கோசாலைகளில் உண்மையில் நடப்பது என்ன? அறியப்படாத பின்னணி!

ஆதரவற்ற கால்நடைகளைப் பராமரித்து பஞ்சகவ்யா மூலம் சுயசார்பு பெறும் தமிழக கோசாலைகள்.
பசுக்கள் பாதுகாப்பு - Cow protection
பசுக்கள் பாதுகாப்பு - Cow protection
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

கோசாலை என்பது தெருக்களில் அலைந்து திரியும் அல்லது கைவிடப்பட்ட வயதான மற்றும் ஆதரவற்ற பசுக்களையும், மாடுகளையும் பாதுகாத்து வளர்க்கும் உறைவிடம் அல்லது பசுமடம் ஆகும். 'கோ' என்றால் பசு. 'சாலை' என்றால் தங்குமிடம் என்று பொருள். ஆதரவற்ற வயதான மற்றும் பால் தராத மாடுகளுக்கு உணவு, இருப்பிடம் மற்றும் மருத்துவ சிகிச்சை இங்கு வழங்கப்படுகிறது.

தமிழர்களின் வாழ்வியலோடும் ஆன்மீகத்தோடும் பிணைந்துள்ளன கோசாலைகள். உலகின் முதல் அதிகாரப்பூர்வ கோசாலை இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள ரேவாரி (Rewari) என்ற இடத்தில் அமைக்கப்பட்டது.

முற்காலத்தில் தமிழர்கள் கோயில்களோடு இணைத்து கோசாலைகளை உருவாக்கினர். கோவிலுக்கு காணிக்கையாக வரும் தானியங்கள் மற்றும் கோவிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் இருந்து இந்த ஆநிரைகளுக்கான உணவுகள் பெறப்பட்டன.

பாரம்பரிய மாட்டு இனப் பாதுகாப்பு:

காங்கேயம் போன்ற பாரம்பரிய நாட்டு மாட்டு இனங்களை அழிந்துவிடாமல் பசுக்கள் பாதுகாப்பு, இறைச்சிக்கு அனுப்பப்படும் மாடுகளைத் தடுத்து அவற்றுக்கு அடைக்கலம் தருவது இதன் முக்கியமான நோக்கமாகும்.

பஞ்சகவ்யா மற்றும் இதர தயாரிப்புகள்:

பசுவின் சாணி, கோமியம் மூலம் விபூதி, விதைப்பந்துகள், பஞ்சகவ்யா விளக்குகள் போன்ற இயற்கைப் பொருட்களை தயாரிக்கிறது. நவீன கோசாலைகளில் ரசாயன உரங்களுக்கு மாற்றாக மாடுகளின் சாணம், கோமியத்திலிருந்து இயற்கை உரங்கள், சாம்பிராணி மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள் போன்ற 40க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருவாய் ஈட்டப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில்: அபூர்வ சம்மோகன கிருஷ்ணர் ரகசியம்!
பசுக்கள் பாதுகாப்பு - Cow protection

சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் சோப்பு, பல்பொடி, சாம்பிராணி மற்றும் கொசு விரட்டிகள், நெய், சாணம், கோமியம் உள்ளிட்ட ஐந்து பொருட்கள் கொண்டு எரிக்க கூடிய பஞ்சகவ்ய அகல் விளக்குகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலான கோசாலைகள் பொதுமக்கள் வழங்கும் நன்கொடைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு மானியங்கள் மூலம் செயல்படுகின்றன.

மாடுகள் பராமரிப்பு:

சில கால்நடைகளின் வயதான காலத்தில் விவசாயிகளால் அவற்றை பராமரிக்க முடியாமல் விட்டுவிடுவதும், சிலர் அடிமாடுக்கு கொடுத்து விடுவதும், மேலும் சிலர் அப்படி கொடுக்க மனமில்லாமல் கோசாலையில் விட்டு விடுவதும் என இருக்கிறார்கள்.

அதேபோல் நோய்வாய்ப்பட்டுள்ள பசுக்கள், பராமரிக்க ஆளில்லாமல் தெருக்களில் அலைகின்ற பசுக்கள் ஆகியவற்றை தன்னார்வலர்கள் மீட்டு வந்து இந்த கோசாலையில் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். அவைகள் இறக்கும் வரை அவற்றிற்குத் தேவையான உணவையும் ஆதரவையும் இந்த கோசாலைகள் வழங்குகின்றன.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீதேவி வெள்ளியங்கிரி கோசாலை 3,000க்கும் மேற்பட்ட மாடுகளை பாதுகாக்கிறது. ஈஷா கோசாலை மற்றும் திருவள்ளூர் தேவேந்தவாக்கம் கோசாலை போன்றவை புகழ்பெற்ற சில பெரிய கோசாலைகளாகும்.

பசுக்கள் பாதுகாப்பு - Cow protection
பசுக்கள் பாதுகாப்பு - Cow protection

விபூதி தயாரிப்பு:

மாடுகள் 365 நாட்களும் சாணம் போடும். எனவே விபூதி தயாரிக்க தேவையான மூலப்பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் விபூதிகள் கோயில்களுக்கும் வழங்கப்படுகிறது. 10 கிலோ சாணத்திலிருந்து 2 கிலோ விபூதி தயாரிக்க முடியும் என்கின்றனர். முதலில் சாணத்தை தட்டி நன்கு காய வைத்து, நெல் பதர் படுக்கையில் வைத்து கோபுரம் போல் அடுக்கி கருக்காவால் முடி நெருப்பிடுகிறார்கள்.

இவை அதிக வெப்பத்தில் 5 நாட்கள் உள்ளே இருக்கும். பிறகு பார்த்தால் இந்தச் சாண உருண்டைகள் வெள்ளையாக, தொட்டால் உதிர்ந்துவிடும் நிலைக்கு மாறிவிடும். அதனை எடுத்து சலிக்க தரமான விபூதி தயார். இவற்றை பாக்கெட்டுகளில் அடைத்து கோவில்கள், மடங்கள், சைவ அடியார் குழுக்களுக்கு கொடுக்கப்படுகிறது.

தரமான சாணத்திலிருந்து கிடைக்கும் விபூதி உடல்நலத்திற்கும், வழிபாட்டிற்கும் சிறந்தது. ஆனால் தற்பொழுது டாலமைட் என்கிற கல்மாவு, கருக்காய்த் தவிடு, பேப்பர் கழிவு மூலம் தயாரிக்கப்படும் கலப்பட விபூதியே அதிக பயன்பாட்டில் உள்ளது. இவை தோல் நோயை உண்டாக்கும் அபாயம் உண்டு. எனவே தரமான விபூதியை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

பசுவின் சிறுநீர் - கோமியம் சில கோசாலைகளில் பினாயில் ஆகிறது. கோமியம் என்பது ஒரு இயற்கை கிருமி நாசினி. ஒரு மாட்டிலிருந்து 10 லிட்டர் வரை பினாயில் தயாரிக்க முடியும் என்று கூறப்படுகிறது. கோமியத்தை குடுவையில் காய்ச்சி "அர்க்" என்ற பொருளை தயாரிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
மதுரை நகரின் மர்மமான காவலன்: 2000 ஆண்டு பழமையான கூடலழகர் கோவிலின் இரகசியங்கள்!
பசுக்கள் பாதுகாப்பு - Cow protection