
மகா சிவராத்திரி என்பது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பண்டிகையாகும். இந்த நாள் 'சிவனின் மகா இரவு' என்றும் அழைக்கப்படுகிறது. இந்து பஞ்சாங்கத்தின்படி, மாசி (பால்குண) மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தின் போது சதுர்த்தசி திதியில் மகாசிவராத்திரி அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால் மகாசிவராத்திரி இந்தாண்டு மார்ச் 26-ம்தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.
மகாசிவராத்திரி என்பது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் புனித சங்கமம் ஆகும். இந்த நாள் மிகவும் அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. தெய்வீக தம்பதியரின் ஆசீர்வாதத்தைப் பெற, பக்தர்கள் இந்த நாளில் விரதம் அனுஷ்டித்து பூஜை மற்றும் ருத்ராபிஷேகம் செய்து சிவபொருமானை வழிபாடு செய்கின்றனர்.
மத நம்பிக்கைகளின்படி, மகாசிவராத்திரியில் விரதம் இருந்து வழிபாடு செய்யும் அனைவரின் விருப்பங்களையும் சிவபெருமான் நிறைவேற்றுகிறார். சிவபெருமானின் அருளைப் பெற மகாசிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்கள் இங்கே உள்ளன.
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவை :
* மகாசிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து எந்த பூஜை சடங்குகளையும் தொடங்கும் முன் முதலில் புனித நீராட வேண்டும். குளித்துவிட்டு சுத்தமான மற்றும் பிரகாசமான ஆடைகளை அணியுங்கள்.
* தங்கள் வீட்டையும், சிவபெருமான் இருக்கும் சிறப்பு பூஜை அறையையும் சுத்தம் செய்ய வேண்டும்.
* நிஷிதா காலத்தின் போது உங்கள் பிரார்த்தனைகளைச் செய்து, பூஜை செய்யுங்கள். பிப்ரவரி 27-ம்தேதி நிஷிதாகால பூஜை நேரம் அதிகாலை 12.09 மணி முதல் மதியம் 12.59 மணி வரை இருக்கும். நிஷித கால காலத்தில் இது சிவபெருமானின் ஆசிகளைப் பெற மிகவும் மங்களகரமான நேரமாக நம்பப்படுகிறது. இந்த நேரம் உயர்ந்த ஆன்மீக சக்தியுடன் தொடர்புடையது.
* சிவபெருமானை மகிழ்விக்க உங்களால் முடிந்த இடங்களில் ஜலாபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகத்தை தூய்மையான அர்ப்பணிப்புடனும் பக்தியுடனும் செய்யுங்கள்.
* உங்களால் செய்ய முடிந்தால் மட்டுமே அன்றைய தினம் முழுவதும் உபவாச விரதத்தை பின்பற்றவும். வயதானவர்கள் பால், பழங்களை சாப்பிட்டு விரதம் அனுஷ்டிக்கலாம். முக்கியமாக மௌன விரதம் கடைபிடிப்பது உயர்வான வாழ்க்வை தரும்.
* அன்றைய தினம் உங்களால் முடிந்த அளவு தானம், தர்மம் செய்ய வேண்டும். சிவன் கோவில்களில் அன்னதானம் செய்ய பொருளாகவோ, பணமாகவோ உதவி செய்யலாம்.
* அன்றைய தினம் அமைதியாக சிவ சிந்தனையுடன் சிவபெருமானை மனதிற்குள் தியானம் செய்து கொண்டிருக்க வேண்டும். ஷிவ் சாலிசா, சிவபெருமானின் கதைகள் போன்ற புனித நூல்களைப் படிப்பது நல்லது.
* சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற இந்த புனித நாளில் பக்தி பாடல்கள் மற்றும் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
* மகாசிவராத்திரி அன்று இரவு உறங்காமல் சிவன் ஆலயங்களில் நடக்கும் நான்கு ஜாம பூஜைகளில் பங்கேற்க வேண்டும்.
* கர்ப்பிணிகள், முதியவர்கள் அல்லது உடல்நிலை சரியில்லாதவர்கள் உபவாச விரதத்தை தவிர்த்து சிவவழிபாட்டை மட்டும் செய்யலாம்.
மகாசிவராத்திரி விரதத்தின் போது செய்யக்கூடாதவை :
* மகாசிவராத்திரி அன்று யாரிடமும் சண்டை போடவோ, கடும் சொல்லை பயன்படுத்தவோ, வார்த்தைகளால் காயப்படுத்தவோ கூடாது.
* மக்கள் மகாசிவராத்திரி நாளில் சாத்வீக வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்து, இறைச்சி, புகையிலை அல்லது மது அருந்துதல், வெங்காயம், பூண்டு, சூதாட்டம், சண்டை அல்லது துஷ்பிரயோகம் போன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
* மகாசிவராத்திரி அன்று அரட்டை அடிப்பது, டிவி பார்த்து அன்றைய பொழுதை கழிப்பது போன்ற செயல்களை செய்யக்கூடாது.
* அன்றைய தினம் வில்வ இலைகளை சிவபெருமானுக்கு சமர்பிக்காமல் போனால் உங்கள் மகாசிவராத்திரி விரத பூஜை முழுமையடையாமல் போகலாம்.
* மகாசிவராத்திரி நாளில் உப்பு சாப்பிடக்கூடாது.
* மகாசிவராத்திரி நாளில் முடி மற்றும் நகங்களை வெட்டுவது அசுபமாக கருதப்படுகிறது.
* மகாசிவராத்திரி அன்று விரதச் சடங்குகளைச் செய்யும்போது சிவலிங்கத்தின் முழு பிரகாரத்தையும் சுற்றி வரக்கூடாது.