ஜூன் மாத ஆன்மீக காலண்டர்: விரத நாட்கள், முகூர்த்த தேதிகள்!

ஆண்டின் ஆறாவது மாதமான ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வரும் பண்டிகைகள் மற்றும் விரதங்கள் உள்ளிட்ட முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இப்பகுதியில் பார்க்கலாம்.
June Spiritual Events
June Spiritual EventsAI Image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

ஜூன் 1 : தேய்பிறை பிரதமை, அமிர்தயோகம், பழனி ஸ்ரீஆண்டவர் தங்க குதிரையில் புறப்பாடு.

ஜூன் 2 : தேய்பிறை துவிதியை, சித்தயோகம், சோழவந்தான் ஜனகமாரியம்மன் ரதோற்சவம்.

ஜூன் 3 : தேய்பிறை திரிதியை, அமிர்தயோகம், காஞ்சி வரதராஜபெருமாள் உபயநாச்சியார்களுடன் ரதோத்ஸவம்.

ஜூன் 4 : தேய்பிறை சதுர்த்தி, சுபமுகூர்த்த நாள், சங்கடஹர சதுர்த்தி, வாஸ்து செய்ய உகந்த நாள் (காலை 9.58 மணி முதல் 10.34 மணி வரை மனை வாஸ்து செய்ய நன்று), காஞ்சிபுரம வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு.

ஜூன் 5 : தேய்பிறை பஞ்சமி, சித்தயோகம், திருவோண விரதம், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆளும் பல்லக்கில் தீர்த்தவாரி.

ஜூன் 6 : தேய்பிறை சஷ்டி, சஷ்டி விரதம், அமிர்தயோகம், திருவள்ளூர் வீரராகவ பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

ஜூன் 7 : தேய்பிறை சப்தமி, சுபமுகூர்த்த நாள், இன்று சமயபுரம் மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், காஞ்சி காமாட்சி தலங்களுக்கு சென்று தரிசித்து வருவது நன்று.

இதையும் படியுங்கள்:
ஏப்ரல் மாத ஆன்மிக காலண்டர்: முக்கிய விசேஷங்கள் மற்றும் முகூர்த்த நாட்கள்!
June Spiritual Events

ஜூன் 8 : தேய்பிறை அஷ்டமி, சித்தயோகம், அஷ்டமி, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.

ஜூன் 9 : தேய்பிறை நவமி, சித்தயோகம், சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.

ஜூன் 10 : தேய்பிறை தசமி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.

ஜூன் 11 : தேய்பிறை ஏகாதசி, சர்வ ஏகாதசி, சித்தயோகம், சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி பெருமாள் புஷ்பாங்கி சேவை.

ஜூன் 12 : தேய்பிறை துவாதசி, பிரதோஷம், சித்தயோகம், இன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்வது நன்று.

ஜூன் 13 : தேய்பிறை திரயோதசி, கார்த்திகை விரதம், மாத சிவராத்திரி, அமிர்தயோகம், சிதம்பரம் சிவபெருமான் விழா தொடக்கம், சனி பகவானுக்கு ஆராதனை செய்ய நன்று.

ஜூன் 14 : தேய்பிறை சதுர்த்தசி, சித்தயோகம், சர்வ அமாவாசை, சமயபுரம், காஞ்சிபுரம், இருக்கன்குடி சென்று மாரியம்மன் தரிசனம் செய்வது நன்று.

ஜூன் 15 : அமாவாசை, சித்தயோகம், கரிநாள், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.

ஜூன் 16 : வளர்பிறை பிரதமை, சந்திர தரிசனம் நன்று, சித்தயோகம்.

ஜூன் 17 : வளர்பிறை திரிதியை, சுபமுகூர்த்தநாள், ரம்பாத் திரிதியை, மாதவி விரதம், சித்தயோகம்.

ஜூன் 18 : வளர்பிறை சதுர்த்தி, சுபமுகூர்த்த நாள், சதுர்த்தி விரதம், சித்தயோகம், கதளீ கௌரீ விரதம்.

ஜூன் 19 : வளர்பிறை பஞ்சமி, சிதம்பரம் சிவருமான் திருவீதி உலா, சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

ஜூன் 20 : வளர்பிறை சஷ்டி, சஷ்டி விரதம், கரிநாள், சித்தயோகம், ஆரண்ய கௌரீ விரதம்,

ஜூன் 21 : வளர்பிறை சப்தமி, ஆனி உத்திர அபிஷேகம், அமிர்தயோகம், சிதம்பரம் சிவபெருமான் ரதோத்ஸவம்.

ஜூன் 22 : வளர்பிறை அஷ்டமி, ஆனி உத்திர தரிசனம், ஸ்ரீநடராஜர் அபிஷேகம், சித்தயோகம், மதுரை மீனாட்சியம்மன் ஊஞ்சலில் காட்சியருளல், கீழ்திருப்பதி திருமஞ்சன சேவை.

ஜூன் 23 : வளர்பிறை நவமி, சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.

ஜூன் 24 : வளர்பிறை தசமி, சுபமுகூர்த்த நாள், பாபஹரதசமி, சித்தயோகம், ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டர்பிரான் ரதோத்ஸவம்.

ஜூன் 25 : வளர்பிறை ஏகாதசி, சுபமுகூர்த்த நாள், சித்தயோகம், மதுரை கூடலழகர், திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் புறப்பாடு.

ஜூன் 26 : வளர்பிறை துவாதசி, மொஹரம் பண்டிகை, திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், மதுரை மீனாட்சியம்மன் ஊஞ்சலில் காட்சி, சித்தயோகம்.

ஜூன் 27 : வளர்பிறை திரயோதசி, பிரதோஷம், சித்தயோகம்.

ஜூன் 28 : வளர்பிறை சதுர்த்தசி, அமிர்தயோகம், நெல்லையப்பர் கோவில் ரதோத்ஸவம்.

ஜூன் 29 : பௌர்ணமி, சித்தயோகம், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் முப்பழ பூஜை, காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா.

இதையும் படியுங்கள்:
மே மாத ஆன்மீக காலண்டர்: விரத நாட்கள், முகூர்த்த தேதிகள் மற்றும் கோவில் உற்சவங்கள்!
June Spiritual Events

ஜூன் 30 : சித்தயோகம், சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல், திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

logo
Kalki Online
kalkionline.com