

டிசம்பர் 1 - வளர்பிறை ஏகாதசி, சுபமுகூர்த்த நாள், சர்வ ஏகாதசி, பீஷ்ம ஏகாதசி, திருவெண்காடு, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்,
டிசம்பர் 2 - வளர்பிறை துவாதசி, பிரதோஷம், திருவண்ணாமலை கோவிலில் பரணி தீபம்
டிசம்பர் 3 - வளர்பிறை திரதோதசி, திருக்கார்த்திகை, திருவண்ணாமலை தீபம், கார்த்திகை விரதம், கரிநாள், திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் ஜோதி ஸ்வரூபமாய் மஹாதீப ஜோதி தரிசனம்.
டிசம்பர் 4 - வளர்பிறை சதுர்த்தசி, பௌர்ணமி, ஸ்ரீபாஞ்சராத்தர தீபம், திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சல நாயகர் சந்திரசேகரர் தெப்போற்சவம்.
டிசம்பர் 5 - தேய்பிறை பிரதமை, திருவண்ணாமலை ஸ்ரீஅபிதா குசாம்பிகை சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வர கைலாச கிரிப்பிரதட்சணம்.
டிசம்பர் 6 - தேய்பிறை துவிதியை, ஸ்ரீபரசுராம ஜெயந்தி, திருவண்ணாமலை சுப்பிரமணியர் தெப்போற்சவம், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளபிரானுக்கு பால் அபிஷேகம், இன்று கருட தரிசனம் நன்று
டிசம்பர் 7 - தேய்பிறை திரிதியை
டிசம்பர் 8 - தேய்பிறை சதுர்த்தி, சுபமுகூர்த்த நாள், சங்கடஹர சதுர்த்தி, தேவமாதா கருவுற்ற திருநாள், திருவெண்காடு, திருக்கடவூர், திருவாடானை, திருக்கழுகுன்றம் தலங்களில் 1008 சங்காபிஷேகம், காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.
டிசம்பர் 9 - தேய்பிறை பஞ்சமி, சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
டிசம்பர் 10 - தேய்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த நாள், சஷ்டி விரதம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
டிசம்பர் 11 - தேய்பிறை சப்தமி, திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு, சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
டிசம்பர் 12 - தேய்பிறை அஷ்டமி, கீழ்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் ஊஞ்சல் சேவை.
டிசம்பர் 13 - தேய்பிறை நவமி, திருவள்ளூர் வீரராகவ பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.
டிசம்பர் 14 - தேய்பிறை தசமி, சுபமுகூர்த்த நாள், இன்று கண்ணூறு கழித்தல், சூரிய வழிபாடு நன்று.
டிசம்பர் 15 - தேய்பிறை ஏகாதசி, சுபமுகூர்த்த நாள், சர்வ ஏகாதசி, கார்த்திகை சோமாவாரம் சிவன் கோவில்களில் சங்காபிஷேகம்.
டிசம்பர் 16 - தேய்பிறை துவாதசி, இன்று மார்கழி மாதம் பிறப்பு, ஆலயங்களில் திருப்பாவை, திருவெம்பாவை விழா தொடக்கம், திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்,
டிசம்பர் 17 - தேய்பிறை திரயோதசி, பிரதோஷம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
டிசம்பர் 18 - தேய்பிறை சதுர்த்தசி, மாத சிவராத்திரி, திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
டிசம்பர் 19 - சர்வ அமாவாசை, ஹனுமன் ஜெயந்தி, ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருநெடுந்தாண்டகம், நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றியருளல்,
டிசம்பர் 20 - சகல விஷ்ணு ஆலயங்களிலும் பகற்பத்து உற்சவாரம்பம், இன்று கருட தரிசனம் நன்று
டிசம்பர் 21 - வளர்பிறை பிரதமை, சந்திர தரிசனம் நன்று, கரிநாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பகற்பத்து உற்சவ சேவை, இன்று கண்ணூறு கழித்தல், சூரிய வழிபாடு நன்று
டிசம்பர் 22 - வளர்பிறை துதிவியை, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாள் காளிங்க நர்த்தன காட்சி.
டிசம்பர் 23 - வளர்பிறை திரிதியை, திருவோண விரதம், திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
டிசம்பர் 24 - வளர்பிறை சதுர்த்தி, சதுர்த்தி விரதம், கரிநாள், கிறிஸ்துமஸ் ஈவ்
டிசம்பர் 25 - வளர்பிறை பஞ்சமி, கிறிஸ்துமஸ், சஷ்டி விரதம், பிள்ளையார் நோன்பு, மஹாவிதிபாதம்,
டிசம்பர் 26 - வளர்பிறை சஷ்டி, கரிநாள்,
டிசம்பர் 27 - வளர்பிறை சப்தமி, திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல், சிதம்பரம் சிவபெருமான் தங்க சூரிய பிரபையில் பவனி.
டிசம்பர் 28 - வளர்பிறை அஷ்டமி, சூரிய வழிபாடு நன்று, சிதம்பரம் சிவபெருமான் உலா.
டிசம்பர் 29 - வளர்பிறை தசமி, குற்றாலம் குற்றாலநாதர் பஞ்ச மூர்த்திகளுடன் ரதோற்சவம், சிதம்பரம் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் புறப்பாடு, ஆவுடையார் கோவிலில் மாணிக்கவாசகர் ஊர்துவத்தாண்டவ காட்சி.
டிசம்பர் 30 - வளர்பிறை ஏகாதசி, ஸ்ரீவைகுண்ட ஏகாதசி, ரைவத மன்வாதி, சகல விஷ்ணு ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் முத்தங்கி சேவை, சகல விஷ்ணு ஆலயங்களில் ராபத்து உற்சவாரம்பம்.
டிசம்பர் 31 - வளர்பிறை துவாதசி, கார்த்திகை விரதம், நியூ இயர்ஸ் ஈவ், ஆவுடையார்கோவில் ஸ்ரீமாணிக்க வாசகர் எல்லாம் வல்ல சித்தராய் காட்சி, இரவு வெள்ளி குதிரையில் சேவகனாய் காட்சி.