ஆகஸ்ட் மாத ஆன்மீக காலண்டர்: வரலட்சுமி விரதம் முதல் ஓணம் பண்டிகை வரை...

ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் 31-ம்தேதி வரை வரும் பண்டிகைகள் மற்றும் விரதங்கள் உள்ளிட்ட முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் பார்க்கலாம்.
August Events|ஆன்மிக நிகழ்வுகள்
August Events|ஆன்மிக நிகழ்வுகள்AI Image
Updated on

இந்த ஆகஸ்ட் ஆன்மிக அட்டவணையில் சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, மாத சிவராத்திரி, சர்வ அமாவாசை, வரலட்சுமி விரதம், நாக சதுர்த்தி, கருட பஞ்சமி, ஓணம், மீலாடி நபி, ஆவணி அவிட்டம் போன்ற முக்கிய விரதங்கள், பித்ரு தர்ப்பணம் செய்யும் நாள், வாஸ்து செய்ய உகந்த நேரம், சுபமுகூர்த்த நாட்கள் என பக்தர்களுக்கான தினசரி வழிபாட்டு வழிகாட்டி வழங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாத ஆன்மிக நிகழ்வுகள் :

ஆகஸ்ட் 1 : தேய்பிறை திரிதியை, ஸ்ரீரங்கம் நம்பெருமான், திருவள்ளூர் வீரராகவ பெருமாள், மதுரை கூடலழகர் இத்தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

ஆகஸ்ட் 2 : தேய்பிறை சதுர்த்தி, அமிர்த யோகம், சங்கடஹர சதுர்த்தி.

ஆகஸ்ட் 3 : தேய்பிறை பஞ்சமி, சித்த யோகம், சகல நதித் தீர்த்தங்களிலும் ஆடிப்பெருங்கு விழா, திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

ஆகஸ்ட் 4 : தேய்பிறை சஷ்டி, சஷ்டி விரதம், சித்த யோகம், சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.

ஆகஸ்ட் 5 : தேய்பிறை சப்தமி, சித்த யோகம், கரிநாள், சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் பொங்கல் விழா.

ஆகஸ்ட் 6 : தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை விரதம், கர்த்தர் ரூபம் மாறிய தினம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பிரம்மோற்சவம் ஆரம்பம்.

ஆகஸ்ட் 7 : தேய்பிறை நவமி, சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் ரதோத்ஸவம், இருக்கன்குடி மாரியம்மன் விழா தொடக்கம், திருத்தணி முருகன் தெப்பம்.

ஆகஸ்ட் 8 : தேய்பிறை தசமி, சித்த யோகம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தந்தப் பரங்கி நாற்காலியிலும் ஸ்ரீரெங்கமன்னார் ஹனுமார் வாகனத்திலும் பவனி.

ஆகஸ்ட் 9 : தேய்பிறை ஏகாதசி, ஏகாதசி விரதம், சித்த யோகம்.

ஆகஸ்ட் 10 : தேய்பிறை துவாதசி, அமிர்த யோகம், பிரதோஷம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியில் ஐந்து கருட சேவை.

ஆகஸ்ட் 11 : தேய்பிறை சதுர்த்தசி, மாத சிவராத்திரி, சித்த யோகம்.

ஆகஸ்ட் 12 : சர்வ அமாவாசை, பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பெருந்திருவிழா, நயினார்கோவில் ஸ்ரீசௌந்திர நாயகி சிவலிங்க பூஜை.

ஆகஸ்ட் 13 : வளர்பிறை பிரதமை, அமிர்த யோகம், ராமேஸ்வரம் பர்த வர்த்தினியம்மன், திருவாடானை சிநேகவல்லியம்மன் ரதோத்ஸவம், திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

ஆகஸ்ட் 14 : வளர்பிறை துவிதியை, ஆடிப்பூரம், சந்திர தரிசனம், சித்த யோகம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் பெருந்தேரில் பவனி, இருக்கன்குடி மாரியம்மன் பெருந்திருவிழா.

ஆகஸ்ட் 15 : வளர்பிறை திரிதியை, தேவமாதா மோட்சத்திற்கான நாள், சுவர்ண கௌரீ விரதம்.

ஆகஸ்ட் 16 : வளர்பிறை சதுர்த்தி, சதுர்த்தி விரதம், நாக சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆவணி பெருவிழா தொடக்கம்.

ஆகஸ்ட் 17 : வளர்பிறை பஞ்சமி, சித்த யோகம், விஷ்ணுபதி புண்ணியகாலம், கருட பஞ்சமி, மதுரை சோமசுந்தரர் நாரைக்கு முக்தியருளிய காட்சி.

ஆகஸ்ட் 18 : வளர்பிறை சஷ்டி, சஷ்டி விரதம், சித்த யோகம்.

ஆகஸ்ட் 19 : வளர்பிறை சப்தமி, கரிநாள், மதுரை சொக்கநாதர் தருமிக்கு பொற்கிழியருளிய காட்சி.

ஆகஸ்ட் 20 : வளர்பிறை அஷ்டமி, சித்த யோகம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு, மதுரை ஸ்ரீசோமசுந்தரர் உலவாய்க்கோட்டையருளிய காட்சி, ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு.

August Events|ஆன்மிக நிகழ்வுகள்
August Events|ஆன்மிக நிகழ்வுகள்AI Image

ஆகஸ்ட் 21 : வளர்பிறை நவமி, வரலட்சுமி விரதம், மதுரை சொக்கநாதர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, விருஷபாரூட தரிசனம்.

ஆகஸ்ட் 22 : வளர்பிறை தசமி, சித்த யோகம், மதுரை சோமசுந்தரர் வளையல் விற்றருளிய காட்சி, இரவு சுவாமி பட்டாபிஷேகம், சுவாமி அம்பாள் தங்க பல்லக்கில் பவனி.

ஆகஸ்ட் 23 : வளர்பிறை ஏகாதசி, ஏகாதசி விரதம், சித்த யோகம், சுபமுகூர்த்த நாள், வாஸ்து நாள் (காலை 7.23 மணி முதல் 7.59 மணி வரை வாஸ்து செய்ய நன்று), மதுரை சிவபெருமான் நரிகளை பரிகளாக்கிய திருவிளையாடல்.

ஆகஸ்ட் 24 : வளர்பிறை துவாதசி, குறுக்குத்துறை முருகப்பெருமான் திருவீதிஉலா, மதுரை சோமசுந்தரர் புட்டுத் திருவிழா.

ஆகஸ்ட் 25 : வளர்பிறை துவாதசி, பிரதோஷம், சித்த யோகம், மதுரை சொக்கநாதர் விறகு விற்றருளிய காட்சி, விருதுநகர் ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் ரதோத்ஸவம்.

ஆகஸ்ட் 26 : வளர்பிறை திரயோதசி, ஓணம் பண்டிகை, மீலாடி நபி, திருவோண விரதம், கரிநாள், மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் சட்டத்தேரில் பவனி.

இதையும் படியுங்கள்:
ஏப்ரல் மாத ஆன்மிக காலண்டர்: முக்கிய விசேஷங்கள் மற்றும் முகூர்த்த நாட்கள்!
August Events|ஆன்மிக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 27 : வளர்பிறை சதுர்த்தசி, பௌர்ணமி, ஆவணி அவிட்டம், நடராஜர் அபிஷேகம், சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

ஆகஸ்ட் 28 : இன்றும் பௌர்ணமி, சித்த யோகம், ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

ஆகஸ்ட் 29 : தேய்பிறை பிரதமை, சித்த யோகம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவ பெருமாள், மதுரை ஸ்ரீகூடழகர் இத்தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை, இன்று கருட தரிசனம் நன்று.

ஆகஸ்ட் 30 : தேய்பிறை துவிதியை, சுபமுகூர்த்த நாள், அமிர்த யோகம், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு அலங்காரத் திருமஞ்சன சேவை.

இதையும் படியுங்கள்:
பக்திப் பெருக்குடன் ஜூலை: முக்கிய விசேஷங்கள் மற்றும் முகூர்த்த நாட்கள்...
August Events|ஆன்மிக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 31 : தேய்பிறை திரிதியை, சுபமுகூர்த்த நாள், சித்த யோகம், திருச்செந்தூர் முருகப்பெருமான் உற்சவாரம்பம், பெரிய தங்கப் பல்லக்கில் புறப்பாடு கண்டருளல்.

logo
Kalki Online
kalkionline.com