தினமும் காலையில் குளிக்கும் போது நீரில் சில குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து குளிப்பதன் மூலமாக நம்மிடம் இருக்கும் எதிர்மறையான எண்ணங்கள், கண் திருஷ்டி, பொருளாதார பிரச்னை ஆகியவை நீங்கி எண்ணமும், சிந்தனையும் தெளிவு பெறும். அந்த 5 பொருட்கள் என்னவென்பதை இந்தப் பதிவில் காண்போம்.
1. கல் உப்பு: நாம் குளிக்கும் நீரில் வெண்மை நிற கல் உப்பை சேர்த்து குளிப்பதன் மூலம் நம்முடைய Auraவை அது சுத்தப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. Salt therapy என்று சொல்லப்படும் வெந்நீரில் கல் உப்பு போட்டு குளிப்பதால் ஆஸ்துமா, மூக்கடைப்பு, ஜலதோஷம் போன்ற சுவாசப் பிரச்னைகள் அனைத்தும் சரியாகும். கல் உப்பை போட்டு தினமும் குளிப்பதால், நம்மை சுற்றியுள்ள எதிர்மறையான எண்ணங்கள் முற்றிலும் நீங்கும். கல் உப்பு மகாலக்ஷ்மியின் அம்சம் என்று சொல்லப்படுவதால், மகாலக்ஷ்மியின் அருளும், ஆசியும் கிடைக்கும்.
2. மஞ்சள் தூள்: வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைவது திருமணம் என்று கூறுவார்கள். ஆனால், ஒரு சிலருக்கு திருமணத்தடை ஏற்படும். அவர்கள் வியாழக்கிழமை அன்று குளிக்கும் நீரில் மஞ்சளை போட்டு குளித்தால், திருமணத்தடை விரைவில் நிவர்த்தியாகும் என்று சொல்லப்படுகிறைது. விஷ்ணு பகவானுக்கு மஞ்சள் திலகமிட்டு வேண்டிக்கொள்வது நல்ல பலனை தரும். மேலும் மஞ்சளில் Antibiotic பண்புகள் உள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும், சரும பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும்.
3. ஏலக்காய்: ஏலக்காய் மகாலக்ஷ்மிக்கும், குபேரருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு பொருள். இதிலிருந்து வரும் வாசனை அனைவரையும் ஈர்க்கும் தன்மையைக் கொண்டது. இந்த ஏலக்காயை குளிக்கும் நீரில் போட்டு குளிப்பதன் மூலம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஆற்றலை பெறுவீர்கள். தொழிலில் நல்ல லாபம் ஏற்படும். தொடர்ந்து ஏலக்காய் கலந்த நீரில் குளிப்பதால், உங்களை சுற்றியுள்ள பீடை விலகும்.
4. பால்: சிலர் அதிகமாக பதற்றத்துடனும், ஸ்ட்ரெஸ்ஸுடனும் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பாலை குளிக்கும் நீரில் கலந்து குளிப்பதன் மூலம் மனமும், உடலும் நல்ல நிம்மதியாவும், அமைதியாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பாலை குளிக்கும் நீரில் கலந்து குளிப்பதன் மூலம் உடலில் உள்ள பல்வேறு நோய்களையும், பொருளாதார பிரச்னைகளையும் நீக்கும் என்று சொல்லப்படுகிறது.
5. குங்குமப்பூ: குங்குமப்பூவை சிறிது எடுத்து சற்று வறுத்து அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடலுக்கும், மனதிற்கும் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். நல்ல வாசனை பொருள் என்பதால் நல்ல மணத்துடன் வசியத்தன்மை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த 5 பொருட்களில் நீங்கள் எதைப் பயன்படுத்தி குளிக்க விரும்புகிறீர்கள் என்று சொல்லுங்கள்.