'இதுவும் கடந்து போகும்!' - உங்கள் பதற்றத்தை மாற்றும் வாழ்வியல் ரகசியம்!

கட்டுப்பாட்டைத் தாண்டிய மாற்றங்களை ஏற்றுக்கொள்வது எப்படி? ஒரு தெளிவான வழிகாட்டி.
நிம்மதியான வாழ்க்கை
நிம்மதியான வாழ்க்கைAI image
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

சிறு சிறு பிரச்னைகள் முதல் பெரிய பிரச்னைகள் வரை நமது வாழ்வில் சந்தித்திருப்போம். அதனை சரி செய்ய, ஏதோ ஒரு சிறு வழி கிடைத்தாலும், அப்படியே அவ்வழியே சென்று பிரச்னைகளை முடிக்கும் காரியத்தில் இறங்குவோம். ஆனால், எவ்வழியும் தோன்றாமல், எதுவுமே உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்ற நிலை வரும்போது என்ன செய்வது? இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை ஒருமுறையாவது உங்கள் வாழ்வில் நிகழும். அப்போது நீங்கள் செய்ய வேண்டியவை இவைதான்.

போராட்டத்தை நிறுத்தி நிம்மதியான வாழ்க்கை வாழ்வது எப்படி?

ஏற்றுக்கொள்ளுதல்: நமக்கு அனைத்துமே நம் கட்டுபாட்டில் இருக்க வேண்டும் என்றுதான் தோன்றும். ஆனால், உண்மையில் 90 சதவீதம் எதுவுமே நம் கட்டுபாட்டில் இருக்காது. அதனை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பது தான் விஷயமே. மீதி 10 சதவீதம் மட்டுமே நாம் நினைத்தப்படி நடக்கும் வாழ்க்கையினை வாழ்வதாகும்.

அனைத்தும் கையை மீறி போய்விட்டது என்று தோன்றும்போது, முதலில் அதனை ஒப்புக்கொள்ளுங்கள். "ஆம்! இப்போது விஷயங்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை" என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். எதிர்த்துப் போராடுவதை நிறுத்திவிட்டு, அமைதியாக என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள்.

நிம்மதியான வாழ்க்கை
நிம்மதியான வாழ்க்கைAI image

கவனித்தால் என்ன ஆகப்போகிறது என்ற கேள்வி எழுபவர்களுக்கு விடை இதுதான், எதிர்த்து போராடினாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. கவனித்தால் நிம்மதி மிஞ்சும், வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுக்க நினைக்கும் விஷயமும் தெளிவாக புரியவரும். இவயனைத்திற்கும் மேலாக, விஷயத்தை இன்னும் மோசமாக ஆக்கிவிட வேண்டாமே!

அடுத்து என்ன செய்வது என்ற பயமா?

இப்படியொரு நிலைமை நமக்கு வந்துவிட்டதே, இனி எப்படி சமாளிப்பது என்பதுதான் அடுத்த பதற்றமாக இருக்கும். அது வேண்டாம். இன்று உங்கள் முன்னால் இருக்கும் வேலையை எப்படி முடிப்பது என்பதைப் பற்றி யோசியுங்கள். இப்போது செய்ய வேலைகள் இருக்கிறதா என்பதை பற்றி யோசியுங்கள். அப்படி இல்லையென்றால், ஒரு நாளைக்கு எந்தவொரு வேலைகளிலும் ஈடுபடாமல், உங்களுடன் ஒரு நாள் செலவிடுங்கள். பதற்றம், பயம் நிறைந்த உங்கள் மனதை ஆசுவாசப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

கவனத்தை திசைத்திருப்புங்கள்: நடந்துவிட்டதை எண்ணி எண்ணி, அதையே குறித்து யோசித்துக்கொண்டு இருந்தால், எதுவுமே மாறப் போவதில்லை என்பதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள்.கடந்த காலத்தில் நடந்ததையும், அதனால் பிறர் உங்களை குறித்து அவதூறு பேசியதையெல்லாம் எண்ண வேண்டாம். அதனால் நீங்கள் இன்னும் படுகுழியிலேயே விழுவீர்கள்.

இதையும் படியுங்கள்:
நீங்க எடுக்குற முடிவுகள் அடிக்கடி தப்பாகுதா? அப்போ நீங்க கண்டிப்பா இதப் படிக்கணும்!
நிம்மதியான வாழ்க்கை

ஆனால், நீங்கள் சுதாரித்துக்கொண்டு, அவர்களை கண்டுகொள்ளாமல், உங்களை நீங்களே குழியில் விழ விடாமல் தடுத்தால் மட்டுமே உங்களால் அதிலிருந்து வெளிவர முடியும். அவற்றிலிருந்து வெளிவந்தால் மட்டுமே, அடுத்த முடிவுகளை யோசித்து சரியாக எடுக்க முடியும்.

இதுவும் கடந்து போகும்: இந்த நேரத்தில் உங்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக தோன்றும் இது, இன்னும் சில மாதங்கள் கழித்து திரும்பிப் பார்த்தால், இதற்காகவா அவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று தோன்றும் அளவிற்கு இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சிகரத்தைத் தொட துணிவு வேண்டுமா? உங்களை செதுக்கும் உன்னத வழிகள்!
நிம்மதியான வாழ்க்கை

இதுவும் கடந்து போகும் என்ற மனநிலையோடு கடந்து செல்ல பழகுங்கள், பின் வரும் காலத்தில் இது ஒரு விஷயமாகவே தோன்றாது. அப்படி ஒரு வலி இருந்ததால்தான், இப்படி ஒரு வளர்ச்சி இருக்கிறதுபோல் தோன்றலாம். மூச்சை இழுத்து விட்டு, உங்களுக்கு நீங்கள் முதலில் இரக்கம் காட்டத் தொடங்குங்கள். அனைத்தும் லேசாகிவிடும்.

விஷயங்களை அதன் போக்கில் விட்டுவிடும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வதன் மூலம், வீணான மன அழுத்தம் நீங்கி, நீங்கள் ஒரு மேம்பட்ட, தெளிவான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையைச் சுவைக்கத் தொடங்குவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com