மனிதன் கடவுளாக மாறுவானா? ஹராரியின் Sapiens காட்டும் அதிர்ச்சி தரும் உண்மைகள்!

நெருப்பும் பணமும் மாற்றிய மனித இனம் இப்போது அறிவியலால் எங்கு சென்று நிற்கிறது?
மனித இனம் - Sapiens book
மனித இனம் - Sapiens book
ராமன். செல்வராஜ்

கோவில் நகரம் குடத்தையில் வசித்து வரும் இவர் விலங்கியலில் முதுகலை பட்டமும், வெகுஜன தொடர்பு மற்றும் பத்திரிகை துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர். தற்சமயம் EXNORA , 'உலக தமிழர் அறக்கட்டளை' போன்ற அமைப்புகளில் தன் பங்கை ஆற்றி வருகிறார். இவரது இலக்கியத் தொடர்பு என்பது ஒரு கவிதை மூலமாக 'கவிநானூறு' என்கிற இணையதளத்தில் தொடங்கியது. தொடர்ந்து கட்டுரைகளும் வேறுசில தளங்களில் வெளியாகின. செப்டம்பர் -17- 2025 முதல் கல்கி குழுமத்துக்காக சிறுகதைகள், தத்துவங்கள், ஆன்மீக புரிதல்கள் ஆகியவற்றை எழுதி, பகிர்ந்து வருகிறார். இவரது கதை கட்டுரைகளை கல்கி ஆன்லைன் இதழ்களிலும் Motivation, பசுமை/ சுற்றுச்சூழல், மற்றும் கலை கலாச்சாரம், ஆன்மீகம், தத்துவம் ஆகிய பகுதிகளிலும் காணலாம்.

Updated on: 

நாம் ஏதாவது ஒரு பொருளை, ஒரு நபரை, ஒரு இடத்தைக் கண்டு அடையவேண்டி இருக்கும்போது அது சம்பந்தமாக தொடர்ந்து சிந்தனையில் ஈடுபடுகிறோம். இதைத்தான் ஆங்கிலத்தில் cognitive intelligence என்று சொல்கிறார்கள்.

இதன் மூலம் ஏற்படும் நிகழ்வுகள் ஒரு தொடர் இயக்கத்தை நம்மிடையே உண்டு பண்ணி ஒரு செயலாக்கத்தை வடிவமைத்து கொடுக்கிறது.

இப்படியாகத்தான் நமது "அறிவு" பல படிமங்களில் வளர்ந்து நமக்கு இந்த சமுதாயத்தில் பல நிலைகளில் நம்மை நிற்க வைக்கிறது.

இந்த உலக பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு மட்டும் வளர்வதற்கு பெருந்துணையாக இருப்பது 'தொழில் நுட்பம்' தான்.

தொழில்நுட்பக் கருவிகள் இல்லாமல் அவனால் இன்று செயல்படுவது என்பது முற்றிலும் இயலாத காரியம்.

இதைத்தான் யுவல் நோவா ஹராரி இவ்வாறு கூறுகிறார்.

நம்மையெல்லாம் ஒரே இனமாக பிரித்து அவர்களுக்கு Cyborg என்று பெயரிடுகிறார்.

உதாரணத்திற்கு நமது பார்வை மங்கலாகும்போது நாம் கண்ணாடியை பயன்படுத்தக் கற்றுக்கொள்கிறோம்.

அலைபேசி இல்லாமல் நம்மால் நடமாட முடியவில்லை.

இந்தப் போக்கு ஒரு பயோனிக் (தொழில்நுட்பத்தின் மீதான மொத்த சார்பு) வாழ்க்கையை நமக்குக் கொடுத்திருக்கிறது.

இப்படியாக படிப்படியாக நமது செயல்பாடுகள் குறைய குறைய நமது சிந்தனைகளை கனிம பொருட்கள் ஆக மாற்றி அதன் பயனை அனுபவிக்க கற்றுக்கொள்கிறோம்.

இதன் மூலம் நம்மால் ஒரு காரை சுதந்திரமாக எந்திரத்தின் உதவியுடன் இயக்க முடிகிறது.

அறிவு சார்ந்த "சதுரங்கம்" விளையாட்டு இப்போது 'online' மூலம் நமக்கு பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏன் நம்முடைய 'பணத்தை' எங்கு சேமிப்பது என்பது எதில் சேமிப்பது போன்ற அறிவு சார்ந்த விஷயங்களையும் கற்றுக் கொடுத்து நம்மை திகைக்க வைக்கிறது.

இதன் மூலம் நாம் உருவாக்கக்கூடிய ஒரு மனித இனம் என்பது பன்முகத்தன்மை இதிலிருந்து ஒரு தனித்தன்மை மாறிவிட்டது என்கிறார் உலக புகழ்பெற்ற எழுத்தாளர் யுவல் நோவா ஹராரி .அவர் எழுதிய புத்தகம் Sapiens- A Brief History of Humankind.

அவர் மேலும் கூறும்போது கடந்த 500 வருடங்களில் விஞ்ஞான வளர்ச்சி ஒரு பிரளயமாக உருவெடுத்து நம்மை ஆட்கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
நான் யார்? பிரபஞ்சமும் மனிதனின் தேடலும் உணர்த்தும் தத்துவ உண்மைகள்!
மனித இனம் - Sapiens book

அவர் 500 வருட மனித இனத்தின் வளர்ச்சியை இவ்வாறு விளக்குகிறார்...

நெருப்பு நமக்கு சக்தியை அளித்தது.

பணம் நமக்கு நோக்கத்தை அளித்தது.

அறிவியல் நம்மைக் கொடியவர்களாக ஆக்கியுள்ளது...

இது காலப்போக்கில் உண்மையாக நிகழக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

நாம் எப்போதாவது நினைத்திருக்கிறோமா?

நமது சிந்தனையையும் ,உணர்வுகளையும் ஒரு ரோபோட் (Robot) இடம் கொடுத்துவிட்டு அந்த விளையாட்டில் மயங்கி போய்க் கொண்டிருக்கிறோம்.

இனி வரும் காலங்களில், DNA மூலம் நமது மரபணு குறியீடு ஆதார் அட்டைபோல கொடுக்கப்படும்.

அதுதான் நமது CV.

நமக்கு வேலை கொடுக்கும் பெரிய நிறுவனங்கள் நமது ஆற்றலை புரிந்து கொள்ள GC யை கேட்கும். CVயை நிராகரிக்கும்.

மருத்துவர்களும் இனி நோயாளிகளின் நோய்களை துள்ளிதமாக கண்டறிய ரோபோடிக் அறுவை சிகிச்சை நம்பித்தான் இருக்கவேண்டும்.

மனித இனம் - Sapiens book
மனித இனம் - Sapiens book

போகிற போக்கில் இனி காலம் மற்றும் வெளி மறைந்து போய்விடும்.

ஏன் மக்களே தங்களை ஆண்களாகவும், பெண்களாகவும் பிரித்துப் பார்க்க மாட்டார்கள்.

இதற்கெல்லாம் வித்திட்டது Frankenstein prophecy.

ஒரு விஞ்ஞானி ஒரு அதிநவீன மனிதனை உருவாக்க நினைத்தபோது அது ஒரு அதிநவீன "பேயை" உருவாக்கியது.

அந்த "பேய்" மக்களிடம் உணர்வுபூர்வமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் சிந்திக்கவும், செயல் பூர்வமாகவும், சரியாகவும் மாறிவிட்டது.

இப்போது நமது விஞ்ஞானம் நமது உணர்வு மற்றும் உணர்வுகளை ஒன்றாகக் கூட்டி ஒரு பேராற்றல் மிக்க பெருந் தலைவனை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.

அந்த முயற்சியில் மனிதன் வெற்றி பெற்றுவிட்டால் அதுதான் அவனுக்கு பெரும் சவாலாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சோம்பேறிகள் மூலம் zombies உருவாக்கப்படுகின்றனர்.

இனி வாழ்க்கை கொண்டாட்டத்தில் வெட்கம் என்கிற ஒரு சொல்லுக்கு இடம் இருக்காது. எல்லாம் வெட்ட வெளியில் வெளிச்சத்திற்கு வரும்.

அந்த வெளிச்சம் ஒரு நிரந்தர இரட்டை ஏற்படுத்துவதற்கு முன் மனித இனம் புரிந்து கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளம்!! ஏராளம்!!

இனி மதங்கள் இருக்காது! மாறாக மனிதனே கடவுளாக மாறி விடுவான்.

கடவுளுடைய வேலையை மனிதன் எடுத்துக்கொண்டு விட்டான்.

அவனே தன்னுடைய பிறப்பையும் இறப்பையும் தீர்மானிக்க கற்றுக்கொண்டு விட்டான்.

இதைத்தான் வரலாற்று ஆசிரியர் Yuval nova harari -cyborgs என்கிறார்.

இதை இன்னும் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அவருடைய நாவலை வாழ்நாளில் ஒரு முறையாவது நாம் படித்துவிட்டால், அது நமக்கு பல புரிதல்களையும், வழிகளையும் உண்டு பண்ணி கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும் கிடையாது.

இந்த நாவல் இவ்வாறு தொடங்குகிறது...

14 லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பொருள், சக்தி, நேரம், வெளி எல்லாம் சேர்ந்து பிரபஞ்சமாக மாறியது-Big Bang.

சுமார் மூன்று லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன் பொருளும், சக்தியும் ஒன்றிணைந்து அணுக்கள், மூலக்கூறுகள் உருவாகின.

சுமார் நான்கு லட்சம் வருடங்களுக்கு முன் பூமி உருவானது. அது( மூலக்கூறுகள்) நுண் உயிர்களுடன் ஒன்று சேர்ந்து பல உயிர்களை உண்டு பண்ணின.

சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் தோன்றிய இனம்தான் Homo Neanderthelensis.

அது சற்று விரிந்து கால்களையும் கைகளையும் பிரித்து உருவாகி ஹோமோ எரெக்டிலஸ் ஆக மாறியது.

மனித இனம் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப ஐரோப்பாவில், ஆசியாவில், ஆப்பிரிக்காவில் உருவாகி அதுவே பல அடையாளங்களுடன் மதங்களாக மொழிகளாக உருவெடுத்து வந்திருக்கிறது.

எப்போது மனிதன் கையை உபயோகப்படுத்த கற்றுக் கொண்டானோ அப்போதே விஞ்ஞானம் ஆனது வளர்ச்சி அடைய தொடங்கிவிட்டது.

அவனுடைய "அறிவு" அவனை ஆக்கபூர்வத்தில் அதிக ஈடுபாடு செய்யாமல் ,அழிவை நோக்கி பயணிப்பதால் நம் எதிர்காலத்தினுடைய வாழ்க்கை என்பது பெரும் கேள்விக்குறியாக ஆக்கியுள்ளது. இதுதான் வரலாற்று ஆசிரியர்களின் கவலையாகவும் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
Chatbot பயன்பாடு ஆபத்தாக மாறுவது ஏன்? எலான் மஸ்க்கை உலுக்கிய விசித்திர நோய்!
மனித இனம் - Sapiens book