

மனிதன் என்பவன் கற்பனையின் உச்சம்!!
கற்பனை உலகில் வாழ்வதற்குதான் மனிதனை கடவுள் படைத்திருக்கிறான் என்று நான் நம்புகிறேன்.
கடவுள் இருக்கிறாரா? அல்லது அவர் யார்? என்பது என்னுடைய புரிதல் இல்லை .
மாறாக நான் யார்? எனக்கு என்ன இந்த பிரபஞ்சத்தில் விளையாட அல்லது பங்குபெற அல்லது பணிபுரிய இருக்கிறது.
வாழ்க்கை தத்துவம்:
மேலும் இந்த உலகத்திற்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என்பதை என்னால் உணரமுடிகிறது. அதற்குத்தான் அனுபவங்கள் மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றை கொண்டு என் வாழ்க்கை பயணத்தில் என்னைப் பற்றி புரிந்துகொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்கிறேன்.
நான் முதலில் மனிதன்தானா ?
இப்படிச் சொன்னால் எல்லாருக்கும் புரிய வாய்ப்பு இருக்கிறது !
அதாவது எல்லோருக்கும் வயது ஆகிறது.
ஆனால் இளமையை தடுக்க முடியவில்லை.
குழந்தைகளை கொஞ்சதான் ஆசை .
ஆனால் அவைகள் எல்லா காலத்திலும் குழந்தைகளாக இருக்க வாய்ப்பு இல்லையே!
"வளர்ச்சி" என்பது இந்த பிரபஞ்சத்தின் "விதியாக" இருக்கும்போது "மாற்றம்" என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
அதுவும் ஒரு 'கால' அளவில் 'கால' இடைவெளியில் நடக்க வேண்டி இருக்கிறதுதானே?
அந்த காலத்தை "பற்றிக்" கொள்ள, கொள்ள கவலை வருகிறது. அதுதான் நமக்கு "துக்கத்தை" கொடுக்கிறது .
அதற்கு பல காரணங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகிறோம். அது வயதிற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கிறது.
இறப்பில்,
உறவுகளின் பிணக்கில்,
சமுதாய ஏற்றத் தாழ்வுகளில்,
பொருளாதார காரணிகளில்,
மதம் சார்ந்த விழுமியங்களில்....
"அறம் சார்ந்த " வாழ்வு நம்முடைய குணங்களை பற்றி நமக்கு புரிய வைக்கும் . மேலும் பல புரிதல்கள்
செல்வம் சார்ந்து;
கல்வி சார்ந்து;
தொழில்முறை அதிகாரம் சார்ந்து;
அரசியல் சார்ந்து;
மதம் சார்ந்து;
பல கூறுகளாக வடிவம் பெரும்போது அவைகள் நம்மிடைய பல பிரிவுகளை உண்டாக்கி, அதற்கான காரணம்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதுவே உறவுகளிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக குடும்பத்தில் இருந்து, நாம் வாழும் சமுதாயத்தில் இருந்து, வாழும் நாட்டிலிருந்து, நம்மை பிரித்து நம்மை ஒரு நாடோடி சமுதாயமாக மாற்றி இருக்கிறது.
இங்கே நான் "கடவுள்" என்கிற வார்த்தையை ஒரு "சக்தி" என்கிற பொருள் புரிய பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். இப்படி ஒரு செயலை செய்ய "கடவுள்" மனிதனைத்தூண்டி இருக்கிறாரா? என்ன நமக்கான அறத்தை நாம் சரியாகப் பின்பற்றாமல் "வளர்ச்சி" என்கிற பாணியில் இப்போது ஒவ்வொரு குடும்பத்திலும் அரசியல் என்பது ஒரு கதைகளாக (narratives) நம் எண்ணங்களிலும், செயல்களிலும் படிந்த படிமங்களால் நாம் "கேள்வி" கேட்பதையே மறந்து ஆறாம் அறிவை அறவே மறந்துவிட்டோம்.
"கடவுள்" ஒன்றும் நம்மிடம் குழப்பத்தை உண்டு பண்ணி நம்மை ஆள முற்படவில்லை.
எப்பொழுது நமக்கு பிறப்பே தெரியாதோ அப்படியாகவே நம் இறப்பும் இருப்பதால் "நாமே கடவுள்" என்கிற ஒரு புரிதலை நமக்கு சொல்லாமல் சொல்லி சென்றவன்தான் "கடவுள்".
"மனிதன்" என்பவன் வாழ பல நூற்றாண்டுகளாக பல இனங்களை அழித்துவிட்டான். எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருப்பதாக சொல்லிக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.
நம்மால் அழிக்கப்பட்ட உயிரினங்களால் இந்த உலகத்தில் "உணவு சங்கிலி" ஆனது அறுபட்டு இருக்கிறது.
அப்படியாக உருவானதுதான்
Global warming
Black hole
குறிப்பாக நான் இவ்வாறு கூறுகிறேன்.
கடவுள் அழித்தால் அதற்கு ஒரு காரணம் இருக்கும்.
உதாரணம் காட்டுத்தீ,
சுனாமி,
பூகம்பம்.
மனிதன் அழித்தால் அது எந்த விதிகளிலும் அளவிட முடியாது.
அவ்வாறாக வந்ததுதான் corona virus .
கடவுளுடைய அடுத்த வேலை இறப்பு மற்றும் பிறப்பு...
இறந்தவர்கள் எல்லாம் இருந்துவிட்டால் இந்த பூமியின் இருப்பதற்கு இடம் எது...
உண்மைதான்...
ஒருவன் ஆயிரம் வருடம் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
"சமுதாயக் கேடு" என்பதைத்தாண்டி அது அவனுக்கே ஒரு "கேடு".
வாழ்க்கையே என்பதே செயல் படுத்தானே!
செயல் இழக்கும்போது இருப்பதும் இறப்பதற்கு சமமே ....
இங்கே Frank kafka எழுதிய metamorphosis ஒரு சிறந்த உதாரணம்.
நாம் எல்லாம் ஏதோ ஒரு காலத்தில் "கரப்பான்பூச்சி" போல இந்த சமுதாயத்தால் புறக்கணிக்கப் படுவோம்.
இது நிதர்சனமான உண்மை.
இந்த சமுதாய குற்றத்திற்கு நாமே பொறுப்பு.
மரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது ஒரு காலத்திற்குப் பிறகு பட்டுப் போய் பாழாய்போன தன்னை தான் வளர்த்த மண்ணிற்கே அர்ப்பணிக்கிறது .
"அது" வளரும்போது தன்னகத்தே மலர்களையும், வாசனைகளையும் "தூவி" தன்னுடைய "பரிமாண வளர்ச்சியை" இந்த உலகத்திற்கு அளிக்கிறது.
மேலும் அது இந்த உலகத்தில் இருந்து இந்த பூமியின் வளங்களையும் சூறையாட விரும்பவில்லை.
எப்பொழுது அதனுடைய உறுஞ்சும் சக்தி குறைகிறதோ, அப்போது அது மக்கி மண்ணாக போய்விடுகிறது.
இந்த இயற்கையை புரிந்துகொண்டால் வாழ்க்கையை எளிதாக புரிந்துகொள்ளலாம்.
இது கற்பனை அல்ல உண்மை.
இந்த உலகத்தில் எல்லா உயிர்களும் மரிக்கத் தான் வேண்டும்.
மரித்தலும் மாண்பு தான்.
நான் இந்த உலகத்தில் ஒரு கருவியாக படைக்கப்பட்டு இருக்கிறேன்.
என் படைப்பை நான் புரிந்துகொண்டேன். இந்த பிரபஞ்சத்திற்கு ஒரு கருவியாக செயல்பட என்னை நானே தயார் பண்ணிக் கொள்வேன். அப்போது என்னுடைய வாழ்க்கையை அர்த்தம் அடைகிறது.
எனக்கு இந்த பிரபஞ்சம் பல சந்தர்ப்பங்களை வாரி வழங்கிக்கொண்டு சென்றிருக்கிறது.
அவற்றை மதித்து ,என் உணர்வுகளை நான் உள்ளடக்கி, எனக்கான வேலையை நான் செய்யும்போது ,என்னை முழுமையாக ஏற்றுக்கொண்டு என்னால் இந்த பிரபஞ்சத்தில் இயங்க முடியும்.
அப்போது நான் இந்த உலகில் பயணிக்கும் தேசாந்திரி போல வாழ்ந்து அதன் சுவையை உணரமுடியும்.
அப்போது நான் கடலாக மாறுவேன்;
கடலில் மேல் பறவையாக பறப்பேன் ; மலையாக மாறுவேன்; மலைகள் உடைய குகைக்குள் வௌவால் போன்று ஒட்டிக்கொள்வேன். உறவாடுவேன்.
அப்போது இரவும் பகலும் ,
மாறி மாறி வருவது இன்பமும் துன்பமும், மாற்றக்கூடிய ஒரு விந்தையை என்பதை அறிவேன்.
இவை மட்டும் இருந்தால் இந்த பிரபஞ்சத்தில் நாம் மகிழ்ச்சியாக வாழலாம். அப்போது என்னுடைய எதிர்பார்ப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும்.
என் கடமைகளை நான் கடந்து செல்ல மாட்டேன்.
அறம் என்பது ஆற்றாமை அல்ல; மாறாக அது ஆற்றுவது ஆழ உழுவது போன்றது.
மனம் செம்மையானால் மார்க்கம் என்பது நம்மிடமே இருக்கிறது. அப்போது நான் பிறர் உரிமைகளுக்காக போராடுவேன்.
தோல்விகளும் வெற்றிகளும் என்னை மயக்கத்திற்கும், மாயைக்கும் இட்டு செல்லாது.
இந்த பிரபஞ்சத்தில் எப்போதுமே இருப்பதற்கு வழிவகை செய்யும்.
எழுத்தும் அவனே
இயக்கமும் அவனே
செயலும் அவனை
செய்பவனும் அவனே!