டென்ஷன், மன அழுத்தத்திற்கு குட்பை: வாழ்க்கையை மாற்றும் 4 எழுத்து மந்திரம்!

அன்றாட தடங்கல்கள் மற்றும் ஏமாற்றங்களை வென்று மன அமைதி பெற எளிய வழிகள்.
மன அழுத்தம்
மன அழுத்தம்Gemini image
Updated on

இன்றைய அவசர வாழ்க்கையில் டென்ஷன், பிரஷர், சுகர் போன்ற பிரச்னைகள் அதிகரிக்கின்றன. இதை சமாளிக்க நிதானம் முக்கியம் என கட்டுரை விளக்குகிறது. மின்தடை, வேலை தடை போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலைகளை ஏற்றுக்கொண்டு, மாற்று வழிகளை அமைத்து, எதிர்பார்ப்புகளை குறைத்து, மனதை கட்டுப்படுத்தினால் நிம்மதி கிடைக்கும் என கூறுகிறது.

இன்றைய பரபரப்பான சூழ்நிலையில்,அவசரகதியில் இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைவிட அசுர கதியில் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதே பொருந்தும். பணி செய்யுமிடத்திலோ, இல்லத்திலோ அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாகும் தருணங்கள் நிறையவே.

அதனால் ஏற்படும் டென்ஷனில் பிரஷரும், சுகரும் அழையா விருந்தாளிகளாக நம் வாழ்க்கையில் நுழைந்து விடுகின்றது. டென்ஷனை விரட்டி இவர்களுக்கு தடா போட்டு, ஜெயிக்கலாம். எப்படி?

தினசரி வாழ்க்கையில் ஏற்படும் தடங்கல்கள் மட்டுமல்ல.. ஏமாற்றங்களால் வரும் இயலாமையாலும் மன இறுக்கம் ஏற்படுகிறது. அதனால் கோபமும், ஆற்றாமையும் வருகிறது. சின்ன விஷயங்கள் கூட விஸ்வரூபமெடுத்து பெரிதும் பாதிக்கிறது. இந்த சமயத்தில் நமக்குத் தேவை நாலு எழுத்து நிதானம்.

தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ இப்படி ஒரு சூழ்நிலையை சந்திக்கும்படி ஆகிவிட்டது. இதைத் தவிர்க்க முடியாது என்ற முடிவுக்கு வாருங்கள். இப்போ, மிக்ஸியில் அடைக்கு அரைத்துக் கொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம்.

திடீரென பவர் கட்டாகி, மிக்ஸி சுற்றுவது நின்று விடுகிறது. இதில், நம் பக்கம் எந்த தப்பும் இல்லை. தவிர்க்க முடியாத பிரச்னை தான் என்று ஏற்றுக்கொள்ளுங்கள். தடைப்பட்ட மின்சாரம் வரவேயில்லை. என்ன செய்ய?. அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம் தாளித்துப் போட்டு, உப்புமா பண்ணி விடுங்கள். பிராப்ளம் சால்வ்டு.

மன அழுத்தம்
மன அழுத்தம்Gemini image

அடுத்த விஷயம் நடந்த விஷயத்திற்கு நானும் காரணம் எனப் பொறுப்பேற்றுக் கொள்ளும் மனசு வரணும். காலையில் சீக்கிரமாக எழுந்திருந்தால், பவர் போவதற்கு முன் அரைத்திருக்கலாம். எப்போ கரண்ட் போகுமென்று யாருக்குத் தெரியும் என்ற சந்தேகம் வருகிறதல்லவா..? உண்மைதான். அப்பவும் நிதானம் அவசியம். அதற்கான மாற்று ஏற்பாட்டை யோசிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இந்த விஷயங்களை செஞ்சா நீங்களும் புத்திசாலி தான்... ட்ரை பண்ணுங்க!
மன அழுத்தம்

இட்லி ரெடி பண்ணலாம். இட்லி மாவு இல்லாத காரணத்தால் தானே அடை சுடும் ஐடியா என முணுமுணுப்பது கேட்கிறது. ரவை இருக்குமே ரவா உப்புமா பண்ணலாமே!. ரவையும் ஸ்டாக் இல்லியா..பிடித்த டிஷ்ஷை ஆன் லைனில் ஆர்டர் பண்ண பத்து நிமிடத்தில் சாப்பாடு இல்லம் தேடி வந்துவிடும்.

அடுத்து எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால் ஏமாற்றத்தை தவிர்க்கலாம். அதனால், எந்த முயற்சியையும் ஆரம்பிக்கும்போதே, கை கூடினால் மகிழ்ச்சி. நழுவினால், இதை விட பெட்டராக கிடைப்பதற்கே விலகிவிட்டது என்று சமாதானமாகி விட வேண்டும்.

அடுத்த முயற்சியில் சிறப்பாக செய்வதற்கான அனுபவம் கிடைத்துவிடும். ஆர்வமும், ஆற்றலும் கலந்த முயற்சியில் வெற்றிக் கனி கை அருகில் விழக்காத்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
சவால்களைச் சமாளிக்கும் மன உறுதி: இலக்கை அடைய உதவும் வழிகாட்டி!
மன அழுத்தம்

படிப்படியாக மனசை கட்டுப்படுத்தி, நிதானத்தை வரவழைத்து, எதுவரினும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு வாருங்கள். மன அழுத்தம் குறைந்து, மறைந்துவிடும். நிதானம் நிம்மதிக்கான சாவி என்பதை புரிந்துகொண்டால் போதும். அப்புறம் நம் வாழ்க்கையில் டென்ஷனுக்கு இடமில்லை.. ஊ..லல்..லல்லா...தான்.

இந்த வழிகாட்டியை பின்பற்றுவதன் மூலம், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத தடங்கல்கள் மற்றும் ஏமாற்றங்களை பதற்றமின்றி எதிர்கொள்ளும் பக்குவத்தைப் பெறுவீர்கள். தேவையில்லாத மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான வாய்ப்புகளைத் தடுத்து, என்றும் மாறாத மன அமைதியையும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் அடைவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com