

பொதுவாக ராகு காலத்தில் விரதமிருந்து துர்க்கைக்கு விளக்கு ஏற்றுவது காலம் காலமான வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ராகுகால பூஜையை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்ய வேண்டியது மிக அவசியம். இதை செய்பவர்கள் எலுமிச்சம்பழத்தை நறுக்கி ரசத்தைப் பிழிந்து அதன் பிறகு மூடியைத் திருப்பி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றி அம்மன் முன் வைத்து வணங்குவார்கள் இப்பூஜை தொடங்குமுன் ஒன்று கவனிக்க வேண்டும். ராகு காலம் தொடங்கிய பிறகே எலுமிச்சையை நறுக்கவேண்டும் அதற்கு முன்பாக நறுக்கக் கூடாது
எலுமிச்சை தேவபழம் என்பதால் அதனை நறுக்கும்போது தோஷங்கள் ஏற்படும். எனவே எலுமிச்சையை நறுக்கும்போது சரஸ்வதியின் பீஜ மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பழத்தைப் பிழிந்துவிட்டு மூடியை வெளியே திருப்பும்போது மகாலட்சுமிக்கு உரிய க்ரீம் என்ற மந்திரத்தை உச்சரிப்பது அவசியம்.
தூய்மையான புதிய பஞ்சு திரியை எலுமிச்சை மூடியில் போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றும் போது க்லீம் என்ற தேவியின் நாமத்தை உச்சரிக்க வேண்டும். எலுமிச்சை விளக்கை ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்றவேண்டும்.
இச் சொல்லுக்கு முப்பெரும் தேவியர் ஆன அம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் அருளை ஒரு சேர்ந்தவரும் சண்டிகா தேவியே அருள்க என்று பொருள். எலுமிச்சை தீய ஆவிகளை நீக்கும். தந்திரத்தில் பயன்படுகிறது. தீய ஆவிகளை அகற்ற எலுமிச்சையை திரிசூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இருபுறங்களிலும் வைக்கப்படுகிறது. மேலும் இதனை நோய்வாய்ப்பட்ட மக்களின் அருகே தொங்கவிடும்போது இது தீய ஆவிகளை விரட்டி அவர்களை நோயிலிருந்து குணமடையும் செய்யும் என்று நம்பப்படுகிறது.
எலுமிச்சை விளக்கை எப்படிச் செய்யவேண்டும்?
துர்க்கைக்காக இந்த விளக்கை ஏற்ற பயன்படுத்தப் படும் எலுமிச்சை தோலிகள் மெல்லியதாக இருக்கவேண்டும். அதனை செங்குத்தாக சரிபாதியாக வெட்ட வேண்டும். கிடைமட்டமாக வெட்டக்கூடாது. சாற்றினை பிழிந்து வெளியேற்ற வேண்டும். பின் பாதி எலுமிச்சையை உள்புறம் வெளியே வருமாறு திருப்பி கிண்ணம்போல் செய்யவேண்டும். பின் அதில் எண்ணையோ நெய்யையோ நிரப்பி பஞ்சு திரியிட்டு ஏற்ற வேண்டும்
எலுமிச்சை விளக்கின் முக்கியத்துவம்.
எலுமிச்சை நம்மை ஒத்ததாகும். மாயை, பேராசை, காமம் மற்றும் கோபம் ஆகியவற்றை கடவுளுக்கு முன்பாக வெளியே எளியவேண்டும். எலுமிசைக்கு உள்ளே இருக்கும் வெள்ளைத்தோல் நம் தூய மனத்தையும், மறைந்திருக்கும் பச்சை விதைகள் பார்வையையும் குறிக்கும்.
திரியின் முக்கியத்துவம்.
வாழைத்தண்டில் செய்யப்பட்ட திரியானது குற்றங்களையும் ஜென்ம பாவங்களையும் நீக்குகிறது.
பருத்தியில் செய்யப்பட்ட திரி நல்ல அதிர்ஷ்டத்தையும், தாமரைத் தண்டில் செய்யப்பட்ட திரி முற்பிறவி விதைகளையும் நீக்கும்.
வெள்ளைப்பூண்டு செடியில் செய்யப்படும் திரி அதிர்ஷ்டத்தைத் தரும்.
புதிய மஞ்சள் பருத்தித் துணி சக்தியின் அருளைத்தரும்.
புதிய சிவப்பு பருத்தித்துணி திருமணம் மற்றும் குழந்தைப்பேறு தடைகளை நீக்கி மந்திரம் தந்திரக்களிலிருந்து விடுபட உதவுகிறது.
நோயால் அவதிப்படுபவர்கள் குணமாக ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்பம் பிரச்னைகள் தீர செவ்வாய் ராகுகாலத்திலும் வேறு பிரச்னைகளுக்கு வெள்ளி ராகு காலத்தில் விளக்கேற்றி அனைத்துப் பிரச்னைகளும் நீங்கி செழிப்போடு வாழலாம்.