடிமகன்..!)

Motivation stories | Collector and MTC bus driver
Motivation stories | Collector and MTC bus driverAI Image

அனிதா டிகிரி முடித்துவிட்டு, ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். தான் ஒரு கலெக்டர் ஆகவேண்டும் என்பதே லட்சியம். அதற்காகத் தன்னை தயார் செய்துகொண்டும் இருந்தார்.

அலுவலகத்தில் ப்ரொஜெக்ட்டை அவசரமாக செய்துமுடிக்க மேனேஜர் அனிதாவிடம் சொல்லிவிட்டார். இரவு 7 மணி ஆகிவிட்டது. தான் வீடு போக வேண்டும் என்று கூறினார் அனிதா.

ஆனால், மேனேஜர் இன்றே இந்த வேலையை முடித்து விட்டுத்தான் போகவேண்டும் என்று சொல்லிவிட்டார். வேண்டும் என்றால் மறுநாள் விடுப்பு எடுத்துக்கொள்ளச் சொன்னார்.

சரி... என்று அனிதா வேலையில் மூழ்கினார். வேலையை முடிக்க இரவு 11.20 ஆகிவிட்டது. மடமடவென்று பஸ் ஸ்டாப் வந்தார். அவர் பஸ் ஸ்டாப்புக்கு வந்த நேரம் இரவு 11.40. கடைசி பஸ் 11.30க்கு என்று தெரியும். பஸ் மிஸ் ஆகிவிட்டது என்று புரிந்துகொண்டார்.

அவருக்கு அழுகை வந்தது. அந்த நேரத்தில் கால்டாக்ஸி வசதி இல்லை. அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த நபர் ஒரு இளம்பெண் பஸ்ஸைத் தவறவிட்டதைப் புரிந்துகொண்டு அந்தப் பெண்ணை அணுகினார். அனிதா நடந்த விவரத்தைச் சொன்னார்.

அதற்கு அந்த நபர்… “மேடம்.. கடைசி பஸ் போய்விட்டது. இனி நாளை காலை 4 மணிக்குத்தான் பஸ் வரும். நீங்கள் தனியாக இருப்பது சரி அல்ல. சென்னையில் பெண்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லையே..?”

அனிதா அவர் ஸ்கூட்டரில் ஒரு முருகன் படம் இருந்தது.

முன் பக்கம் ஒரு வேல் இருந்தது. அனிதா அவரை நம்பினார்.

“மேடம்… என் பெயர் முருகன் மாநகர பேருந்து நடத்துனர். என் வண்டியில் ஏறுங்கள். உங்கள் வீடு ஏங்கே உள்ளது?” எனக் கேட்டார்.

“சார்… என் வீடு விருகம்பாக்கம் பக்கம் உள்ளது…!” என்று பதில் சொன்னார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: மகாத்மாவிடமிருந்து பெற்ற ஞானோதயம்!
Motivation stories | writer and Collector and MTC bus driver

“மேடம்.. பயப்படாமல் வண்டியில் ஏறுங்கள்.. நான் உங்களை வீட்டில் இறக்கி விட்டுச் செல்கிறேன். என் வீடும் போரூரில்தான் உள்ளது…!”

அனிதா ஏறினார். சுமார் 45 நிமிடங்கள் கழித்து வீடு வந்து சேர்ந்தார்.

அவர் முருகனுக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்தார்.

இது நடந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. அனிதா ஐ.ஏ.எஸ். பரீட்சையில் முதலில் தோல்வியைத் தழுவினாலும் மனம் தளரவில்லை.

மீண்டும் 2வது முறையில் தேர்வு பெற்றார்.

நேர்காணலில் தைரியமாக எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னார்.

அனிதா ஐ.ஏ.எஸ் பாஸ் செய்து, வட இந்தியாவில் 6 மாதங்கள் பயிற்சி முடித்து தனது முதல் போஸ்டிங்கில் அதிர்ஷ்டவசமாக சென்னை கலெக்டர் ஆனார். தன் மாநிலத்திலே போஸ்டிங் கிடைத்ததில் சந்தோஷம் கூட.

ஆகஸ்ட் சுதந்திர தினத்திற்கு இன்னும் 18 நாட்கள் இருந்தது.

கலெக்டர் அனிதா, மாநகர பேருந்து நடத்துனர் முருகனை அலுவலகம் வரச் செய்தார். அவரும் வந்தார்.

“நீங்களா மேடம்?” என்று அதிசயப்பட்டார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: லாட்டரி அடிச்சுடுச்சு… ஆனா…?
Motivation stories | writer and Collector and MTC bus driver

“மிஸ்டர் முருகன்.., இந்த வருடம் சுதந்திர தினம் அன்று ‘சிறந்த சிட்டிசன்’ விருது உங்களுக்குத்தான். அரசு விழாவிற்கு வந்துவிடுங்கள். காலை 8.30க்கு விழா ஆரம்பம். கண்டிப்பாக வாருங்கள்..!”

“ரொம்ப நன்றி மேடம்…!” என்று சொல்லி ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.

ஆகஸ்ட் 15. காலை 8.30 மணி. விழாவில் முருகனுக்கு ஒரு ‘சிறந்த சிட்டிசன்’ சான்றிதழ் மற்றும் ரூபாய் 1 லட்சம் அன்பளிப்பாக அனிதா கொடுத்தார்.

அவரின் கண்ணியத்தையும், பெண்ணைப் பாதுகாப்பாக அவருடைய வீட்டில் கொண்டு சேர்த்ததால் சிறந்த சிட்டிசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முருகன் காசோலையைப் பார்த்து ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.

கருணை உள்ளம் உள்ள கலெக்டர் அனிதா… பல்லாண்டு வாழ்க வாழ்கவே..!

logo
Kalki Online
kalkionline.com