பர்சில் பணத்தை ஈர்க்கும் ஏலக்காய் மந்திரம்: வீண் பண விரயம் இனி இல்லை!

Cardamom mantra to attract money
Sri Mahalakshmi
Published on

தாயார் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த ஒரு பொருள் ஏலக்காய். இது நறுமணப் பொருட்களில் ஒன்றாகவும் இருக்கிறது. மகாலட்சுமி வசிக்கும் இடங்களில் எல்லாம் இந்த ஒரு வசீகரப் பொருள் இருந்தால், பேரதிர்ஷ்டம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. இதை மாலையாகக் கட்டி மகாலட்சுமிக்கு சாத்தி வழிபட்டு வந்தால் செல்வம் சேரும் என்கிற நம்பிக்கையும் உண்டு.

ஏலக்காயை சமையலுக்குப் பயன்படுத்தினாலும், ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் இதை பெருமளவு பயன்படுத்தும்பொழுது அதிக நன்மைகளும் ஏற்படுகிறது. குறிப்பாக, வெள்ளிக்கிழமைகளில் வீட்டு பூஜை அறையில் உள்ள மகாலட்சுமி சிலை அல்லது படத்திற்கு ஏலக்காய் மாலை சாத்தி, ஏலக்காய் தீர்த்தம் வைத்து வழிபட்டால் குடும்பப் பிரச்னைகள் தீரும், வருமானம் அதிகரிக்கும், செல்வமும் பெருகும் என்பது ஐதீகம். அந்த அளவிற்கு ஏலக்காய் பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தியை கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஐப்பசி பௌர்ணமியில் முருகனுக்கு இந்த இரு பொருளைப் படைத்தால் கோடீஸ்வரர் ஆவது உறுதி!
Cardamom mantra to attract money

ஒன்பது ஏலக்காயை ஒரு நூலில் கோர்த்து உங்களுடைய வலது கையில் கட்டிக்கொண்டால், உங்களைப் பிடித்த தரித்திரம், பீடை எல்லாம் ஒழியும்! துரதிர்ஷ்டம் நீங்கி, அதிர்ஷ்டம் வரத் துவங்கும். அதேபோல், ஏலக்காயை நன்கு பொடித்து, இடித்து ஒரு பாலித்தீன் கவரில் சிறிய அளவில் கட்டி மணி பர்சில் வைத்துக் கொள்ளலாம் அல்லது பேப்பரில் கூட மடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதனால் பணம் வீண் விரயம் ஆகாமல், உங்களிடம் தொடர்ந்து சேர்ந்துகொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. மணி பர்ஸ் மட்டுமல்ல, பணம் இருக்கக்கூடிய எல்லா இடங்களிலும் நீங்கள் இது போல ஏலக்காய்களை பொடித்து வாசம் வர போட்டு வைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஐப்பசி பௌர்ணமி: அன்னாபிஷேகத்தின் அற்புத ரகசியம்!
Cardamom mantra to attract money

பீரோவில் பணத்தை வைத்தாலும் பச்சை கற்பூரத்துடன், ஏலக்காயையும் நுணுக்கி சேர்த்து வைத்தால், அந்த இடத்தில் மகாலட்சுமி வாசம் அதிகரிக்கத் துவங்கும். இதனால் பணச் சேர்க்கை உயரும், வருமானம் பெருகும் என்பது நம்பிக்கை. வியாபாரம் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் கூட இதுபோல மகாலட்சுமி படத்துக்கு முன்பு ஒரு கலசத்தில் தண்ணீரை நிரப்பி அதில் 4, 5 ஏலக்காயை நுணுக்கி போட்டு தினசரி பூஜை செய்து வழிபட்டு வந்தால் மகாலட்சுமியின் அருளால் வருமானம் அதிகரிப்பதோடு, வியாபாரம், தொழில் சிறக்கும் என்பது நம்பிக்கை.

மகாலட்சுமியின் முன்பு வைக்கும் இந்த ஏலக்காய் தண்ணீரை தினமும் காலையில் கால் படாத இடங்களில் அல்லது செடிகளுக்கு ஊற்றி விட்டு, புதிய ஏலக்காய் தண்ணீரை மாற்றி வைக்கலாம். இப்படியே செய்து வர, குடும்பத்தில் காசு பணத்துக்கு குறைவிருக்காது. கையில் உள்ள பணமும் வீண் செலவு ஆகாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com