
வீட்டில், வெளியில் எங்கு சென்றாலும் மன அழுத்தம் ஏற்படும் சூழல்கள் அமைகின்றன. தொழில் பாதிப்பு எதிலும் போட்டி. வேலையில் ஏற்படும் பிரச்னைகள், நல்ல பெயருக்கு ஏற்படும் பாதிப்பு, போக்குவரத்து நெரிசல், விரும்பத்தகாத மாற்றங்கள் அலுவலகத்தில் மற்றவர்களோடு ஒத்துப்போக முடியாதது, கடுமையான வேலைப்பளு என நம்மைச் சுற்றி நிகழும் எல்லாவிதமான காரணிகளும் மன அழுத்தத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது.
மன அழுத்தத்தை தவிர்க்கும் வழிகள் என்னென்ன பார்ப்போம்.
அதிகாலையில் சீக்கிரம் எழுந்து ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு உரித்த நேரத்துக்குள் செய்து முடியுங்கள். பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. எதையும் கடைசி நேரம் வரை தள்ளிப் போடாதீர்கள். அனைத்துக்குமே மாற்று யோசனை ஏதாவது ஒன்றை கைவசம் வைத்திருப்பது கடைசி நேர நெருக்கடியால் நிகழும் மன அழுத்தத்தை தீர்க்கும்.
பகல் பொழுதை மகிழ்ச்சிக்குரியதாக மாற்றுங்கள். இரவு தூக்கம் இயல்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டிலும் அலுவலகத்திலும் எல்லா பிரச்னைகளையும் நேர்மறையான சிந்தனையோடு எதிர்கொள்ளுங்கள். இது நம்மால் முடியாது, இதனால் ஏராளமான பாதிப்புகள் வரும், என எதிர்மறையாக நினைப்பதை தவிர்த்துவிடுங்கள்.
தவறாக நடந்த விஷயத்தை பற்றி எந்நேரம் சிந்திக்காமல் நல்ல விஷயங்களையே நினைத்து மகிழுங்கள். புத்தகம் வாசிப்பது, பாடல்கள் கேட்பது, மனம்விட்டு பாடுவது, பயணம் செல்வது, பூங்காவில் உலாவுவது, நண்பர் களோடு விளையாடுவது, குழந்தைகளோடு சிரித்து மகிழ்வது, புதிதாக எதையாவது கற்றுக்கொள்வது என மனதை திசை மாற்றினால் மன இறுக்கம் குறையும்.
வார இறுதி நாட்கள் விடுமுறை நாட்களை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவழியுங்கள்.
கருத்து ஒற்றுமையோடு நண்பர்களுடன் நேரம் செலவிடுங்கள், குழப்பம், கவலைகளை மனதுக்குள் புதைத்து புழுங்காமல் நம்பிக்கையான நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எதையும் புன்னகையோடு எதிர்கொள்ளுங்கள். நரம்புகளில் தொடங்கும் மெல்லிய அதிர்வுகள் முகத்தில் உள்ள தசைகளுக்கும் பரவி பாதுகாப்பான உணர்வை மூளைக்கு கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு முறை சிரிக்கும்போது நிகழ்கிறது.
எல்லாருக்கும் இருப்பது ஒரு நாளுக்கு அதே 24 மணி நேரம்தான் உங்களால் செய்ய முடிந்த விஷயங்கள் இவ்வளவுதான் என ஒரு வரையறை இருக்கிறது. அதைத்தாண்டி வேண்டாத விஷயங்களையும் மேலே தூக்கிப் போட்டுக்கொண்டு அவதிப்படாதீர்கள். இந்த கூடுதல் பாரம் மன அழுத்தத்தை வளர்த்து விடும்.
இனிய நறுமணங்களுக்கு மனதை அமைதிப்படுத்தும் தன்மை இருக்கிறது. நறுமணம் தரும் மலர்கள் எண்ணெய் வகைகள், ஊதுபத்தி, ஆகியவற்றின் மூலம் மனதை மிக விரைவில் லேசாகிக்கொள்ளமுடியும்.
தனிமையில் வாடுபவர்களோடு பழகி அவர்களின் தனிமையை போக்க முயற்சியுங்கள். இது தரும் தன்னம்பிக்கை மனதை லேசாக்கும்.
அடுத்தவர்களின் தவறுகளைப் பற்றிய கவலையும், அவற்றைச் சரி செய்ய முயல்வதும்தான் உங்கள் மனைதை பாதிக்கும்.
எல்லோரையும் அவர்களிடம் இருக்கும் குறைபாடுகளோடு ஏற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை இனிக்கும்.
உனக்கு மட்டும் ஏன் இது நிகழ்ந்தது மற்றவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்களே என்பது போன்ற நினைப்புகள் தன் இரக்கத்தை அதிகமாகிகிறது.
அன்பு செலுத்த யாருமற்ற சூழலில் இருப்பவர்கள் ஏதாவது செல்லப்பிராணிகளை, வளர்க்கலாம். அதன் பின் அன்பு பரிமாற்றமும் அந்த செல்லப்பிராணியின் சேட்டைகளும் மனதை லேசாக்கும். மனம் பதறுகிறபோது அலைபாயத் தொடங்கும். அதை கட்டுப்படுத்தி முழு கவனத்தை ஏதாவது ஒரு விஷயத்தில் செலுத்துங்கள். உங்கள் மனம் இயல்பாகும்.
மன அழுத்தம் ஏற்படும்போது பதற்றத்தில் எந்த முடிவையும் எடுக்காதீர்கள். அந்த பரபரப்பிலும் டென்ஷனிலும் தவறான முடிவுகளை எடுத்து விடுவீர்கள். உற்சாகம் தரும் தன்னம்பிக்கை வாசகங்களை மனதுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். பார்வையில் படும் இடங்களில் எல்லாம் எழுதிவையுங்கள். எல்லாம் நன்மைக்கே வாழ்க வளமுடன்! போன்ற வாசகங்கள் எல்லாவற்றையும் மாற்றும் மகத்தான மந்திரங்கள் என்பதை உணர்வீர்கள்.