சிவனடியார்கள் அவசியம் வழிபட வேண்டிய 5 ஜோதிர்லிங்கங்கள்!

5 jyotirlingas
5 jyotirlingas
Published on

ந்து சமயத்தில் முதன்மைக் கடவுளான சிவபெருமான் லிங்கம் வடிவில் வழிபடப்படுவதை அறிவோம். லிங்கங்கள் இரு வகையில் உருவாகின்றன. ஒன்று மனிதர்களால் கற்கள் மற்றும் உலோகங்களால் உருவாக்கப்படும் சிவலிங்கங்கள்.
மற்றொன்று ஜோதிர்லிங்கம் எனப்படும் கடவுளின் சக்தி மற்றும் மண் சேற்றால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் தானாகவே உருவாகும் சுயம்புலிங்கம்.

இந்தியாவில் புனிதமாகக் கருதப்படும் தனித்துவமான சிவபெருமானின் புராணக் கதையைக் கொண்டுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்கள் உள்ளன. இவற்றை வழிபடுவதன் மூலம் ஆன்மிக உயர்வை அடைய முடியும் எனும் நம்பிக்கை காரணமாக இந்தத் தலங்களை வாழ்வில் ஒரு முறையாவது தரிசிப்பதே சிவனடியார்களின் இலக்காக இருக்கும். அப்படி அனைத்தையும் தரிசிக்க முடியாத சூழலில் இந்த 5 ஜோதிர்லிங்க தலங்களை மட்டுமாவது  தரிசித்து சிவன் அருளைப் பெறலாம் என்பது ஆன்மிக நம்பிக்கையாக உள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

இதையும் படியுங்கள்:
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பதால் உண்டாகும் பலன்கள் தெரியுமா?
5 jyotirlingas

1. சோமநாதர் (சோம்நாத்): இந்தியாவின் மிகவும் பழைமையான கோயில்களில் ஒன்றான இது, குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் மாவட்டத்தில், பிரபாச பட்டினக் கடற்கரையில் அமைந்துள்ளது.  ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானதாக சிறப்புப் பெறுகிறது இந்தத் தலம்.

ஆதிகாலத்தில் இருந்தே இது குஜராத்தில் பிரதான கோயிலாக திகழ்ந்துள்ளது. கஜினி முகமது போன்ற எதிரிகளால் 6 முறை தரைமட்டமாக்கப்பட்ட கோயில். ஒவ்வொரு முறையும் மீண்டும் கட்டப்பட்டு இன்றும் கம்பீரமாக பக்தர்கள் வருகையால் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அரபிக்கடல் ஓரமாக மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது மேலும் சிறப்பைத் தருகிறது.

2. மல்லிகார்ஜுனர் (ஸ்ரீசைலம்): ஆந்திர பிரதேசம், ஸ்ரீசைலத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. சிலாத முனிவர் தவம் செய்த தலமாதலால் ஸ்ரீசைலம் என அழைக்கப்படுவதாகவும் நந்தீஸ்வரர் இங்கு தவம் செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றலைப் பெற்றதுடன், அவரே இங்கு மலையாக இருந்து பெருமானைத் தாங்குகிறார் என்றும் தல புராணம் கூறுகிறது.

இங்கு மகாசிவராத்திரியை முன்னிட்டு நிகழ்த்தப்படும் 11 நாள் விழாவான பிரம்மோத்ஸவத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொலைதூரத்திலிருந்து வருகிறார்கள். கலாசார நிகழ்வுகளாலும், பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளாலும் நிரம்பி ஆன்மிக சொர்க்க அனுபவத்தைத் தரும் விழாவை வாழ்நாளில் ஒரு முறையாவது கண்டு சிவனை ஆராதிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சனி பகவானால் எந்தக் கெடுதலும் ஏற்படாமல் தடுக்க சில ஆன்மிக யோசனைகள்!
5 jyotirlingas

3. மகாகாலேஸ்வரர் (உஜ்ஜயினி): மத்திய பிரதேசத்தில் உள்ள ‘இரண்டாவது காசி’ எனக் கருதப்படும் உஜ்ஜயினியில் உள்ள இத்தலம், சிவபெருமானின் வரலாற்றில் முக்கிய இடம் பெறுகிறது. இங்கு உள்ள மகாகாலேஸ்வரர் கோயில் சிவனின் தீவிர பக்தரான சந்திரசேனா என்ற மன்னரால் நிறுவப்பட்டது. உஜ்ஜயினியை தீயவர்கள் அழிக்க தாக்கியபோது, சந்திரசேனா சிவனிடம் பிரார்த்தனை செய்ததாகவும் சிவன் மஹாகாலா வடிவத்தில் தோன்றி எதிரிகளை அழித்து சந்திரசேனா தொடர்ந்து ஆன்மிகத்தையும் அறிவையும் பரப்ப உதவியதாகவும் ஆன்மிகத் தகவல்கள் கூறுகின்றன.

இங்குள்ள சிவபெருமான் தீய சக்திகளுக்கு எதிரானவர் என்பதால் இங்கு செல்பவர் நேர்மையான எண்ணத்துடன் இருப்பது அவசியம் என்கின்றனர். ஒவ்வொரு நாளும், மகாகாலாவிற்கு செய்யப்பட வேண்டிய அர்ப்பணம் மயான பூமியிலிருந்து பெற்ற புத்தம் புதிய சாம்பல் என்கிறது ஒரு குறிப்பு. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்கம் சிறியது எனினும் அதன் அதிர்வலைகள் அதிகம் என்கின்றனர் அனுபவித்த சிவனடியார்கள்.

4. ஓம்காரேஸ்வரர் (சிவபுரி): மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயினிக்கு தெற்கே 100 கி.மீ. தொலைவில், நர்மதை ஆற்றின் வடகரையில் நர்மதையும் காவிரி ஆறும் கலக்கும் சங்கமத் துறையில் உள்ள சிவபுரி எனும் தீவில் ஓம்கார வடிவில் உள்ள லிங்கமாக இது அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
மூன்று வடிவ நிலையில் ஒருசேர போகலிங்கமாக அருள்பாலிக்கும் சொர்ணபுரீஸ்வரர்!
5 jyotirlingas

நான்காவது ஜோதிர்லிங்கமான, ‘ஓம்காரம் அமலேஸ்வர்’ உள்ள இந்தத் தீவு மற்றும் நதி ‘ॐ’ (ஓம்) வடிவத்தில் உள்ளதால் ஓம்காரம் என அழைக்கப்படுகிறது. சிவனின் அருளால் இயற்கையாகவே அமைந்த இந்தக் கோயிலைச் சுற்றி வரும் பக்தர்கள், ஓம்காரத்தையே வலம் வந்து புனித ஜோதிர்லிங்க தரிசனம் செய்வதால் சிவனையே பிரதட்சணம் செய்த பெரும் பேறு பெறுவதாகக் கருதப்படுகிறது.

5. வைத்தியநாதர் (பர்லி): மகாராஷ்டிராவில் உள்ள  பீட் மாவட்டத்தில் உள்ள பர்லி வைத்தியநாத்தில் உள்ளது. இது நோய்களைத் தீர்க்கும் மருத்துவத் தலமாகவும் கருதப்படுவதால் இங்குள்ள சிவன் வைத்தியநாதர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். காரணம் போரில் காயமுற்றவர்களுக்கு மருத்துவம் பார்க்க சிவன் வைத்தியராக வந்தமையால் வைத்தியநாதர் என்று பெயர் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.

சுமார் 3000 ஆண்டுகள் பழைமையான இது பல மருத்துவ மூலிகைகள் நிறைந்த மலை மீது அமைந்திருப்பதாலும் நோய்களுக்கு நிவாரணம் கிடைப்பதாகவும் நம்பப்படுகிறது. பக்தர்கள் கருவறைக்குள் சென்று லிங்கத்தைத் தொட்டு வணங்க அனுமதிக்கப்படுவது இந்தத் தலத்தின் பெரும் சிறப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com