

சவால்கள் என்பவை நம்மை முடக்கும் தடைகள் அல்ல; நமக்குள் இருக்கும் உண்மையான திறமைகளையும் ஆற்றலையும் வெளிக்கொண்டு வரும் கருவிகள். பிரச்னைகளும் சவால்களும் வரும் பொழுதுதான் நாம் இதுவரை பயன்படுத்தாத மாற்று வழிகளையும், நம்மிடம் இருக்கும் பொறுமை, தைரியம் மற்றும் புத்திசாலித்தனம் போன்ற திறமைகளையும் கண்டறிகிறோம். சவால்களைக் கண்டு அஞ்சாமல், அதை ஒரு நல்ல வாய்ப்பாக பார்ப்பவர்களால் மட்டுமே வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர முடியும்.
நிலக்கரி கடுமையான அழுத்தத்திற்கும் வெப்பத்திற்கும் உள்ளாகும் போதுதான் வைரமாக மாறுகிறது. நெருப்பில் தங்கத்தை உருக்கும் போதுதான் ஆபரணமாக மிளிர்கிறது. அதேபோல் சவால்கள் நம்மை வீழ்த்துவதற்காக வருவதில்லை. நம்மை நன்கு செதுக்கி வலிமையானவர்களாக மாற்றுவதற்காகவே வருகின்றன.
எனவே எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலையும் முட்டுக்கட்டையாகப் பார்க்காமல் நம்முடைய வளர்ச்சி படிக்கட்டாக மாற்ற முயற்சிப்போம். வாழ்க்கையில் சவால்களை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து தான் நம்முடைய வளர்ச்சியும் வெற்றியும் அமைகிறது.
சவால்களைக் கொண்டாட கற்றுக்கொள்ள வேண்டும். ஏன் தெரியுமா? சாதாரண சூழ்நிலையில் நமக்குள் இருக்கும் பல திறமைகள் நமக்கே தெரியாது. ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்போது தான் நம்மால் இவ்வளவு சிறப்பாக செயல்பட முடியுமா என்று நமக்கே தெரியாத நம்முடைய பலமும், திறமையும் வெளியே வரும்.
இது நம் சிந்தனைத்திறனை வளர்க்கும். ஒவ்வொரு முறையும் சவால்களை முறியடிக்கும் பொழுதும் நம்முடைய தன்னம்பிக்கையும் மனதைரியமும் பல மடங்கு அதிகரிக்கும். அடுத்த முறை அதைவிட பெரிய பிரச்னை வந்தாலும் எதிர்கொள்ளும் துணிச்சல் தானாகவே வந்து விடும். சுகமான பாதையில் செல்லும்பொழுது நாம் எதையும் கற்றுக் கொள்வதில்லை. கரடுமுரடான பாதைகளும் சவால்களுமே நமக்கு புதிய பாடங்களையும் அனுபவங்களையும் கற்றுத் தருகின்றன. எனவே சவால்களைக் கண்டு அஞ்சாமல் அவற்றை நம் திறமையை நிரூபிப்பதற்கான நல்வாய்ப்புகளாகக் கருதி மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம்.
எளிதாகக் கிடைக்கும் வெற்றியை விட, பல தடைகளைக் கடந்து போராடி பெறும் வெற்றி தான் நமக்கு உண்மையான மகிழ்ச்சியையும் பெருமையையும் தரும். வசதியான சூழலில் (comfort zone) இருக்கும் பொழுது நாம் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில்லை. சவால்களே நம்மைப் புதிய பாதைகளைத் தேடவும், புதிய திறன்களை வளர்க்கவும் தூண்டுகின்றன.
எனவே சவால்களைக் கண்டு பயந்து ஓடாமல் அவை நம்மை செதுக்க வந்த வாய்ப்புகளாக எண்ணி மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம். பனிப்பாறைகளை உடைத்துக் கொண்டு வெளிவரும் நதியைப் போல தடைகளை தகர்த்தெறிந்து நம் திறமைகளை உலகிற்கு வெளிக்காட்ட ஒரு சிறந்த வாய்ப்பாக இருப்பதாக எண்ணிப் போராடுவோம்.
ஒரு கதவு அடைபடும் போதுதான் நாம் மாற்று வழிகளைப் பற்றி யோசிக்க தொடங்குகிறோம். இது நம்மை இன்னும் பன்முகத்தன்மை கொண்டவர்களாக மாற்றுகிறது. ஒவ்வொரு சவாலையும் நாம் கடந்து வரும்போது நம்முடைய தன்னம்பிக்கையும் மன தைரியமும் பல மடங்கு அதிகரிக்கிறது.
சவால்களை நாம் ஏன் கொண்டாட வேண்டும் தெரியுமா? சாதாரண நாட்களில் நமக்கே தெரியாத நமது சகிப்புத்தன்மை, தைரியம் மற்றும் முடிவு எடுக்கும் திறன் ஆகியவை ஒரு கடினமான சூழ்நிலையில் தான் வெளியே வரும். ஒரு பிரச்னை வரும்போது தான் அதைத் தீர்க்க நமது மூளை தீவிரமாக வேலை செய்யும். இது புதிய திறமைகளையும் சிந்தனைகளையும் நமக்கு கற்றுக் கொடுக்கும்.
ஒவ்வொரு சவாலையும் நாம் கடந்து வரும்போது, நம்மால் எதையும் எதிர்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையும் துணிச்சலும், மனமுதிர்ச்சியும் நமக்கு கிடைக்கும்.
எனவே சவால்களைக் கண்டு பயம் கொள்ளாமல் அவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்ல வந்த ஏணிப்படிகள் என்று நினைத்து எதிர்கொள்வது தான் சிறந்தது. வெற்றி தரும் மகிழ்ச்சியைவிட, சவால்கள் தரும் அனுபவங்கள் நமக்கு வாழ்நாள் முழுவதற்குமான சிறந்த பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றன.
சவால்களையும் சிக்கல்களையும் கண்டு அஞ்சாமல், அவற்றை உங்கள் திறமையையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் நல்வாய்ப்புகளாக மாற்றி அடுத்த கட்டத்திற்குச் செல்லக்கூடிய மனதிடத்தைப் பெறுவீர்கள்.