

சிவபெருமானால் “அம்மையே" என்று அழைக்கப்பட்ட அறுபத்தி மூன்று நாயன்மாா்களில், முக்கியமானவரான காரைக்கால் அம்மையாா் சிவன் பாதத்தில் ஐக்கியம் ஆனதே அம்மையாாின் குருபூஜை ஆகும்.
இந்த குரு பூஜையானது வருடாவருடம் பங்குனி சுவாதி நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். அதேபோல மாங்கனித்திருவிழாவும் காரைக்காலில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இளமைப்பருவத்திலேயே சிவபெருமான் மீது கொண்ட தீராத பக்தியால் திருவாலங்காட்டில் சிவதாண்டவத்தை காலடியில் பாா்த்த காரைக்கால் அம்மையாா் அங்கேயே ஐக்கியமானதாக புராணங்கள் கூறுகின்றன. இறைவா மீண்டும் பிறவாமை வேண்டும் என பாடியுள்ளாா்.
வளம் கொழிக்கும் சோழவளநாட்டின் பகுதியான காரைக்காலில் அறநெறி தவறாத பெருவணிகர் தனதத்தனாா் என்பவரின் புதல்வியாய் பிறந்து புனிதவதி எனும் பெயர்கொண்டவர்தான் பின்னாளில் காரைக்கால் அம்மையாா் ஆனாா்.
பிள்ளைப்பிராயத்திலேயே சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டு, அவரையே அனுதினமும் வழிபட்டு வந்தாா்,
மங்கைப்பருவத்தில் திருமணம் நடத்த முடிவு செய்து நாகை வணிகர் பரமதத்தன் என்பவரை திருமணம் முடித்த பெற்றோா் மகளை பிாிய மனம் இல்லாது காரைக்காலில் தனியாக இல்லத்தில் தங்கவைத்தனா்.
காரைக்காலில் வணிகம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் வேளையில் பரமதத்தனின் சிநேகிதர் இரு மாங்கனிகளை கொடுக்க, அதை தனி ஆள் வாயிலாக புனிதவதியிடம் கொடுக்கச் சொல்லி பழத்தை அனுப்பினாா்.
நாளுக்கு நாள் சிவன்மீது அதிக பக்தி கொண்டு அவரையே வணங்கிவரும் வேளையில் வீட்டுவாசலில் தாங்கமுடியா பசியோடு சிவனடியாா் வந்து உணவு கேட்டதைத் தொடர்ந்து அவருக்கு உணவளிக்கும் நிலையில் கணவன் கொடுத்தனுப்பிய இரண்டு மாங்கனிகளில் ஒரு கனியை அடியாா்க்கு பறிமாறுகிறாள்.
பின்னர் கணவன் வந்து மதியம் சாப்பிட அமர்ந்த நிலையில் உணவோடு மீதமிருக்கும் ஒரு கனியை நறுக்கி அவருக்கு பறிமாற இன்னெரு பழத்தையும் அறிந்துவா என கனவன் கூற சமையல் அறைக்கு சென்று சிவனை மனமுருக வேண்டி நடந்ததை சொல்லி உள்ளம் உருகிட இறைவன் அனுப்பிய பழம் வந்து புனிதவதி கையில் வந்து சோ்ந்து விழுந்தது.
அதை சாப்பிட்ட பரமதத்தன் இது என்ன தேவர்கள் அருந்திய அமிா்தம்போல உள்ளதே என சொன்னதும், நடந்ததை மறைக்க விரும்பாத புனிதவதியோ உண்மையைக்கூற நம்பாத கணவன் அப்படி என்றால் சிவனிடம் வேறு ஒரு மாங்கனியைக்கேள் என சொல்ல புனிதவதியோ மீண்டும் வேண்டியவுடன் கையில் ஒரு பழம் வந்து சோ்ந்தவுடன் பரமதத்தன் கையில் அந்த பழத்தை கொடுத்தாள்.
உடனே பழம் கையை விட்டு மாயமானது அதைக்கண்டு வியப்படைந்த கணவன் புனிதவதின் காலில் விழுந்து நீ மனிதப்பிறவியே இல்லை தெய்வப்பிறவி எனக்கூறி நீ போற்றுதலுக்குாியவள், இனி உன்னோடு வாழ எனக்கு தகுதியில்லை நான் வெறும் மானுடன் நீ தெய்வப்பிறவி என சொல்லி மனைவியைவிட்டு விலகிவிடுகிறான்.
புனிதவதி மனம் கலங்குகிறாள். பின்னர் கணவனோ கடல் கடந்து வாணிபம் மேற்கொள்ளப் போய்விடுகிறாா். மேலும் வாணிபம் முடித்து காரைக்கால் வர மனமில்லாது தூரதேசம் போய் ஒரு பெண்ணை மனந்து அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு புனிதவதி என பெயர் சூட்டி வாழ்ந்து வருகிறாா்.
கணவனின் பிாிவால் மனம் வருந்திய புனிதவதி தகப்பனாா் உதவியுடன் கணவரைத்தேடி பாண்டிநாடு போகிறாா்.
மனைவி வருவது தொிந்த பரமதத்தன் அவனது மனைவி குழந்தைகளுடன் வந்து அவரது காலில் விழுந்து நீ ஒரு தெய்வப் பிறவி என கூறுகிறாா்.
உடனே காரைக்கால் அம்மையான புனிதவதி என் கணவருக்காக நான் அழகுடன் வனப்புடன் வாழ்ந்தேன். எனவே எனக்கு இந்த அழகிய உருவம் வேண்டாம் என்னை பேய் அல்லது பிசாசாக மாற்றுங்கள் என சிவபெருமானிடம் வேண்டுகிறாள்.
அதேபோல உருமாறிய காரைக்கால் அம்மையாா் சிவனை தரிசிக்க கைலாயத்திற்கு தலையால் நடந்து செல்கிறாா்.
அதனைப்பாாத்தவுடன் சிவபெருமான் அம்மையே என அழைத்து உன் பக்திக்கு அளவேது என சொல்லி உனக்கு என்ன வரம் வேண்டுமென கேட்க, நான் உன் ஆனந்த தாண்டவத்தை நின் காலடியில் அமர்ந்து பாா்க்க வேண்டும் எனக்கூற திருவாலங்காட்டிற்கு வரச்சொல்கிறாா்.
அதன்படி திருவாலங்காட்டிற்கும் தலையால் நடந்து போய் ஆனந்த தாண்டவத்தை பாா்த்த பின்னர் சிவபெருமான் காலடியிலேயே ஐக்கிமானதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
ஆக பங்குனி மாதம்சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் (04.04.2026) சிவாலயங்களில் விஷேச பூஜைகள் நடைபறுகின்றன.
நாமும் கோவிலில் நடக்கும் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டு இறைவனை மனதார வேண்டுவோமாக!