'கோவிந்தா... கோவிந்தா' – மோட்சம் தரும் திருநாமம்!

govinda-nama-mahimai
govinda-nama-mahimai
Published on

'கோவிந்தா கோவிந்தா' என்றால் கொடுத்தது திரும்ப வராது என்னும் தவறான கருத்தைக் கொண்டிருப்பது முற்றிலும் தவறானது.

'கோவிந்தா கோவிந்தா' என்றால் இறந்தவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் வழியாகும்.

கடவுளின் திருநாமத்தில் ஏமாற்றம் எப்படி அடையமுடியும்? கடவுளின் திருநாமத்தை தவறான செயலுக்கு அர்த்தம் வருமாறு சொல்வது தவறில்லையா?

கோவிந்தா என்னும் திருநாமத்தைப் பற்றி சொல்லுவதற்கும் கேட்பதற்கும் கால அவகாசம் போதுமா என்ன? அவ்வளவு சிறப்புக்கள் பெற்றது இந்த நாமம்.

ஸ்ரீவேங்கடவனின் பக்தர்கள் கோவிந்தா என்று மனமார நேசித்து  அழைத்தால் ஓடோடி வந்து அருள் புரிவார்.

'கோ' என்றால் உலகம், 'விந்தன்' என்றால் காப்பவன்.

ஆக கோவிந்தன் என்பவன் உலகையே காப்பவன்.

விஷ்ணு சகஸ்ரநாமத்தில் ஆயிரம் நாமங்கள் இருந்தாலும், அவற்றில் சிறப்பானது கோவிந்தா என்னும் திருநாமம்தான்.

ஆதிசங்கரர் கூட பஜகோவிந்தத்தில் இந்த நாமத்தின் மகிமையை எடுத்துச் சொல்லி உள்ளார்.

கோவிந்தா என்ற நாமத்தின் ஆழ்ந்த பொருள் போனால் திரும்ப வராது என்பதன் உண்மை அர்த்தம் — இந்த நாமத்தை பற்றிக் கொண்டவன் மீண்டும் பிறவியெடுக்க மாட்டான் என்பதே ஆகும்.

அதாவது — மறுபிறவி இல்லாத நிலை (மோட்சம்)

'கோ' = பசு

'விந்தன்' = காப்பவன்

பசுக்களை காக்கும் பெருமான் ஆகவே இந்த திருநாமம் சொல்லுவது பசுதானம் செய்த புண்ணியத்திற்குச் சமம் என்பதாகும்.

இதற்கு திரெளபதியே உதாரணம்:

மகாபாரதத்தில் திரெளபதி அவமானப்படுத்தப்பட்டபோது, யாராலும் காப்பாற்ற முடியவில்லை. அவள் இருகைகளையும் உயர்த்தி:

'கோவிந்தா கோவிந்தா!' என்று அழைத்தாள். அந்த நாமத்தின் சக்தியால் அவளது ஆடை முடிவில்லாமல் நீண்டுகொண்டே இருந்தது. இதுவே கோவிந்த நாமத்தின் மகிமை!

இதையும் படியுங்கள்:
தீராத நோய் தீர்க்கும் 'வேத' இலை: திருச்செந்தூர் பிரசாத ரகசியங்கள்!
govinda-nama-mahimai

வைணவ தலங்கள் எங்கும் 'கோவிந்தா கோவிந்தா'என்ற முழக்கம் ஒலிக்கிறது. திருமலையில் இந்த நாமம் ஒலிக்கும்போது மனம் ஆனந்தத்தால் நிரம்பிவிடுகிறது.

ஒருவர் இறக்கும் நேரத்தில் அருகில் இருப்பவர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என்று சொல்லுவது — அவருக்கு செய்யும் மிகப் பெரிய ஆன்மீக உதவியாகும். அந்த திருநாமம் அவருக்கு மோட்சம் தரும் வழியைத் தருகிறது.

முக்கிய எச்சரிக்கை:

தயவு செய்து 'கோவிந்தா' என்னும் திருநாமத்தை கிண்டல், கேலி செய்து  தவறான அர்த்தத்தில் பேசவேண்டாம். திருநாமத்தை இகழ்ந்து பேசுவது அபசாரம் (பெரிய தவறு) அது ஆன்மீக ரீதியாக தீயவிளைவுகளை தரும்.

பக்தியுடன் உச்சரித்தால் – பாபம் நீங்கும், மோட்சம் கிடைக்கும். தினமும் நாம் எல்லோரும் 'கோவிந்தா' திருநாமம் சொல்வோம். முக்திக்கான வழியை அடைவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com