

குடும்பத்தில் உள்ள உங்களின் அடிமனதில் புல்லாங்குழல் மற்றும் புல்லாங்குழலுடன் கொண்ட கிருஷ்ணர் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாமா என்ற சஞ்சலத்துடன் கூடிய எண்ணம் இருக்கிறதா? இனி அந்த எண்ணத்தை மனதில் இருந்து அகற்றி விடுங்கள். தாராளமாக வைத்துக்கொண்டு வழிபடலாம்.
புல்லாங்குழல் என்பது நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் அற்புதமான இன்னிசை கருவி என்பதையும், புல்லாங்குழல் இசைக்கும்போது, அதிலிருந்து வரூம் நாதம், கேட்பவர்கள் மனதில் இருக்கும் கவலைகளை போக்க வல்லது என்பதையும் மனதில் முதலில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். அதைவிட நீங்கள் அந்த புல்லாங்குழல் கிருஷ்ண பகவானுக்கு பிடித்தமானது என்ற உண்மையை புரிந்துகொண்டால் உங்கள் அச்சம் அகலும்.
புல்லாங்குழலை வீட்டில் வைக்கலாமா? அல்லது வேண்டாமா? என்பதையும், அப்படி வைத்தால் என்ன நடக்கும் என்பதையும் பார்ப்போம்.
1. புல்லாங்குழல் மூங்கிலில் செய்யப்படுவதால் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் அகன்றுவிடும் என்பதால், இனி நீங்கள் எந்த கவலையும் படாமல் வீட்டில் புல்லாங்குழல் வைத்துக்கொண்டு இருப்பது நல்லதே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
2. நம்முடைய இந்து மதம் என்ன சொல்கிறது தெரியுமா? இந்த புல்லாங்குழல் நாம் வணங்கும் கிருஷ்ண பகவான் கையில் இருப்பதால், நிச்சயம் அந்த பொருள் புனிதமானதாகவே கருத வேண்டும் என்று சொல்கிறது.
3. புல்லாங்குழல் வீட்டில் வைத்து இருந்தால், அந்த வீட்டில் குடும்ப ஒற்றுமை ஓங்கி இருப்பதாகவும், அங்கு அமைதியான சூழ்நிலை உருவாகும் என்று நம்பப்படுகிறது.
4. புல்லாங்குழல் வைத்திருக்கும் வீட்டில் அன்பும் காதலும் வலுப்பெறும்.
எனவே புல்லாங்குழல் வீட்டில் இருப்பதும் நல்லது. அதனை ஊதுவதுபோல் கிருஷ்ணர் இருக்கும் படத்தை வைப்பதும் தவறில்லை. ஊதும் புல்லாங்குழலோடு இருக்கும் கிருஷ்ண பகவான் படம் இருப்பதால், கிருஷ்ணர் வீட்டில் இருக்கும் செல்லம் அனைத்தையும் ஊதிதள்ளிவிடுவார் என்ற மூடநம்பிக்கையை இன்றிலிருந்து மனதில் இருந்து அகற்றிவிடுங்கள்.
கிருஷ்ண பகவானின் இணைபிரியாத அம்சம்தான் புல்லாங்குழல். அது அந்த கிருஷ்ண பகவானுக்கு அழகை கூட்டும் பொருள் தான் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இனி எந்தவித அச்சமும் தயக்கமும் இன்றி, வீட்டில் புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணர் படத்தை வைத்துக் கொண்டு வழிபட்டு, அவர் திருவடியே சரணம் என்று இருப்போம்.