உங்களை வீழ்த்த நினைக்கும் தடைகளை உங்கள் பலமாக மாற்றுவது எப்படி?

நிராகரிப்புகளையும் எதிர்ப்புகளையும் கண்டு அஞ்சாமல் சுயசார்புடன் வளர உதவும் வாழ்க்கை நெறிமுறைகள்!
வாழ்க்கை தடைகள் - Self Reliance
வாழ்க்கை தடைகள் - Self RelianceAI Image
Updated on

வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு தடையும், எரிச்சலும், துரோகம், காயம், பயம், உதவி மறுப்பு போன்ற அனுபவங்களும் நம்மை உள்ளார்ந்த வலிமை, பொறுமை, கருணை, மன்னிப்பு, அச்சத்தை தாண்டும் துணிவு, சுயநம்பிக்கை, சுதந்திரம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கின்றன. ஒவ்வொரு தருணத்தையும் படிப்பினையாக ஏற்றுக்கொண்டு முன்னேறினால், வளர்ச்சியும் வெற்றியும் நிச்சயம்.

நாம் செல்லும் பாதையில் எதிர்ப்படும் தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றாமல் வளர்ச்சி சாத்தியம் இல்லை. அப்படி வாழ்வில் சந்திக்கும் தடைகளை எளிதாக தாண்டுவது எப்படி? அதுபோன்ற ஒவ்வொரு சூழல் மற்றும் உணர்வுகளை எப்படி எதிர்கொள்வது என எளிய வழிகளை பார்ப்போம்.

உங்களை ஏதோ ஒரு சூழல் எரிச்சலில் ஆழ்த்துகிறதா? பொறுமையையும், அமைதியையும் , பழகவும் கற்றுக்கொள்ளவும் கிடைத்த சந்தர்ப்பம் அது என்று கருதுங்கள்.

நீங்கள் நம்பும் யாரோ ஒரு நபர் பாதி வழியில் உங்களை கைவிட்டு விட்டு விலகிச் செல்கிறார்களா? கவலை வேண்டாம் நீங்கள் சொந்த காலில் நிற்கவேண்டியதுதன் அவசியத்தை அவர் கற்றுக்கொடுக்கிறார். அதற்கான வலிமையை அடைவதற்கு வழி காட்டுகிறார்.

நீங்கள் மதிக்கும் ஒரு நபரின் செயல் உங்களை காயப்படுத்துகிறதா? எந்த சூழலிலும் கருணை காட்டுவதும் எப்படி. என்பதை அப்போது கற்றுக் கொள்ளலாம். எவரையும் மன்னிக்கும் குணத்தையும் அந்த சூழலில் அடையலாம்.

இதையும் படியுங்கள்:
சவால்களைச் சமாளிக்கும் மன உறுதி: இலக்கை அடைய உதவும் வழிகாட்டி!
வாழ்க்கை தடைகள் - Self Reliance

உங்களால் வெறுக்கப்படும் ஒரு நபர் நிபந்தனையற்ற அன்பை எல்லோர் மீதும் பொழிய வேண்டும் என்ற பாடத்தை உங்களுக்கு மறைமுகமாக கற்றுக்கொடுக்கிறார்.

நீங்கள் பார்த்து பயப்படும் ஒரு சூழல் எதிர்கொள்ளவே அஞ்சும் ஒரு செயல் என எதுவும் அச்சத்தை கடந்து உறுதியுடன் சாதிக்க உங்களுக்கு பயிற்சி தருகிறது.

உங்கள் முயற்சியை ஏதோ ஒரு சக்தி (வாழ்க்கை தடைகள்) தடுக்கலாம். மற்றவர்களை விட அதிக வல்லமையை நீங்கள் பெறவேண்டும் என்பதே அந்த சந்தர்ப்பம் உங்களுக்கு உணர்த்துகிறது.

சில விஷயங்களை உங்களுக்கு கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். நம் கையை மீறி செல்லும் நிகழ்வுகளை கடந்து போக விட்டு விடவேண்டும் என்ற வாழ்க்கை உண்மையை அப்போது கற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் உதவியோ, வாய்ப்போ கேட்கும் ஒரு சில நபர்கள் முடியாது என்று கையை விரிக்கலாம். யார் உதவியும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படும் கலையை அவர்கள் உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.

வாழ்க்கை தடைகள் - Self Reliance
வாழ்க்கை தடைகள் - Self RelianceAI Image

நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னையும் தீர்வுகளை தேடி கண்டுபிடிக்கும் உங்கள் திறமையை வளர்கிறது.

வளர்ச்சியின் பாதையில் நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நேரடி மற்றும் மறைமுக தாக்குதல் விழிப்புடன் இருந்து தற்காப்பு முறைகளை கடைப்பிடிக்க உங்களுக்கு கற்றுக்கொடுக்கிறது.

மேலே இருந்தபடி உங்களை பணிவுடன் பார்த்து கைகொடுத்து தூக்கி விடும் ஒவ்வொருவரும், உங்களுக்கு கீழே இருப்பவர் களுக்கு நீங்கள் எப்படி உதவ வேண்டும் என்பதை உணர்த்துகிறார்கள். வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் சந்திக்கும் படிப்பினைகளில் இருந்து பாடம் கற்றால் நாம் வளர்ச்சியை அடைந்து வெற்றி பெறுவது உறுதி!

இதையும் படியுங்கள்:
நீங்க எடுக்குற முடிவுகள் அடிக்கடி தப்பாகுதா? அப்போ நீங்க கண்டிப்பா இதப் படிக்கணும்!
வாழ்க்கை தடைகள் - Self Reliance

இந்த வழிகாட்டுதலின் மூலம் உங்கள் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு பின்னடைவையும் புதிய வளர்ச்சி வாய்ப்பாக மாற்றும் மனப்பக்குவத்தைப் பெறுவீர்கள். தடைகளைக் கண்டு அஞ்சாமல், அவற்றை வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றி, சுய சார்பு மற்றும் ஆழ்ந்த மன அமைதியுடன் கூடிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com