

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மையத்தில் அமைந்துள்ளது இந்த கோவில். மூலவர் பூவ நாதர்.
அம்பாள் செண்பகவல்லி அம்மன்.
தல விருட்சம் களா மரம்.
தீர்த்தம் அகஸ்தியர் தீர்த்தம்.
சுமார் 1000 முதல் 2000 ஆண்டுகள் வரை பழமையான கோவிலாக கருதப்படுகிறது. இங்குள்ள அம்பாளை வேண்டிக்கொண்டால் தீராத பிணிகள் எல்லாம் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை
திருமண வாழ்க்கை அமைய குழந்தைபே கிடைக்க மற்றும் வியாபாரம் செழிக்க இந்த கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகிறார்கள். ஈசன் திருமணத்தின்போது வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயர்ந்து காணப்பட்டது. இதனை சமன் செய்ய இறைவன் அகஸ்தியரை அனுப்பி வைத்தார். அகஸ்தியர் தென்புறத்தில் உள்ள பொதிகை பகுதிக்கு செல்லும் வழியில் களா மரங்கள் நிரம்பிய இந்த இடத்திற்கு வந்தார்.
வரும் வழியில் எதிர்பட்ட அரக்கர்கள்
வாதாபி விலவனன் ஆகியோரை வதம் செய்தது மூலம் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெற்றார் இந்த இடத்தில் பொன்மலை முனிவர்கள் வேண்டுகோளுக்கிணங்க ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்திவிட்டு பொதிகை மலை சென்றார் அகஸ்தியர். அகஸ்தியர் பொதிகை மலை சென்ற காரணத்தினால் உலகம் சமநிலை ஆனது.
வாமனன் என்பவர் நந்தி தேவரின் சாபத்தால் செண்பக மன்னனாக பிறந்தார். இறைவன் உத்தரவுப்படி செண்பக மன்னன் இத்திருத்தலத்தில் கோவில் அமைத்து சாபம் நீங்க பெற்றதாக வரலாறு. எனவே செண்பக மன்னன் கட்டிய கோவில் என்பதால் இங்கு உள்ள அம்மனுக்கு செண்பகவல்லி என்று பெயர் மூலவருக்கு பூவநாதர் என்ற பெயர்.
இந்த கோவிலில் விசேஷம் என்னவென்றால் ஏழு அடி உயரத்தில் இருக்கும் அம்பாள் தினசரி உட்கார்ந்து நிலையில் அலங்காரம் செய்யப்படுவது மிகவும் சிறப்பானதாகும்.
மதுரை மீனாட்சி அம்மன் போல் இங்கு உள்ள செண்பகவல்லி அம்மனும் மிகவும் பேரும் புகழும் பெற்று சிறப்பாக கருதப்படுகிறார்.
கோவிலின் நுழைவாயிலில் பிரம்மாண்டமான துவாரகா பாலகர்கள் உள்ளனர்.
வேறு எங்கும் காணமுடியாதபடி இந்த கோவிலில் மட்டும் அம்பாள் நின்ற கோலத்தில் இருந்தாலும் அலங்காரம் உட்கார்ந்த நிலையில் செய்யப்படுகிறது. இது ஒரு சிறப்பான அம்சமாகும்.
ராமபிரான் சிவ வழிபாடு செய்த பெருமைமிக்க கோவிலாகும்.
சதுங்கன் பதுமன் என்ற பாம்பு தலைவர்கள் இறைவனை பூக்களால் வழிபட்டதால் இங்குள்ள இறைவன் பூவ நாதர் என அழைக்கப்படுகிறார்.
வைகாசி உற்சவம் பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும் நவராத்திரி பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். இங்கு பங்குனி திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெறும். நிறைவு நாளில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
இவை தவிர அம்மாவாசை பௌர்ணமி பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் ஆங்கில வருட பிறப்பு பொங்கல் தீபாவளி போன்ற நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இக்கோவிலில் 32 சிறிய பலிபீடங்கள் உள்ளது. தீராத பிணிகள் தீரும் என்பது நம்பிக்கை. கோவில்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அகத்தியர் தோற்றுவித்த காரணத்தால் இங்குஉள்ள தீர்த்தம்.
அகத்தியர் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலை பொருத்தவரை அம்மனுக்குதான் முதல் மரியாதை. இங்கு வரும் பக்தர்கள் முதலில் அம்மனை தரிசித்து விட்டு பின்னர்தான் சுவாமியை தரிசிக்க சொல்வார்கள்.
அம்பாளுக்கும் சிவனுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.
இந்த ஊரில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு பெரும்பாலும் செண்பகவல்லி என பெயர் இருக்கும்.
ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் கோவில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
தினமும் காலை 6:00 மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் எட்டு முப்பது மணி வரை நடை திறந்து இருக்கும்.
ஆன்மீக நம்பிக்கைகளின் பின்னணியில் உள்ள அறிவியல் மற்றும் வரலாற்று உண்மைகளை அறிந்துகொள்வதுடன், நமது பாரம்பரிய வழிபாட்டு முறைகளின் சிறப்புகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.