"தலைமுறைகளைத் தாண்டி வெளிநாடுகளில் உயிர்ப்பெறும் இந்திய பாரம்பரியம்!"

உலகெங்கும் வாழும் தமிழர்களும் இந்திய வம்சாவளியினரும் தசரா மற்றும் விஜயதசமி பண்டிகையை எவ்வாறு கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பற்றிய பார்வை.
தசரா திருவிழா - Vijayadashami Around The World
தசரா திருவிழா - Vijayadashami Around The WorldImage credit: Gemini
நடேஷ் கன்னா

நடேஷ் கன்னா (இயற்பெயர் சிவராம சுப்ரமணியன்), நெல்லை மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்தவர்; ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். 57 ஆண்டுகளாக கல்கி, தீபம், குமுதம், விகடன், துக்ளக், தினமலர் உள்ளிட்ட இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள் எழுதி வருகிறார்.

Updated on: 

தசமி விழா இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் வாழும் இந்துமற்றும் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள் வெகு விமர்சியாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இந்த கட்டுரையில் சில நாடுகளைப் பற்றி பார்ப்போம். 

நேபாளம்

நேபாளத்தில் தசாயன் என்ற பெயரில் அழைக்கப் படுகிறது. இந்த நாட்டின் மிக நீண்ட மற்றும் முக்கியமான தேசிய பண்டிகையாகும். இந்த விழா இரண்டு வாரங்கள் நடைபெறும். இந்த விழாவின்போது துர்காதேவியின் பல்வேறு வடிவங்கள் செய்யப்பட்டு மக்கள் வழிபடுகின்றனர். பெரியவர்கள் சிறியவர்களுக்கு நெற்றியில் அக்ஷதா திலகம் இட்டும் மற்றும் ஆசி வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்கள்.

வங்காளதேசம் 

இங்கு வாழும் சிறுபான்மை இந்துக்கள் துர்கா பூஜை என்ற பெயரில் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். திருவிழாவில் இறுதி நாளில் துர்கா தேவியின் சிலைகள் வண்ணமயமான ஊர்வலங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் கரைத்து விடப்படுகிறது. இது இவர்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும் 

இலங்கை

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நவராத்திரி விஜயதசமி போன்ற பெயரில் ஆன்மீக விழாவாக கொண்டாடப்படுகிறது. கொழும்புவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

இங்கும் தசரா விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. இறுதியில் ராவண வதம் பிரம்மாண்டமாக நடைபெறும் தசரா திருவிழாவின்போது அம்பாள் ஊர்வலங்கள் நடைபெறுகிறது. 

தசரா திருவிழா - Vijayadashami Around The World
தசரா திருவிழா - Vijayadashami Around The WorldImage credit: Gemini

இந்தோனேஷியா 

இந்தோனேசியாவில் உள்ள பாலி மற்றும் ஜாவா தீவுகளில் தசரா பண்டிகை இந்து கலாச்சார முறைப்படி கொண்டாடப்படுகிறது. ராமாயண கதையை மையமாக வைத்து பாரம்பரிய நடனங்கள் நாடகங்கள் நடத்தப்படுகிறது தெருக்களில் அம்மன் ஊர்வலம் நடைபெறுகிறது.

மலேசியா மற்றும் சிங்கப்பூர்

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்கள் இருப்பதால் அங்கு புகழ்பெற்ற மாரியம்மன் கோவில்கள் மற்றும் பிற கோவில்களில் நவராத்திரி கொலு சிறப்பு ஓமங்கள் ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் அம்மன் வீதி உலா கண்ணை கவரும் விதத்தில் நடைபெறுகிறது. 

கரீபியன் நாடுகள் 

ட்ரினிடாட் கயானா சூரினாம் போன்ற இடங்களில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு இருந்து குடியேறிய இந்திய வம்சாவளி மக்கள் பாரம்பரியமாக தசரா விழாவை கொண்டாடி வருகிறார்கள்.  இங்கு ராம் லீலா நாடகங்கள் நடைபெறுகிறது முடிவில் இராவண உருவ பொம்ம பொம்மை எரிக்கப்படுகிறது

நியூசிலாந்து

நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் உள்ள இந்திய சமூகத்தில் துர்கா விழா மற்றும் பரதநாட்டிய நடனங்கள் நாடகங்கள் நடைபெறுகின்றன. இந்த கலாச்சார விழாக்கள் பிரம்மாண்டமான முறையில் நடை பெறுகிறது. முடிவில் ராவணன் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது. துர்கா அலங்காரத்துடன் கூடிய ஊர்வலம் நடைபெறுகிறது.

லண்டன்

லண்டனில் உள்ள பக்தி வேதாந்த மேனர் போன்ற இடங்களில் 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது. ராமாயண நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தினசரி அம்மன் அலங்காரம் நடைபெற்று சிறப்பு வழிபாடும் செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ராவணன் பொம்மை எரிக்கப்படாத அதிசய திருவிழா: குல்லு தசரா சிறப்புகள்!
தசரா திருவிழா - Vijayadashami Around The World

நியூ ஜெர்சி

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் அதிக அளவில் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு நவராத்திரி விழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. ராம்லீலா நிகழ்ச்சிகள் அம்மன் ஊர்வலம் திருவிழா சந்தைகள் என ஊரே களைகட்டும். பத்து நாட்களும் விமர்சையாக தசரா விழா நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் எடுத்துக்கொண்டால் மைசூரில் 11 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள். 

குலசேகரப்பட்டினத்தில் தசரா விழா கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. பக்தர்கள் பல்வேறு வேடமிட்டு வெகு விமர்சியாக கொண்டாடி வருகிறார்கள். இறுதிநாளில் கடற்கரையில் குளித்துவிட்டு அம்பாள் தரிசனம் செய்கிறார்கள். இறுதியில் ராவண வதம் நடைபெறுகிறது. 

பாளையங்கோட்டை

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் தசரா விழா 11 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். 11 அம்மன் கோவிலில் இருந்து சப்பரங்கள் அலங்காரம் செய்யப்பட்டு பாளையம் கோட்டை எருமைக்கடா மைதானத்தில் ஒன்று கூடும். இவைகள் பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருக்கும். இரவில் மகிஷாசுர வதம் நடைபெறும்.

 11 சக்கரங்களும் ஊர்வலம் வருவது மிகவும் சிறப்பாக இருக்கும். இதேபோன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சமயபுரம் மாரியம்மன் கோவில் போன்ற இடங்களிலும் தசரா விழா சிறப்பாக நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள்:
சோழர்கள் வழிபட்ட உக்கிர காளி கோயில்கள்: அறியப்படாத ரகசியங்களும் வரலாற்று அற்புதங்களும்!
தசரா திருவிழா - Vijayadashami Around The World