

மே மாதம் சித்திரை மற்றும் வைகாசி மாதங்கள் இணைந்த ஒரு புனிதமான மாதமாகும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது முதல் வைகாசி விசாகம் வரை பல முக்கிய நிகழ்வுகள் இம்மாதத்தில் இடம்பெறுகின்றன.
மே 1-ம் தேதி - கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தரும் வைபவம், சித்ரா பவுர்ணமி, புத்த பூர்ணிமா, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தங்கத்தேரோட்டம், திருப்பதி கீழப்பட்டலா கோனேட்டிராயசாமி கோவிலில் தேரோட்டம், சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் இந்திர விமான வீதிஉலா, திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் பத்ர புஷ்ப யாகம், கௌரீ விரதம்.
மே 2-ம் தேதி - தேய்பிறை பிரதமை, ராமராயர் மண்டபத்தில் இரவு முழுவதும் தசாவதாரக் காட்சி, திருப்பதி கீழப்பட்டலா கோனேட்டிராயசாமிக்கு சக்கர ஸ்நானம், சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் புஷ்பயாகம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு. சித்தயோகம், கருட தரிசனம் நன்று.
மே 3-ம் தேதி - தேய்பிறை துவிதியை, திருப்பதி கீழப்பட்டலா கோனேட்டிராயசாமிக்கு புஷ்ய யாகம், சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம், இருக்கன்குடி மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், ஜனக மாரியம்மன் கோவில்களில் சென்று தரிசித்து வருவது நன்று.
மே 4-ந் தேதி - தேய்பிறை திரிதியை, அக்னி நட்சத்திரம் ஆரம்பம், புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் திருமாலிருஞ்சோலை புறப்பாடு,
மே 5-ம் தேதி - தேய்பிறை சதுர்த்தி, அமிர்த யோகம், சங்கடஹர சதுர்த்தி, இன்று விநாயக பெருமானை வழிபட நன்று, கள்ளழகர் திருமாலிருஞ்சோலை வந்து சேருதல்.
மே 6-ம் தேதி - தேய்பிறை சதுர்த்தி, அமிர்த யோகம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் விழா தொடக்கம்.
மே 7-ம் தேதி - தேய்பிறை பஞ்சமி, தேய்பிறை சஷ்டி விரதம், சுவாமிமலை முருகபெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், சென்ன கேசவபெருமாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் தலங்களில் ரதோத்ஸவம்.
மே 8-ம் தேதி - தேய்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த நாள்.
மே 9-ம் தேதி - தேய்பிறை சப்தமி, திருவோண விரதம், நடராஜர் அபிஷேகம், சித்தயோகம், திருநள்ளாறு சனிபகவானுக்கு அபிஷேகம், ஆராதனை செய்வது நன்று.
மே 10-ம் தேதி - தேய்பிறை அஷ்டமி, சித்தயோகம், சென்ன கேசவ பெருமாள் புஷ்ப பல்லக்கில் புறப்பாடு, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வீதியுலா.
மே 11-ம் தேதி - திருநாவுக்கரசர் குருபூஜை, தேய்பிறை நவமி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
மே 12-ம் தேதி - தேய்பிறை தசமி, அமிர்த யோகம், தாத்தாத்திரய ஜெயந்தி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பவனி வரும் காட்சி.
மே 13-ம் தேதி - தேய்பிறை ஏகாதசி, திருநள்ளாறு கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம், சுபமுகூர்த்த நாள், சர்வ ஏகாதசி.
மே 14-ம் தேதி - தேய்பிறை துவாதசி, சுபமுகூர்த்தநாள், பிரதோஷம், அமிர்த யோகம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ரதோத்ஸவம்.
மே 15-ம் தேதி - தேய்பிறை திரயோதசி, மாத சிவராத்திரி.
மே 16-ம் தேதி - அமிர்த யோகம், சர்வ அமாவாசை, கார்த்திகை விரதம், இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், முருகனை வழிபடவும் உகந்த நாள்.
மே 17-ம் தேதி - வளர்பிறை பிரதமை, அமிர்த யோகம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.
மே 18-ம் தேதி - வளர்பிறை துவிதியை, சுபமுகூர்த்த நாள், சந்திர தரிசனம், சோழவந்தான் ஜனகமாரியம்மன் விழா தொடக்கம்.
மே 19-ம் தேதி - வளர்பிறை திரிதியை, இன்று முருகப் பெருமானை வழிபட உகந்த நாள்.
மே 20-ம் தேதி - வளர்பிறை சதுர்த்தி, சதுர்த்தி விரதம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் புஷ்ப பல்லக்கில் பவனி.
மே 21-ம் தேதி - வளர்பிறை பஞ்சமி, கரிநாள்.
மே 22-ம் தேதி - வளர்பிறை சஷ்டி, சஷ்டி விரதம், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி விழா தொடக்கம்.
மே 23-ம் தேதி - வளர்பிறை சப்தமி, அமிர்த யோகம், சோழவந்தான் ஜனகமாரியம்மன் விருஷப சேவை.
மே 24-ம் தேதி - வளர்பிறை அஷ்டமி, சித்தயோகம், ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் தங்கப்புலி வாகன புறப்பாடு.
மே 25-ம் தேதி - வளர்பிறை நவமி, சித்தயோகம், திருப்பத்தூர் திருத்தணிநாதர் திருக்கல்யாணம்.
மே 26-ம் தேதி - வளர்பிறை தசமி, சித்தயோகம், சோழவந்தான் ஜனகமாரியம்மன் பாற்குடக காட்சி, பழனி ஆண்டவர் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.
மே 27-ம் தேதி - வளர்பிறை ஏகாதசி, திருநள்ளாறு கோவில் திருத்தேரோட்டம், அரபா மொக்கவுக்கு ஹஜ் யாத்திரை செய்த நாள்.
மே 28-ம் தேதி - வளர்பிறை துவாதசி, அமிர்தயோகம், பக்ரீத் பண்டிகை, சுபமுகூர்த்த நாள், அக்னி நட்சத்திரம் முடிவு.
மே 29-ம் தேதி - வளர்பிறை திரியோதசி, சுபமுகூர்த்த நாள், நாட்டரசன் கோட்டை கண்ணுடையநாயகி வெள்ளி ரதத்தில் பவனி.
மே 30-ம் தேதி - வளர்பிறை சதுர்த்தசி, வைகாசி விசாகம், கரிநாள், காஞ்சி வரதராஜ பெருமாள் கருட வாகன பவனி.
மே 31-ம் தேதி - பௌர்ணமி, கரிநாள், திருத்துவ ஞாயிறு, காஞ்சி குமரக்கோட்டம் முருகப்பெருமாள் திருக்கல்யாண வைபவம்.