'அரோகரா' மந்திரத்தின் பின்னால் இருக்கும் அந்த மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு!

பல்லக்கு தூக்கிகளின் களைப்பைப் போக்க உதித்த மந்திரம் முருகன் கோஷமாக மாறிய சுவாரசியப் பின்னணி!
அரோகரா மந்திரம் - Arohara Mantra Meaning
அரோகரா மந்திரம் - Arohara Mantra MeaningImage credit: Gemini
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

'அர ஹரோ ஹரா' என்ற சிவனடியார்களின் மந்திரமே காலப்போக்கில் மருவி 'அரோகரா' என்று அழைக்கப்படுகிறது. 'அரன்' (ஹர) என்றால் தீமைகளையும் துன்பங்களையும் நீக்கி காப்பவன் என்று பொருள். வடமொழியில் 'அரோகம்' என்றால் நோயற்ற தன்மை என்று பொருள்படும். இந்த பக்தி முழக்கத்தை முதன் முதலில் திருஞானசம்பந்தர் காலத்தில் சைவ அடியார்கள் பயன்படுத்தினர்.

இந்த அரோகரா மந்திரம் சொல்லுக்கு ஆன்மீக ரீதியாகப் பல ஆழமான பொருள்கள் உள்ளன. அரன் என்றால் காப்பவன் என்றும், ஹர என்றால் துன்பங்களை நீக்குபவன் என்றும் பொருள். இவை இரண்டும் இணைந்து மருவி அரோகரா என்று அழைக்கப்படுகிறது. அரோகரா என்பதற்கு "எல்லாம் வல்ல இறைவனே, எங்களின் பிறவித் துன்பங்களையும் நோய் நொடிகளையும் அழித்து எங்களைக் காத்தருள வேண்டும்" என்பதே இதன் உட்பொருளாகும். இது சைவ சமயத்தின் முதன்மை மந்திரமான 'ஹர ஹரோ ஹரா' என்பதன் சுருக்கமாகும்.

நோயற்ற வாழ்வு: 

அரோகம் என்றால் நோய் இல்லாமல் இருப்பது என்று பொருள். இறைவனை அழைக்கும் பொழுது நமது உடல் மற்றும் மன நோய்கள் நீங்கவேண்டும் என்ற வேண்டுதலாக இது அமைகிறது.

அறிவியல் மற்றும் மூச்சுப்பயிற்சி நுட்பம்: 

காவடி எடுப்பவர்களும் மலையேறும் பக்தர்களும் மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருப்பதற்கும், சோர்வடையாமல் இருப்பதற்காகவும் இந்த ஒலியை எழுப்புகின்றனர். 'அரோ' என்று சொல்லும் பொழுது  உள்மூச்சும், 'கரா' என்று சொல்லும்பொழுது வெளிமூச்சும் சீராக இயங்குவதால் உடல் சோர்வடையாமல் இருக்க முடிகிறது. களைப்பு குறைகிறது.

இதனை முதலில் யார் சொன்னது தெரியுமா? 

இந்த சொல் உருவான வரலாறு சைவ சமய இலக்கியங்களோடும் நாயன்மார்களோடும் தொடர்புடையது. இந்த அரோகரா என்ற பக்தி முழக்கம் முதன்முதலில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் காலத்தில் சிவபெருமானையும் முருகப்பெருமானையும் வழிபட்ட சைவ சமய அடியார்களால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.

பழங்காலத்தில் இறைவனை தரிசிக்கும் போது பக்தர்கள் எழுப்பிய அர ஹரோ ஹரா என்ற கோஷம் காலப்போக்கில் மக்களின் உச்சரிப்பில் எளிமையாகி அரோகரா என்று நிலைபெற்றது.

இதையும் படியுங்கள்:
பக்தர்களின் வேண்டுதலை அன்னையிடம் சேர்க்கும் அற்புத கிளி: திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயில் ரகசியம்!
அரோகரா மந்திரம் - Arohara Mantra Meaning

திருஞானசம்பந்தர் காலத்து வரலாற்று நிகழ்வு:

திருஞானசம்பந்தர் ஒருமுறை பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்த பொழுது பல்லக்கு தூக்குபவர்கள் களைப்பை மறக்க 'ஏலேலோ ஏலேலோ' என்று பாடிக்கொண்டு சென்றனர்.

இதைக்கேட்ட திருஞானசம்பந்தர் அதற்கு என்ன பொருள் என்று கேட்க அவர்களோ இதற்குப் பொருள் எதுவும் கிடையாது.  அலுப்பு தெரியாமல் அதாவது களைப்பு தெரியாமல் பல்லககு தூக்குவதற்காக இப்படி சொல்வதுண்டு என்று கூறினார்கள்.

அரோகரா மந்திரம் - Arohara Mantra Meaning
அரோகரா மந்திரம் - Arohara Mantra MeaningImage credit: Gemini

இதைக் கேட்ட திருஞானசம்பந்தர் பொருளற்ற சொற்களைச் சொல்வதற்கு பதிலாக பொருளுள்ள இறைவன் நாமத்தை சொல்லுமாறு அறிவுறுத்தினார். அவர் கற்றுக்கொடுத்த 'அர ஹரோ ஹரா' என்ற மந்திரமே காலப்போக்கில் அரோகரா என்று பக்தர்களால் உச்சரிக்கப்படுகிறது. இறைநாமத்தை உச்சரித்தபடி சுமை தூக்கும்பொழுது உடல் வலி மறந்து, அந்த உழைப்பே ஒரு தியானமாக மாறியதாக வரலாறு கூறுகிறது.

இந்த மரபே இன்றும் காவடி சுமக்கும் பக்தர்களிடம் தொடர்கிறது. ஆரம்பத்தில் சைவர்களால் சிவபெருமானுக்காகச் சொல்லப்பட்ட இந்த மந்திரம் பின்னர் சிவ மைந்தனான முருகப்பெருமானுக்கும் உரிய பக்தி முழக்கமாக மாறியது.

காவடி வழிபாட்டில் அரோகரா முழக்கத்தின் முக்கியத்துவம்:

காவடி வழிபாட்டில் அரோகரா என்ற முழக்கம் பக்தர்களின் துன்பம், பாவம் மற்றும் கர்மவினைகளை நீக்கி இறைவனின் அருளைப் பெறும் ஒரு சக்திவாய்ந்த ஆன்மீகக் கோஷமாக விளங்குகிறது. காவடிச் சுமையுடன் செல்லும் பக்தர்களுக்கு உடல் வலியை மறக்கச் செய்து மனவலிமையையும் தெய்வீக ஆற்றலையும் தருவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக் காலங்களில் பல மைல் தூரம் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், தோளில் காவடி சுமந்தும் செல்லும் பக்தர்களுக்கு இந்த முழக்கம் உடல் வலியையும், சோர்வையும், களைப்பையும் மறக்கச் செய்கிறது.

இதையும் படியுங்கள்:
மதுரை நகரின் மர்மமான காவலன்: 2000 ஆண்டு பழமையான கூடலழகர் கோவிலின் இரகசியங்கள்!
அரோகரா மந்திரம் - Arohara Mantra Meaning