

சில நேரங்களில் நாம் எண்ணி பார்க்காத விஷயங்கள் எல்லாம் கனவுகளாக வரும். அது அப்படியே பலித்து விடுவதும் உண்டு. ஏன் அப்படி என்பதற்கான காரணங்கள் தெரியாது. பல கனவுகள் பலிக்காமல் போவதும் உண்டு. என்றாலும், அது ஏதோ ஒரு எச்சரிக்கை கொடுப்பதாக இருக்கும். கனவு சாஸ்திரத்தின்படி ஒரு குறிப்பிட்ட ஊரை அல்லது நகரத்தை, பழங்கள், பறவைகள் பற்றி கனவில் காண்பதற்கான பலன்கள் இதோ:
ஒரு பெரிய வணிக நகரம் அடிக்கடி கனவில் வருவதுபோல் கண்டால் உங்கள் முதலீடுகளில் நல்ல லாபம் அல்லது தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்பட போவதை குறிக்கும்.
நீர்நிலைகள் மற்றும் கடலோர காட்சிகள் கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் நீண்ட நாட்களாக இருந்த மனக் கவலைகள் நீங்கி ,அமைதி கிடைக்கும் என்று அர்த்தம்.
நீங்கள் பிறந்து வளர்ந்த ஊரை அல்லது பூர்வீகத்தை அடிக்கடி கனவில் காண்பது தற்போது இருக்கும் சூழலில், ஏதோ ஒரு பாதுகாப்பற்ற உணர்வை உணரலாம். உங்கள் ஆழ்மனம் பழைய இனிமையான நினைவுகளைத் தேடிச் செல்வதையே இது குறிக்கிறது.
ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்வதுபோல கனவு கண்டால், உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய சாதகமான மாற்றம் வரப்போகிறது என்று அர்த்தம். நீங்கள் கவனித்து வரும் துறைகளிலாவது புதிய வாய்ப்புகள் உங்களைத்தேடி வரும் என்று அர்த்தம் கொள்ளலாம்.
கனவில் சுத்தமான நீர் நிலைகளை கண்டால் அது தெளிவான சிந்தனையைக் குறிக்கும். பழைய கட்டிடங்களாக இருந்தால் அது உங்கள் பாரம்பரியத்தின் மீதான பிடிப்பைக் குறிக்கும்.
விமான நிலையத்தை கனவில் காண்பது தொழிலில் ஒரு பெரிய உயர்வு ஏற்படப்போவதை குறிக்கும்.
ஏதாவது தெய்வங்கள் அல்லது வழிபாட்டு முறைகள், நோன்பு இருப்பது போன்ற ஆன்மீக நிகழ்வுகள் பற்றி சிந்திக்கும்போது அது தொடர்பான கனவுகள் வந்தால் உங்கள் குடும்பத்தில் அமைதியும் ,கணவன் மனைவி இடையே ஒற்றுமையும் பலப்படும் என்றர்த்தம்.
ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான பறவைகளை காண்பதுபோல் கண்டால் சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சி. உங்கள் வாழ்க்கையில் இருந்த தடைகள் நீங்கி, நீங்கள் சுதந்திரமாக செயல்பட போகிறீர்கள் என்று அர்த்தம். வெளிநாட்டிலிருந்து அல்லது தூரத்து இடங்களில் இருந்து நல்ல லாபம் தரும் செய்திகள் உங்களைத் தேடிவரும்.
வண்ணணப் பறவைகளை கண்டால் அது உங்கள் படைப்பாற்றல் மற்றும் எதிர்காலப் பொலிவைக் குறிக்கும்.
ஒரு வலுவான கோட்டையை கனவில் கண்டால் தொழில் ரீதியாக நீங்கள் மிகவும் பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருக்கிறீர்கள் என்று பொருள். உங்களை எதிர்க்கும் சவால்கள் மற்றும் நபர்களை நீங்கள் வீரத்துடன் முறியடிப்பீர்கள் என்று பொருள்.
பழங்கள் கனவில் வந்தால் செல்வம் பெருகும். நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்க போவதை குறிக்கும்.
சிவப்பு நிற பழங்களை கனவில் கண்டால் ஆசை மற்றும் அன்பை குறிக்கும். கருப்பும், ஊதா நிறப்பழங்கள் என்றால் சில சிறிய தடைகளுக்கு பிறகு வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கும்.
இனிப்பான பழங்களை அறுவடை செய்வது போலவும், சாப்பிடுவது போலவும் கனவு கண்டால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான செய்திகள் வரப்போகிறது என்று அர்த்தம். குறிப்பாக நிதிநிலை முன்னேற்றம், நீங்கள் முதலீடு செய்துள்ள பங்குகளில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம்.
பெரிய மரத்தில் பழங்கள் குலுங்குவதைப் பார்ப்பது நீங்கள் எடுத்து வைக்கும் புதிய முயற்சிகள் அல்லது திட்டங்கள் வெற்றியில் முடியும் என்பதைக் குறிக்கும்.
ஆதலால், இது போன்ற கனவுகளை காணுங்கள். வெற்றி பெறுங்கள்.