சித்ரா பவுர்ணமி: விரதம் மற்றும் கிரிவலம் செல்லும் முறை; செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

சித்ரா பவுர்ணமி நாளில் விரதம் இருந்து கிரிவலம் செல்ல உகந்த நேரம், இந்த நாளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
சித்ரா பவுர்ணமி  வழிபாடு
சித்ரா பவுர்ணமி வழிபாடு
Published on

இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.53 மணிக்கு தொடங்கி நாளை 12-ம் தேதி (திங்கட்கிழமை) இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது.

மிகவும் புனிதமான இந்து பண்டிகைகளில் ஒன்றான சித்ரா பௌர்ணமி சைத்ரா அல்லது சித்திரை மாதத்தில் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். சித்திர பௌர்ணமி பெரும்பாலும் ராஜபுத்திர புராணங்களுடன் தொடர்புடையது. இந்த புராணத்தில் முக்கிய கடவுள் சித்ரகுப்தர். சித்ரகுப்தரிடம் அனைவரின் கர்மாக்கள் அடங்கிய விரிவான பதிவேடுகள் இருப்பதாகவும், அந்த பதிவுகளின்படி இறந்த பிறகு யார் எந்த சொர்க்கம் அல்லது நரகத்திற்குச் செல்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்குப் பரிகாரம் செய்து, அவரிடம் மன்னிப்பு கேட்டு, நன்மை செய்ய விரும்பும் பக்தர்களுக்கு இந்த சித்ரா பௌர்ணமி நன்மை பயக்கும். இது சித்திரை மாதத்தின் முழு நிலவில் வருவதால், மனிதகுலத்தின் அனைத்து செயல்களுக்கும் கணக்கிட்டு, கடந்த கால பாவங்களுக்கு பரிகாரம் செய்யும் சித்ரகுப்தரை வழிபடுவதற்கு இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

சித்ரா பவுர்ணமி நாளில் விரதம் இருந்து கிரிவலம் செல்ல உகந்த நேரம், இந்த நாளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோவிலில் இறைவனை வலம் வருதலைப் போல 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலையை வலம் வரும் வழமை இங்குள்ளது. இந்த கிரிவலப்பாதையில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு.

இதையும் படியுங்கள்:
சித்ரா பௌர்ணமி சிறப்புகள்!!
சித்ரா பவுர்ணமி  வழிபாடு

மலையை வலம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம்.

கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ (நமசிவாய, சிவாயநம) அல்லது திருமுறைகளையோ ( தேவாரம், திருவாசம்……) உச்சரிக்க வேண்டும். அதை தவிர்த்து வேற எதையும் பேசக்கூடாது.

கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும், அவசரமாகவோ, வேகமாகவோ அல்லாத மற்றவர்களை இடித்து கொண்டுச் செல்லக் கூடாது.

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் மலைவலம் வருவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்ய வேண்டியவை:

புனித நீராடல்: இந்த நாளில் அதிகாலையில் எழுத்து புனித நீராடி, தூய ஆடையை அணிந்து அந்த நாளை பயபக்தியுடன் தொடங்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சித்ரா பௌர்ணமி அன்று கன்னியாகுமரி கடலில் அரங்கேறும் அதிசயம்!
சித்ரா பவுர்ணமி  வழிபாடு

பிரார்த்தனை செய்து ஆசிர்வாதம் பெறுங்கள்: இது ஒரு நீதியான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்வதற்கும், கடந்த கால செயல்களுக்கு மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு நாள் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து சித்ரகுப்தரை வழிபட்டால் கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

சடங்குகளைச் செய்யுங்கள்: இந்த நாளில் இறைவனை வழிபாடு செய்தல், தீபம் ஏற்றுதல் மற்றும் பிரார்த்தனை செய்தல் போன்ற பாரம்பரிய சடங்குகளில் பங்கேற்க உகந்த நாள்.

விரதம் : அன்றைய தினம் முழுவதும் உணவு எதுவும் அருந்தால் விரதம் அனுஷ்டிக்கலாம் அல்லது பழங்கள் மற்றும் சாத்விக் உணவுகளை சாப்பிட்டு விரதம் அனுஷ்டிக்கலாம். விரதம் இருப்பவர்கள் உப்பு சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது மற்றும் பால், பிற பால் பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதை நினைவில் கொள்க.

வழிபட வேண்டிய இறைவன்: சித்ரா பௌர்ணமி நாளில், சித்திர குப்தரை வழிபடுவதன் மூலம், சிவனருளை எளிதில் பெறலாம் என்பது ஐதீகம். சில பக்தர்கள் அம்பாள், மீனாட்சி அம்மன் மற்றும் கள்ளழகரையும் வழிபடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சித்ரா பௌர்ணமி - சித்திரகுப்தர் வரம் பெற்ற தலம் - பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் கோயில்
சித்ரா பவுர்ணமி  வழிபாடு

நைவேத்தியம்: சித்ரஅன்னங்கள், வெண் பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கலுடன் எல்லா காய்கறிகளும் சேர்த்து செய்த கூட்டு நைவேத்தியமாக வைத்து சித்திரகுப்தனை நினைத்து, வழிபாடு செய்தால் செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் அவர் தருவார் என்று கூறப்படுகிறது.

தானதர்மம்: அன்றைய தினம் ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த தான தர்மங்களை செய்யுங்கள். பழைய ஆடைகளை கொடுக்காதீர்கள். பூஜை மற்றும் நைவேத்ய பிரசாதத்திற்குப் பிறகு, பருப்பு, அரிசி, காய்கறிகள் மற்றும் தட்சிணை (பண தானம்) வழங்கலாம்.

செய்யக்கூடாதவை :

அசைவ உணவு மற்றும் போதைப் பொருட்களைத் தவிர்க்கவும்: இறைச்சி சாப்பிடுவதையும் மது அல்லது பிற போதைப் பொருட்களை உட்கொள்வதையும் தவிர்க்கவும்.

வாக்குவாதங்கள் மற்றும் எதிர்மறையைத் தவிர்க்கவும்: நேர்மறையான செயல்களில் ஈடுபடுவதும், எதிர்மறையான செயல்களைத் தவிர்ப்பதும் நல்லது. யாரிடமும் கோபமாகவே அல்லது தகாத அல்லது கெட்ட வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். குற்றங்கள் மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் முக்கியம். பாவமாகக் கருதப்படும் எந்தவொரு செயல்களையும் இந்த நாளில் செய்யாமல் தவிர்ப்பது சித்ரகுப்தனின் பாவ கணக்கில் இருந்து தப்பிக்க உதவும்.

சித்ரா பவுர்ணமி என்பது சுய சுத்திகரிப்பு, பிரார்த்தனை மற்றும் செயல்களை திரும்பிப் பார்ப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும். இந்த கொண்டாட்டம், மதச் சடங்குகளைச் செய்தல், உண்ணாவிரதம் அல்லது சுயபரிசோதனை செய்தல் என எதுவாக இருந்தாலும், உள்ளத்தை உற்சாகப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

இதையும் படியுங்கள்:
சித்ரா பௌர்ணமிக்கும் இந்திர வழிபாட்டுக்கும் என்ன சம்பந்தம்?
சித்ரா பவுர்ணமி  வழிபாடு

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com