
முடி உதிர்தல் பிரச்சனை என்பது இன்று மிகவும் சாதாரணமாகிவிட்டது. பெரும்பாலான மனிதர்கள் முடி உதிர்வினால் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர். இன்றைய காலத்தின் உணவு முறை மற்றும் எந்திர வாழ்க்கை முறை காரணமாக முடி உதிர்தல் அதிகமாகிறது. சுற்றுச்சுழல் மற்றும் காற்று மாசுபாடும் முடி உதிர்விற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த முடி உதிர்வை ஆரோக்கிய கண்ணோட்டத்தில் மட்டுமல்ல; ஜாதக ரீதியில் கூட பார்க்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். ஜாதகத்தில் கிரக நிலைகள் நிலையற்று இருந்தால் முடி உதிர்தல் அல்லது முடி தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துமாம்! இது குறித்து கிடைக்கப்பெறும் தகவல்களை பார்ப்போம்.
ஒவ்வொரு விஷயத்திற்கும் ஜாதகத்தோடு தொடர்பு உள்ளது. ஜாதகத்தின் கிரக நிலைக்கும் ஒருவரின் உடல் நலத்திற்கும் தொடர்பு உள்ளது. அதுபோல ஒருவரின் 'முடி உதிர்தலுக்கும் ஜாதகத்தின் கிரக நிலைக்கும் சம்மந்தம் உண்டு என்றால் ஆச்சரியமாக உள்ளதா?' உங்கள் வாழ்க்கை முறையால் மட்டுமல்ல, உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் நிலையற்றதாக இருந்தால் கூட, நீங்கள் உடல்நலம் மற்றும் முடி தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே ஜாதகத்தில் உள்ள கிரகங்களை நிலைநிறுத்த சரியாக முறைகளை கையாள வேண்டும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவர் ஜாதகத்தில் ராகு மற்றும் புதனின் நிலை மாற்றத்தால், அவருக்கு முடி உதிர்தல் பிரச்சனை தொடங்கும். ராகுவும் புதனும் கட்டத்தில் செல்வாக்கை இழந்தால் அந்த நபரின் மன ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும். ஜாதகத்தில் புதன் வலுவிழந்து காணப்பட்டாலோ, ஜாதக கட்டத்தில் ஆறாம் அல்லது எட்டாம் வீட்டில் அமர்ந்திருந்தாலோ, அந்த நபருக்கு முடி தொடர்பான பிரச்சினைகள் உருவாகும்.
உங்கள் ஜாதகத்தில் புதன் மிகவும் பலவீனமாக இருந்தால் வழுக்கை விழலாம். இது தவிர தனுசு அல்லது விருச்சிக ராசியில் ராகு இடம் பெற்று சூரியனின் பார்வையில் இருந்தால் முடி உதிர்தல் பிரச்சனை அதிகரிக்கும். ஜாதகத்திலோ அல்லது ஆறாம் மற்றும் எட்டாம் வீடுகளிலோ சனி சஞ்சரித்தால் முடி உதிர்தல் அதிகமாகும். ஜாதகத்தில் சூரியன், ராகு, கேது இணைந்து இருந்தாலும் வழுக்கை பிரச்சனை ஏற்படும்.
பரிகாரம்:
ஜாதக ரீதியில் ஒரு விஷயத்தை பார்த்தால், அதில் கிரக நிலைகளை சாதகமாக மாற்ற பரிகாரம் எதும் இருக்கும். முடி உதிர்வதை தடுக்க தினமும் காலையில் சூரியபகவானுக்கு செம்பு பாத்திரத்தில் இருந்து தண்ணீர் வைத்து அர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த அர்ப்பணம் மன அமைதியை கொடுத்து முடி பிரச்சனைகளை குறைக்கிறது. மோதிர விரலில் செம்பு மோதிரத்தை அணிவதன் மூலம், புதன் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்கள் வலுவடைகிறது. ரூபி கல் பதித்த மோதிரத்தை அணிவது முடி உதிர்தல் பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். ராகுவின் பாதகமான பலன்களைக் குறைக்க 'ஓம் ராம் ராகுவே நமஹ' என்ற மந்திரத்தை தினமும் உச்சரிக்கவும். உங்கள் ஜாதகத்தில் ராகுவை வலுப்படுத்தி முடி உதிர்தல் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும்.