சனியின் பார்வையால் மாறிய அனுமன் நிறம்! கருப்பு ஆஞ்சநேயர் கோயிலின் ரகசியம் தெரியுமா?

சனீஸ்வரனின் வக்கிர பார்வையில் இருந்து தப்பிக்க நல்ல அனுமனை வழிபட வேண்டியதன் பின்னணி.
கருப்பு அனுமன் - Nalla Hanuman Nizamabad
கருப்பு அனுமன் - Nalla Hanuman NizamabadAI Image
வி.ரத்தினா

I am V Rathina . Born and brought up in Madurai. I did BSc ( special maths) from Lady Doak college Madurai . Soon after completion of my graduation joined Telecom Department at Hyderabad and Worked as Chief Accounts Officer Writing Tamil script, short stores and jokes are my passion right from the school days. Written few scripts in school/college competition and won prizes. My articles/stories are published in various Magazines.. I got more encouragement and inspiration when started writing for Kalki Group. My sincere thanks to Kalki Group. I also sincerely hope to continue writing very useful and beneficial articles for the readers.

Updated on

தெலங்கானாவில் உள்ள நிஜாமாபாத், காஜுலேபேட், புருட்கலியில் அமைந்துள்ள 'ஸ்ரீ நல்ல (கருப்பு) ஹனுமான் மந்திர்' ஹனுமானின் கருப்புச் சிலையைக் கொண்டுள்ள மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். காலா ஹனுமானின் தரிசனம் பெறுவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள்.

பெரும்பாலான கோயில்களில் நாம் காணும் கருப்பு அனுமன் சிலைகள் சிவப்பு அல்லது காவி நிறத்தில் இருக்கும். ஆனால் கருப்பு நிற அனுமன் சிலைகளும் கோயில்களில் பரவலாகக் காணப்படுகின்றன.. அனுமனின் இந்தக் கருப்புச் சிலைகள் வைக்கப்பட்டதற்குப் பின்னால் ஒரு வலுவான புராணக்கதை உள்ளது.

ஒன்பது கோள்கள் அமைந்திருக்கும் நவகிரகத்தின் தலைவன் சூரிய பகவான் .அவர் தான் ஆஞ்சநேயரின் குரு ஆவார். தன் குருவிற்காக எதையும் செய்ய தயாராக இருந்தார் ஆஞ்சநேயர். தன் குருதட்சணையை செலுத்துவதற்காக ஏதாவது கட்டளையிடும்படி சூரியபகவானிடம் வலியுறுத்தினார்.

பல வற்புறுத்தல்களுக்குப் பிறகு, சூரியபகவான் தன் மகன் சனிபகவானை வீட்டிற்கு அழைத்து வரும்படி அனுமனிடம் வேண்டினார். சனிபகவான் வேறு எவரும் இல்லை எனக்கும் சாயா தேவிக்கும் பிறந்த மகன் என்றும், மகள்களான யம மற்றும் யாமிக்கு மூத்த சகோதரர் என்றும் கூறினார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சனி பகவானை சந்திக்க ஹனுமன் புறப்பட்டார்.

அனுமன், சனி தேவனை அணுகி, அவரைத் தன் தந்தையிடம் திரும்பிச் செல்லும்படி வற்புறுத்தினார். ஆனால், அவரைக் கண்டவுடன் சனி தேவன் கடும் கோபம் கொண்டு, அனுமன் மீது தன் வன்மப் பார்வையைச் செலுத்தினார். அதன் காரணமாக, அனுமனின் நிறம் கருமையாக மாறியது.

ஆனால் அது அனுமனை தடுக்கவில்லை, மேலும் அவர் சனி தேவனைத் தன்னுடன் சூரியதேவனிடம் திரும்பி வர சம்மதிக்க வைத்தார். அனுமனின் பக்தியைக் கண்டு சனி தேவன் பெரிதும் ஈர்க்கப்பட்டார், மேலும் பதிலுக்கு, சனிக்கிழமையன்று அனுமனை யார் வழிபட்டாலும், அந்த நபர் தனது சொந்த வக்கிரப் பார்வையால் பாதிக்கப்பட மாட்டார் என்று அவரிடம் உறுதியளித்தார்.

கருப்பு அனுமன் - Nalla Hanuman Nizamabad
கருப்பு அனுமன் - Nalla Hanuman NizamabadAI Image

கருங்கல்லால் செய்யப்பட்ட ஹனுமான் சிலை 1836-ஆம் ஆண்டில் இந்தக் கோயிலில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தவிர, உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலியிலும் மற்றும் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலும் பிரபலமான காலா ஹனுமான் மந்திர்கள் உள்ளன.

ஸ்ரீ நல்ல ஹனுமான் மந்திரில் கருங்கல்லால் ஆன ஹனுமான் சிலை நிறுவப்பட்டதன் பின்னணியில் ஒரு கதை சொல்லப்படுகிறது. அந்தக் கதையின்படி, இங்கு ஹனுமானின் கருப்புச் சிலை நிறுவப்பட்ட, அந்த இடம் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள்:
அறிவியலுக்கு எட்டாத அதிசயம்: நெய் உருகாத சிவன் கோயில் எங்குள்ளது?
கருப்பு அனுமன் - Nalla Hanuman Nizamabad

ஒரு நாள், அந்தச் சிலையை உருவாக்கியவர், அதை சந்த் சிரோமணி மடத்தில் நிறுவுவதற்காக ஒரு மாட்டு வண்டியில் எடுத்துச்சென்று கொண்டிருந்தார். அப்போது இந்த இடத்தைக் கடந்து செல்லும்போது, அந்த மாட்டு வண்டி திடீரென நின்றுவிட்டது. அந்த நபர் மாட்டு வண்டியை நகர்த்த முயன்றார், ஆனால் அவரால் கடுமையாக முயற்சி செய்தும் முடியவில்லை. அவருடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.

பிறகு இரவாகவே, அந்த மனிதர் வண்டியையும் சிலையையும் அந்த இடத்தில் விட்டுவிட்டு வீட்டிற்குச் செல்ல முடிவு செய்தார். அதே இரவில், சிரோமணி சத்குரு மகாராஜ் சுவாமிக்குக் கனவில் தோன்றிய அனுமன், வண்டி நின்றிருந்த மேற்குத் திசையில் சிலையை நிறுவுமாறு கூறினார். 1836 -ல் அனுமனின் வழிகாட்டுதலின்படி, அவர் அடர்ந்த காட்டில் குறிப்பிட்ட இடத்தில் கருங்கல்லால் ஆன அனுமன் சிலையை நிறுவினார்.

இதையும் படியுங்கள்:
மதிய நேரத்தில் கோவில் நடை சாத்தப்படுவது ஏன்? அறிவியலும் ஆன்மிகமும் கூறும் ரகசியங்கள்!
கருப்பு அனுமன் - Nalla Hanuman Nizamabad

எண்ணெய் மற்றும் சந்தன விழுது கொண்டு செய்யப்படும் அபிஷேகம்.

கோயிலில் உள்ள கருப்பு நிற அனுமன் சிலையைத் தவிர, தத்தாத்ரேய பகவானின் சிலைக்கு முன்பாக மற்றொரு சிலையும் நிறுவப்பட்டது. இப்பகுதி இன்று நிஜாமாபாத் நகரத்தின் மையமாக மாறியுள்ளது. இங்குள்ள பூசாரிகள் அனுமன் சிலைக்குத் தவறாமல் எண்ணெய் பூசுகிறார்கள். இதற்குப் பிறகு சந்தனக் கலவையால் அனுமன் சிலையை அலங்கரிக்கின்றனர்.

கோயிலில் ஸ்ரீ நல்ல (கருப்பு) அனுமன் சிலையை 108 முறை வலம் வந்தால், அந்த நபருக்கு மன அமைதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்களின் கடந்தகால தீய செயல்களுக்கு மன்னிப்புக் கேட்கவும், அச்செயல்களுக்குப் பரிகாரம் தேடவும் இங்கு வருகிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com