ஓம் வடிவில் அமைந்த அஷ்டலட்சுமி கோவில்! தஞ்சை பெரிய கோவில் பாணி ரகசியம் தெரியுமா?

தஞ்சை பெரிய கோவில் போல நிழல் தரையில் விழாத கட்டடக் கலை மற்றும் 4 அடுக்கு அஷ்டாங்க விமான வடிவமைப்பு.
அஷ்டலட்சுமி கோவில் - Besant Nagar Ashtalakshmi
அஷ்டலட்சுமி கோவில் - Besant Nagar Ashtalakshmi
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அஷ்டலட்சுமி கோவில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு கடல் அலைகளின் ஓசைக்கு மத்தியில் அமைதியான சூழலில் அமைந்துள்ள இக்கோவிலில் மகாலட்சுமியின் 8 வடிவங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடியும்.

மூலவர்: மகாவிஷ்ணு அன்னை மகாலட்சுமியுடன்

தல விருட்சம்: வில்வமரம்

தீர்த்தம்: சமுத்திர புஷ்கரணி (வங்காள விரிகுடா)

கோவிலின் தனித்துவமான சிறப்புகள்

ஓம்கார க்ஷேத்திரம்:

கோவில் 'ஓம்' வடிவமைப்பில் கடற்கரையை நோக்கியவாறு கட்டப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும். இந்தியாவில் உள்ள லட்சுமி தேவியின் ஆலயங்களில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மிகச் சில கோவில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள மூலவர்கள் வங்காள விரிகுடாவை நோக்கியவாறு வீற்றிருக் கிறார்கள். கோபுரத்தின் நிழல் தரையில் விழாதபடி தஞ்சை பெரிய கோவில் பாணியில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.

அஷ்டாங்க விமான வடிவமைப்பு:

மற்ற தென்னிந்திய கோவில்களைப் போலல்லாமல் இதன் சன்னதிகள் நான்கு அடுக்குகளாக பிரிக்கப்பட்டு, 9 சன்னதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன. ஒரு சன்னதிக்கு மேல் மற்றொரு சன்னதி வராதவாறு சிற்ப சாஸ்திரப்படி இது வடிவமைக்கப் பட்டுள்ளது.

தரிசன வரிசை முறை:

முதல் தளத்தில் மகாவிஷ்ணு உடனுறை மகாலட்சுமி திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். ஆதிலட்சுமி, தான்யலக்ஷ்மி மற்றும் தைரியலட்சுமி ஆகிய தேவியர்கள் முதல் தளத்தில் உள்ளனர். இரண்டாம் தளத்தில் படிக்கட்டுகள் வழியே மேலே சென்றால் கஜலக்ஷ்மி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி ஆகிய தேவியர்கள் அருள்புரிகின்றனர்.

இங்கிருந்து சென்னை கடற்கரையின் அழகிய காட்சியையும் நம்மால் காணமுடியும். மூன்றாம் தளத்தில் தனலட்சுமி தேவி சன்னதி உள்ளது. தரிசனத்தை முடித்துக் கீழே இறங்கி வரும் வழியில் சந்தான லட்சுமி சன்னதி அமைந்துள்ளது. மேலும் இங்கு தசரத சக்கரவர்த்தி வழிபட்டதாகக் கூறப்படும் சந்தான கோபாலகிருஷ்ணர் சன்னதியும் உள்ளது.

அஷ்டலட்சுமி கோவில் - Besant Nagar Ashtalakshmi
அஷ்டலட்சுமி கோவில் - Besant Nagar Ashtalakshmi

இந்தக் கோவிலில் உள்ள சன்னதிகளுக்கு செல்வதற்கு குறுகலான படிக்கட்டுகளில் ஏறி இறங்கவேண்டும். எனவே படிக்கட்டுகளில் ஏறும்போது சற்று கவனம் தேவை.

மேலும் தசாவதாரம், கணபதி, தன்வந்திரி, குருவாயூரப்பன், ஆஞ்சநேயர் மற்றும் சுதர்சன சன்னதிகளும் அமைந்துள்ளன. ஆகம முறைப்படி இங்கு ஆறு கால பூஜைகள் நடத்தப்படுகின்றன. விளக்குகள் ஏற்றுவதற்கு நெய் மட்டுமே இங்கு பயன் படுத்தப்படுகிறது.

அஷ்டலட்சுமிகளும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை வழங்குகின்றனர். ஆதிலட்சுமி ஆன்மீக வளத்தையும், தான்யலட்சுமி பசியிலிருந்து காப்பதும், உணவு மற்றும் விவசாய வளத்தை தருவதிலும், தைரியலட்சுமி தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை கொடுப்பதிலும், கஜலட்சுமி சகல செல்வத்தையும், செழிப்பையும், சந்தான லட்சுமி குழந்தை வரம் தருவதையும், விஜயலட்சுமி எல்லாம் முயற்சிகளிலும் வெற்றி தருவதையும், வித்யாலக்ஷ்மி கல்வி, அறிவு மற்றும் ஞானம் தருவதிலும், தனலட்சுமி செல்வத்தை வழங்குவதிலும் சிறப்பாக அருள்புரிகிறார்கள்.

முக்கிய திருவிழாக்கள்:

இங்கு பல முக்கிய திருவிழாக்கள் நடைபெறுகின்றன. வரலட்சுமி விரதம், நவராத்திரி விழா, தீபாவளி லட்சுமி பூஜை, தமிழ் புத்தாண்டு என சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி ஒன்பது நாட்களும் இங்குள்ள லட்சுமிதேவியருக்குப் பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், பல வண்ண மலர்களால் அர்ச்சனைகளும், தனித்துவமான அலங்காரங்களும் செய்யப்படுகின்றன.

நவராத்திரி 10 நாட்களிலும் அம்பிகைக்கு மிகவும் விசேஷமான 'லக்ஷ குங்குமார்ச்சனை' பூஜைகள் இங்கு பிரத்தியேகமாக நடத்தப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
கும்பகோணம் சாரங்கபாணி கோவில்: பக்தனுக்கு இறைவனே திதி கொடுக்கும் 7 அற்புத ரகசியங்கள்!
அஷ்டலட்சுமி கோவில் - Besant Nagar Ashtalakshmi

புரட்டாசி நவராத்திரி பெருவிழாவின் பொழுது ஒவ்வொரு நாளும் தாயாருக்கு வெவ்வேறு விதமான சிறப்பு அலங்காரங்கள் மற்றும் புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது. ஹோமங்களும், கர்நாடக இசை நிகழ்ச்சிகளும் வெகு விமர்சையாக நடைபெறும்.

அஷ்டலஷ்மி கோவில் சென்னையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். கடற்கரை அருகில் அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர். கோவில் அருகே எலியட் கடற்கரையும் (Besant Nagar Beach), அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தையும் பார்ப்பதற்காக மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.

கோவில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
கேட்ட வரம் தரும் ஆர். குன்னத்தூர் வைகுண்ட பெருமாள்! இதுவரை அறியாத ஆன்மீக தகவல்கள்!
அஷ்டலட்சுமி கோவில் - Besant Nagar Ashtalakshmi
logo
Kalki Online
kalkionline.com