

தமிழகத்தில் மாமன்னர்களைப் பற்றிப் பேசும்போது சோழர்களின் பெயரைத் தவிர்க்க முடியாது. அவர்கள் கலை,கட்டிடக்கலை, நிர்வாகம், மற்றும் ஆன்மிகத்தில் உலகையே வியக்க வைத்தார்கள். வேர்களில் முதலிடம் பெறுபவர் முதலாம் ராஜேந்திர சோழன். தன் தந்தை ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவில் மகத்துவத்தைப் பார்த்து வளர்ந்த அவர் அதற்கு ஈடாக ஒரு பிரம்மாண்டமான சிவாலயத்தைக் கட்ட விரும்பினார்.
அதுவே கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம். அந்த ஆலயம் உருவான பின்னணியில் ஒரு அதிசய விநாயகரின் அருள் விளையாடல் மறைந்துகிடக்கிறது. கணக்குப் பிள்ளையார் என்று போற்றப்படும் கனக பிள்ளையாரின்் மகிமையை இப்பதிவில் காணலாம்.
கங்கைகொண்ட சோழபுரத்தின் பிரம்மாண்ட பிரகதீஸ்வரர் ஆலயம் அத்புத ஆலயமாகும். கங்கை நதியை படையெடுத்து வெற்றிபேற்ற ராஜேந்திர சோழன் தனது வெற்றியின் நினைவாக நிறுவியதுதான் கங்கை கொண்ட சோழபுரம். இங்கு தஞ்சை ஆவுடையாரருக்கு நிகராக ஒரு சிவாலயத்தைகட்ட முடிவு செய்தார்.
எந்த காரியத்தையும் தொடங்கு முன் விநாயகரை வழிபடுவது மரபு. அதன்படி அரண்மனை அருகில் ஒரு விநாயகர் ஆலயம் கட்டப்பட்டது. அதுவே கனக விநாயகர் கோவிலாகும். கனகவிநாயகர் ஆலயத்தின் வடபகுதியில் பிரகதீஸ்வரர் ஆலயம் பணிகள் தொடங்கின. இதன் மேற்பார்வையை ஒரு அமைச்சரிடம் மன்னன் ஒப்படைத்தார். அவரும் தினமும் பொன், வெள்ளி, கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழிலாளர் ஊதியத்தை முதலில் விநாயகர் திருவடியில் வைத்து வணங்குவார் அவர் ஆசியுடன் திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
பதினாறு ஆண்டுகள் பணி நடைபெற்றது. மன்னனின் கனவு மற்றும் தொழிலாளர்களின் உழைப்பு, அமைச்சரின் அர்ப்பணிப்புடன் சிவாலயம் உயர்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் ராஜேந்திர சோழன் கோவிலை மேற்பார்வையிட வந்தான். ஆலயத்தைச் பார்த்து மகிழ்ந்தான். பிறகு திடீரென்று அமைச்சரிடம் "நாளை காலை இந்தக் கோவிலுக்கு இதுவரை எவ்வளவு செலவானது என்ற கணக்கை அளியுங்கள்" என்றார். அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார். 16ஆண்டு காலமாக பணியில் முழுமையாக ஈடுபட்டு அமைச்சர் ஒவ்வொரு செலவையும் தனியாக பதிவு செய்யவில்லை.
மன்னர் கணக்கு கேட்டதால் கலங்கி விநாயகர் முன் எனக்கு இதற்கு பதில் இல்லை. நீதான் காப்பாற்ற வேண்டும் "என வேண்டினார். அன்று இரவில் அமைச்சர் கனவில் விநாயகர் தோன்றி கவலைப்படாதீர்கள் மன்னர் கேட்டால் எட்டு நூல் எட்டு லட்சம் பொன் செலவானது என்று கூறுங்கள் என்றார். காலையில் ஓலைச்சுவடிகளில் எட்டு நூல் எட்டு லட்சம்பொன் என எழுதி வைத்தார்.
பண்டைய கட்டடக் கலையில் எட்டு நூல் மிக முக்கியமான கருவி. அது கட்டடத்தின் நேர்த்தி, அளவு, வளைவு மற்றும் அளவிடப் பயன்படுத்தும் கருவி. அந்த நூலை வைத்து கட்டுமானப் பொருட்கள் எவ்வளவு பயன்படுத்தப்பட்டன என்பதை கணக்கிட முடியும். இதுவே விநாயகர் அருளிய ரகசியம் மறுநாள் அமைச்சர் இந்த கணக்கை மன்னரிடம் சமர்ப்பித்தார். இவ்வளவு துல்லியமாக எப்படி கணக்கிட்டீர் என்று மன்னன் கேட்க நடந்த உண்மையைச் சொன்னார்.
அமைச்சராக. விநாயகர் கனவில் தோன்றி கணக்கு சொன்னதால் கணக்குப் பிள்ளையார் என்ற பெயர் வந்தது. அமைச்சர் பிள்ளையார் சன்னதி சென்று கண்ணீர் மல்க இனி இவர் சாதாரணப் பிள்ளையார் அல்ல இந்த ஆலயத்தின் கணக்குப் பிள்ளையார் என்று கூறினார். பிள்ளையாருக்கு சிறிய வாசல் உள்ளது. இதை யாரும் எந்த இடத்திற்கும் எடுத்துச் செல்ல முடியாதபடி குறுகிய நுழைவாயிலை அமைக்க அரசர் உத்தரவிட்டார்
இதனால் அன்னியப் படையெடுப்பின்போது இது காக்கப்பட்டது.அன்னிய படையேடுப்பில் கங்கைகொண்ட சோழபுரமும் பிரகதீஸ்வர ஆலயமும் தப்பின.