

தைப்பூசம் வரும் 1-ம்தேதி (ஞாயிற்று கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளை முருக பக்தர்கள் மறந்தும் கூட தவறவிட்டு விடாதீர்கள். தைப்பூசம் என்பது முருகப்பெருமானுக்கு உகந்த மிக முக்கியமான வழிபாட்டு திருவிழாவாகும். இது தமிழ் மாதமான தை மாதத்தில் பூசம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணையும் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நான்னாளில்தான் பார்வதி தேவி முருகப்பெருமான் சூரனை அழிக்க தன் ஆற்றல் மிக்க ஞான வேலை வழங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.
பூச நட்சத்திரம் ஜனவரி 31-ம்தேதி சனிக்கிழமை இரவு 1.36 மணிக்கு ஆரம்பமாகி பிப்ரவரி 1-ம்தேதி ஞாயிற்றுகிழமை இரவு 12.05 மணி வரை உள்ளது.
தைப்பூச விரதத்தில் முருகனிடம் நாம் வேண்டிய எந்த ஒரு விஷயமும் நடைபெறாமல் போனதாக சரித்திரம் கிடையாது. இதுவரை நீங்கள் விரதம் இருக்கவில்லை என்றாலும் பிப்ரவரி 1-ம்தேதி அன்று ஒருநாள் மட்டும் எப்படி விரதம் இருப்பது, என்ன செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.
பொதுவாக தைப்பூச விரதத்திற்கு 48 நாள், 21 நாள், 7 நாள் என்று அனைவரும் விரதம் இருப்பார்கள். இந்த நாட்களை கொண்டு நீங்கள் விரதத்தை கடைபிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. தைப்பூசம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் முதல் நாளே வீட்டையும் பூஜை அறையையும் சுத்தம் செய்ய வேண்டும். வரும் பிப்ரவரி 1-ம்தேதியன்று சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து குளித்துவிட்டு வீட்டில் உள்ள முருகன் படத்தை துடைத்து சுத்தம் செய்து விட்டு அதில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து சிவப்பு நிற அரளி பூக்களால் அழகாக அலங்காரம் செய்து தீபம் ஏற்றி வழிபாடு செய்த பின்னர் விரதத்தை தொடங்கவேண்டும்.
அன்றைய தினம் மாலை 6 மணி வரை சமைத்த உணவை எடுத்துகொள்ளாமல், அதற்கு பதிலாக மாலை 6 மணி வரை பால் பழம் மட்டும் சாப்பிட்டு முருகப்பெருமானுக்கு அன்று ஒருநாள் முழுவதும் கடும் விரதம் இருக்க வேண்டும். பிறகு முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த இந்த மந்திரத்தை மனதில் நினைத்துக்கொண்டு
‘ஓம் கார்த்திகேயாய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத்’
உங்கள் கனவுகளையும், உங்கள் வேண்டுதல்களை நினைத்துக்கொண்டு அது நிச்சயமாக நடக்கும் என்று நம்பிக்கையோடு அந்த மந்திரத்தை 108 முறை சொல்லி முருகப்பெருமானிடம் மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.
இல்லையெனில் அன்று முழுவதும் எதுவும் உண்ணாமல் நீர் மட்டும் அருந்தி மனதில் முருகனை மட்டும் தியானித்து முருகனுக்கு உகந்த சஷ்டி கவசம், வேல்மாறல் பாராயணம் செய்யலாம்.
பிறகு அன்று மாலை முருகப்பெருமானுக்கு நெய் வைத்திமாக வைத்த சர்க்கரை பொங்கல், வடை, பாயாசம் போன்றவற்றை படைத்து வழிபாடு செய்த பின்னர் உங்கள் வீட்டில் முருகன் வடிவில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு ஊட்டிவிட்டு நீங்கள் அதை உட்கொண்டு விரதத்தை முடித்து கொள்ள வேண்டும். மிக நம்பிக்கையுடன் இந்த விரதத்தை தொடங்குங்கள். நிச்சயம் நீங்கள் நினைத்தது அனைத்தும் வெற்றியில் முடியும்.
அன்றைய தினம் இந்த பரிகாரத்தை செய்தால் நீங்கள் வேண்டிய அனைத்தும் நிறைவேறும். அதாவது ஒரு மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயம், பச்சை கற்பூரம், ஜவ்வாது வைத்து முடிந்து உங்கள் வேண்டுதலை நினைத்து வீட்டின் பூஜை அறையில் வைத்துவிடுங்கள். தைப்பூசம் அன்று முடிந்து வைத்ததை முருகன் கோவிலுக்கு சென்று மனதார வேண்டிக்கொண்டு உண்டியலில் போட்டு விடுங்கள். இப்படி செய்த 48 நாட்களுக்குள் உங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.
அன்றையதினம் முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு அன்னதானம் செய்தால் முருகன் அருளோடு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.
அதேபோல் தைப்பூச நாளில் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானுக்கு ரோஜா மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தைப்பேறு மற்றும் கேட்ட வரம் கிடைக்கும்.
தைப்பூசம் அன்று இந்த ஐந்து தவறுகளை செய்யக்கூடாது...
தைப்பூசம் என்பது ஆன்மிக ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்த நாள். எனவே அந்த நாளில் சில தவறுகளை செய்வது முருகனை கோபமாக்கும்.
முதலாவதாக தைப்பூசம் அன்று கருப்பு நிற ஆடைகளை அணிக்கூடாது.
இரண்டாவதாக அன்றைய தினம் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.
மூன்றாவதாக முடி மற்றும் நகம் திருத்தம் செய்யக்கூடாது.
நான்காவதாக அன்றைய தினம் அசைவம், மது போன்ற போதை வஸ்துக்களை தொடவே கூடாது.
ஐந்தாவதாக அன்றைய தினம் மிகவும் சக்தி வாய்ந்த நாள் என்பதால் எதிர்மறை எண்ணங்களுடன் முருகனை வழிபடக்கூடாது. தூய மனதுடன் இறைவழிபாடு செய்ய வேண்டும்.
சத்ய நாராயண வழிபாடு
அன்றைய தினம் (ஜனவரி 1-ம்தேதி )பவுர்ணமியும் சேர்ந்து வருவதால் சத்ய நாராயண வழிபாடு செய்தும் மிகுந்த பலனை தரும். பவுர்ணமி அன்று காலை முதல் உபவாசம் இருந்து மாலையில் சந்திரனை தரிசித்த பின் முறைப்படி சத்யநாராயண பூஜை செய்தால் விரதம் இருப்பவர்களுக்கு உள்ள குறைகளை நீக்கி சகல ஐஸ்வர்யங்களையும் தருவேன் என்று ஸ்ரீமந் நாராயணன் சத்தியம் செய்திருக்கிறார். அதனால் தான் அவருக்கு சத்யநாராயணன் என்று பெயர் வந்தது என்று புராணங்கள் கூறுகிறது.
ஸ்ரீ சத்ய நாராயண காயத்ரி மந்திரம்
‘ஓம் பக்த ஜன பூஜாய வித்மஹே
நாரத முன்யாய தீமஹி
தந்தோ சத்யநாராயண ப்ரசோதயாத்’
சத்யநாராயண பூஜையின் போது இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறை உச்சரிக்கவும்.